Just In
- 11 hrs ago
வார ராசிபலன் (29.05.2022-04.06.2022) - இந்த வாரம் வியாபாரிகள் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
- 12 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்...
- 22 hrs ago
மட்டன் சுக்கா
- 22 hrs ago
இந்த சைவ உணவுகளால் உங்கள் ஆயுள் குறையும் ஆபத்து அதிகரிக்கிறதாம்... ஜாக்கிரதையா சாப்பிடுங்க...!
Don't Miss
- News
கம்பீரக் கலைஞர் எங்கள் கருணாநிதி! நாகூர் ஹனிபாவின் பாடலை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
- Movies
வெளிநாட்டில் கணவர்.. இயக்குநருடன் ரொம்ப நெருக்கம்.. நடிகையின் லீலை எங்க போய் முடியப் போகுதோ?
- Finance
இந்தியா - பாகிஸ்தான் முக்கியப் பேச்சுவார்த்தை.. ஹைட்ரோபவர் திட்டம்..!
- Sports
ஐபிஎல் இறுதி போட்டி - குஜராத் வெற்றி வாய்ப்புக்கு 4 காரணம்.. விதியை மாற்ற கூடிய வீரர்கள் பட்டியல்
- Automobiles
உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!
- Technology
ஐபோன் 14 தொடர் எப்போது அறிமுகம்?- விலை, சிறப்பம்சங்கள் இதுதானா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 7 ராசிக்காரங்களுக்கு 2022-ல் குழந்தை பிறக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம்...உங்க ராசி இதுல இருக்கா?
பெற்றோராக இருப்பது என்பது ஒரு வரம். அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி விவரிக்க முடியாதது. திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையின் சிறப்பு தருணங்களில் குழந்தை பெற்றுக் கொள்வதும் ஒன்று. ஆனால் இந்த ஆச்சரியம் கலந்த இன்பம் எப்போது கிடைக்குமென்று யாராலும் கூறமுடியாது. நீங்கள் நீண்ட நாட்களாக குழந்தைக்காக இந்த காத்திருந்தால் இந்த ஆண்டு உங்கள் கனவு நிறைவேற வாய்ப்புள்ளது.
2022 ஜோதிட கணிப்புகளின் படி சில ராசிக்காரர்களுக்கு குழந்தை பிறக்கவும், அதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகவும் வாய்ப்புள்ளது. அனைத்து ராசிகளிலும் உள்ள கிரகங்களின் நடமாட்டத்தின் அடிப்படையில், 2022ல் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா என்பது கணிக்கப்படுள்ளது. உங்கள் ராசிக்கு 2022-ல் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
குரு மேஷ ராசியின் 11வது வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு 2022-ல் மீன ராசியில் நுழைவதால், மேஷ ராசிப் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்க சரியான நேரம் அமையும். எனவே மே 2022 மேஷ ராசியினருக்கு உகந்த காலமாகும்.

ரிஷபம்
ரிஷப லக்னத்தில் ராகு, கேது இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு குழந்தைப்பேறு தாமதமாகும். நல்ல விஷயம் என்னவென்றால், குரு இந்த கட்டத்திற்கு சாதகமாக இருக்கக்கூடும் என்பதால், மே 13, 2022 க்குப் பிறகு அவர்கள் குழந்தையை எதிர்பார்க்கலாம். எனவே அடுத்த வருடத்தின் மத்தியில் அல்லது அடுத்த வருட இறுதியில் உங்களுக்கு குழந்தை பிறக்கும்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு 2022 ஆம் ஆண்டுக்கு முன் குழந்தை பிறப்பதற்கான வலுவான சாத்தியக்கூறு உள்ளது. இந்த நேரம் முடிந்தவுடன், அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆனால் இன்னும் வாய்ப்புகள் இருப்பதால் பீதி அடைய வேண்டாம்.

கடகம்
2022-ம் ஆண்டு, கடக ராசிக்காரர்களுக்கு குழந்தைப் பேறு ஏற்படுவதற்கு ஏற்ற காலம் அல்ல. எனவே, மே அல்லது ஜூன் மாதத்திற்குப் பிறகு கருத்தரிக்க முயற்சி செய்யுங்கள். 2023 ஆம் ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வரும்.

சிம்மம்
2022-ல் குழந்தை பிறக்கும் அதிர்ஷ்டம் கொண்ட ராசிகளில் இவர்களும் ஒருவர். சிம்ம ராசிக்கு 2022ல் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் உள்ளன.ஆனால் மே 2022க்குள் குழந்தை பிறந்தால் நல்லது.

கன்னி
ஜூன் 2022க்குப் பிறகு கன்னி ராசிக்காரர்களுக்கு குழந்தைப் பேறு வாய்ப்புகள் வலுவாக இருக்கும். ஆனால் ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்ததை விட சிறிது காலம் ஆகலாம். எனவே கொஞ்சம் பொறுமை காட்டுவது நல்லது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருட இறுதியில் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் கூட, குழந்தை பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

விருச்சிகம்
குழந்தைப் பேறுக்காக முயற்சி செய்யும் விருச்சிக ராசிக்காரர்கள் சிறிது காலம் காத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனென்றால் 2022 மே-ஜூன் சரியான நேரம் அல்ல. இக்காலம் முடிந்துவிட்டால், குழந்தைப் பேறு யோகம் உங்கள் ராசிக்கு சுபமாகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் குழந்தைப் பேறுக்காகக் காத்திருந்தால், 2021ம் ஆண்டும், 2022ம் ஆண்டும் குழந்தைப் பேறுக்கு உகந்த காலம் அல்ல. இது உங்களை சிறிது நேரம் காத்திருக்க வைக்கலாம். சரியான நேரத்திற்காக காத்திருப்பதே இங்கு முக்கிய விஷயம். உங்கள் பொறுமை இறுதியாக ஒரு நல்ல பலனைக் கொடுக்கும்.

மகரம்
மே 2022க்கு முன் குழந்தைப் பேறை உறுதி செய்து கொள்ளுங்கள். குழந்தைக்காகக் காத்திருக்கும் பெண்கள் மே 2022க்கு முன் கருத்தரிக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் சரியான நேரம் அமையும். கருத்தரிக்க சரியான நேரம் ஏப்ரல் மாதத்திற்கு முன்பு. அடுத்த வருட இறுதியில் கூட குழந்தைகள் தொடர்பான கிரகங்கள் சாதகமாக இருக்கும்.

மீனம்
குழந்தைப் பேறுக்காக முயற்சி செய்யும் மீன ராசிக்காரர்கள் ஏப்ரல்-மே மாதம் வரை காத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, குழந்தையின் வீட்டின் மீது குருவின் பார்வை படுவதால், அடுத்த ஆண்டில், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கருத்தரிக்க சரியான நேரம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் இருக்கும்.