For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை அன்னைக்கு நீங்க இத கண்டிப்பா பண்ணியே ஆகணுமாம்... ஏன் தெரியுமா?

படிப்பிற்கும் , தொழிலுக்கும், செல்வத்திற்கும் உரிய தெய்வங்களை வணங்கி அனைத்து வளங்களையும்பெறுவோம். இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!

|

நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. நவராத்திரி பண்டிகையில் ஒன்பதாம் நாளான இறுதி நாளில் ஆயுத பூஜையும் பத்தாவது நாளில் விஜயதசமியும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் வளம் பெருகவும் ஆயுதபூஜையும் சரஸ்வதி பூஜையும் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு வரும் அக்டோபர் 4ஆம் தேதி ஆயுத பூஜையும் 5ஆம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட இருக்கிறது.

Ayudha Pooja 2021: wishes, messages, sms, whatsapp status in tamil

நவராத்திரி நாட்களில் அரக்கன் மகிஷாசுரனை தேவி வதம் செய்த நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. துர்கா தேவி தனது ஆயுதங்களை பூஜை செய்த நாள் ஆயுத பூஜையாகவும், தசமி திதியில் பத்தாம் நாள் அசுரனை அழித்த தேவியின் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆயுத பூஜை அன்று உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எவ்வாறு வாழ்த்து கூறலாம் என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்த்து 1

வாழ்த்து 1

அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்

வாழ்த்து 2

வாழ்த்து 2

செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும் அறிவாகவும் இருந்து செயல்படும் இறைவனுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இன்று தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும் இறைவனின் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை நமக்கு தரட்டும். இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3

வாழ்த்து 3

சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளில் அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வெற்றி மேல் வெற்றி பெற்று அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ எங்களது மனமார்ந்த ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4

வாழ்த்து 4

படிப்பிற்கும் , தொழிலுக்கும், செல்வத்திற்கும் உரிய தெய்வங்களை வணங்கி அனைத்து வளங்களையும் பெறுவோம். இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5

வாழ்த்து 5

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6

வாழ்த்து 6

தொழில் சிறக்கட்டும்...

வளம் பெருகட்டும்...!

இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...!

வாழ்த்து 7

வாழ்த்து 7

அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

கலைமகளின் அருள் எல்லாருக்கும் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8

வாழ்த்து 8

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் இந்நாளில் பூஜை செய்து வணங்குவோம். இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9

வாழ்த்து 9

உறவுகள் அனைவருக்கும் கல்வி, தொழில், செல்வம், வீரம் பெருக கலைமகள் ஆசி நிலைத்து நின்று செழித்தோங்க இந்த நாளில் வேண்டிக்கொள்வோம். இனிய ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayudha Pooja 2022: wishes, messages, sms, whatsapp status in tamil

Here we are talking about the ayudha pooja 2021 wishes, messages, sms, whatsapp status in tamil
Desktop Bottom Promotion