Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் ஜனவரியில் இந்த 5 ராசிக்காரங்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
புதனின் ராசி மாற்றத்தால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. ஏனெனில் 2023 ஜனவரியில் புதனின் ராசி மாற்றத்தால் மிகவும் மங்களகரமான யோகமான பத்ர ராஜயோகம் உருவாகிறது.
Bhadra Rajyog In New Year 2023: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனின் ராசி மாற்றத்தால் 2023-ல் பல ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல காலம் தொடங்கப் போகிறது. சில ராசிக்காரர்களுக்கு இந்த புதனின் ராசி மாற்றத்தால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. ஏனெனில் 2023 ஜனவரியில் புதனின் ராசி மாற்றத்தால் மிகவும் மங்களகரமான யோகமான பத்ர ராஜயோகம் உருவாகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2022 டிசம்பர் 31 ஆம் தேதி புதன் வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். அதன் பின் 2023 ஜனவரி 18 ஆம் தேதி தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். பின்பு 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். புதனின் ராசி மாற்றத்தால் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பத்ர ராஜயோகம் உருவாகிறது.

பத்ர ராஜயோகம்
பத்ர ராஜயோகம் என்பது புதனல் உருவாக்கப்படும் ஒரு வகையான பஞ்ச மகாபுருஷ ராஜயோகமாகும். இந்த ராஜயோகத்தில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பர் மற்றும் அனைத்தையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பர். பத்ர ராஜயோகம் ஒரு வகையான பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றாகும். மேலும் இது மிகவும் மங்களகரமான மற்றும் அதிர்ஷ்டமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் ஒருவரின் திறன்கள் மேம்படுவதோடு, செல்வம், கௌரவம் மற்றும் மரியாதை ஆகியவை அதிகரிக்கும்.
இப்போது புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பத்ர ராஜயோகம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த யோக காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், அனைத்து விஷயங்களிலும் மற்றும் வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். கல்வி மற்றும் தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும். சிலர் வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

மிதுனம்
பத்ர ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். திருமணமானவர்கள் இக்காலத்தில் தங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக ருக்கும் மற்றும் திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்க நல்ல பண பலன்கள் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோக காலம் அருமையாக இருக்கும். திடீரென்று நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள் மற்றும் சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். குடும்ப சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும். நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்கள் அதிர்ஷ்டத்தின் உதவியால் வேலையில் வெற்றி பெறுவார்கள்.

தனுசு
பத்ர ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களின் தாமதமான வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படு. வியாபார விஷயங்களுக்காக பயணம் செய்ய வேண்டியிருக்கும். இந்த பயணத்தால் நல்ல பண பலன்கள் கிடைக்கலாம். இக்காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் இந்த யோக காலத்தில் நல்ல பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த பத்ர ராஜயோக காலத்தில் பல விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வணிகர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு இது சிறந்த காலமாக இருக்கும். இந்த யோக காலத்தில் பல வேலை வாய்ப்புக்களும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகள் பெரிய லாபத்தை ஈட்டுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications