Just In
- 41 min ago
தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது மன உணர்வு உண்மையில் என்ன செய்கிறது தெரியுமா?
- 1 hr ago
உங்க ராசிப்படி நீங்க எந்த மோசமான பழக்கத்துக்கு அடிமையாக இருப்பீங்க தெரியுமா?
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (28.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- 16 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Sports
ஐயோ அவரா?.. என் கேப்டன்சிக்கே ஆபத்து வரும்.. கறாராக சொல்லிவிட்ட தோனி.. முட்டிமோதும் சிஎஸ்கே!
- Movies
மீண்டும் ஒலித்த தேனிசை குரல்.. சிவகார்த்திகேயன் படத்திற்கு இன்னாம்மா "ஃபீல்" பண்ணியிருக்காரு தேவா!
- Automobiles
ஆர்ப்பரிக்கும் வசதிகளுடன் வந்துள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!
- Finance
பட்ஜெட் பதற்றம்.. தொடர் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 13,900 கீழ் சரிவு.. !
- News
அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்.. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆயுத பூஜை எதனால் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
மகா சக்தியான துர்கா தேவியைப் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் விழா தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் 9 வடிவங்கள் வழிபடப்படுகிறது.
தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ஆயுத பூஜை. ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த விழாவானது, நவராத்திரியின் 9 ஆவது நாள் கொண்டாடப்படும். அன்றைய தினம், மகா நவமி என்றும் அழைக்கப்படுவதுண்டு.

ஆயுத பூஜையின் வெவ்வேறு பெயர்கள்:
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஆயுத பூஜையானது சற்று வித்தியாசமாக பெயரிடப்பட்டுள்ளது. எந்த மாநிலத்தில் எப்படி அழைக்கப்படுகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...
ஆந்திரா & தெலுங்கானா: ஆயுத பூஜா
கர்நாடகா: ஆயுத பூஜே
கேரளா: ஆயுத பூஜா
மகாராஷ்டிரா: காண்டே நவமி
தமிழ்நாடு: ஆயுத பூஜை

ஆயுத பூஜையின் வரலாறு:
புராண கதைகளின் படி ஆயுத பூஜையானது நவராத்திரியுடன் தொடர்புடையது. தேவி துர்கா, மஹிஷாசுரா என்ற அரக்கனை அஷ்டமி மற்றும் நவமி சந்திப்பில் கொன்றதாகவும், அதன் பின்னர் வதத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேவி கீழே போட்டு விட்டதாகவும் நம்பப்படுகிறது. அந்த நாளை தான் ஆயுத பூஜையாக கொண்டாட தொடங்கினர். மேலும் ஆயுத பூஜை என்பது அரக்க ராஜாவை, தேவி துர்கா வீழ்த்தியதன் வெற்றியின் கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது.
மகாபாரத புராணத்தின் படி, நாடுகடத்தப்பட்டதன் காரணமாக பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் தனது ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் கீழ் மறைத்து வைத்து சென்றான். வனவாசம் முடிந்து ஒரு வருடத்திற்கு பின்னர் பாண்டவர்கள் திரும்பியபோது, தாங்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் அதே இடத்தில் இத்தனை நாளாக இன்னும் இருப்பதைக் கண்டு ஆச்சரிப்பட்டனர். ஆயுதங்களை மீட்டெடுத்த பிறகு, அவர்கள் வழிபாடு நடத்தி, குருக்ஷேத்திரப் போருக்கு சென்று வெற்றியை தமதாக்கினர். பின்னர், அவர்கள் விஜயதசமி நாளில் திரும்பி வந்து வன்னி மரத்தையும் வணங்கி சென்றனர். எனவே இந்தியாவின் சில பகுதிகளில், தசமி நாளில் வன்னி மரங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றது.

ஆயுத பூஜையின் முக்கியத்துவம்:
ஆயுத பூஜை ஆயுதங்களை குறிக்கிறது. பண்டைய காலங்களில், ஆயுதங்களை வணங்கும் நாளாகவே ஆயுத பூஜை திகழ்ந்தது. தற்போதைய நவீன காலக்கட்டத்தில், விஸ்வகர்மா பூஜையைப் போலவே, கருவி அல்லது கைவினைஞர்களின் கருவிகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இது மாற்றப்பட்டுள்ளது. ஆயுத பூஜையானது கைவினைஞர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஒவ்வொரு கருவிகளும் அந்தந்த தொழிலில் வெற்றியை அடைய உதவுகின்றன என்று நம்பப்படுகிறது. மேலும், அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கும், வெகுமதி பெறுவதற்கும், வழிபாடு நடத்தப்படுகிறது. ஒரு வியாபார விருதி யந்திரத்தை வழிபடுவது உங்கள் தொழில்முறை உறவுகளை மேம்படுத்தவும், உங்கள் வணிகத்திற்கு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரவும், தொழிலை விரிவுபடுத்தவும் உதவிடும்.
சமீபத்திய காலங்களில், மக்கள் தங்கள் வாகனங்களையும் வணங்க தொடங்கிவிட்டனர். எனவே, இது வாகன பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. எல்லா வகையான தீமைகளிலிருந்தும் விடுபட மக்கள் இந்த நாளில் தங்களது ஆட்டோக்கள், கார்கள், லாரிகள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சுத்தப்படுத்தி வழிபாடு நடத்துகிறார்கள்.

ஆயுத பூஜை தேதி மற்றும் முகூர்த்த நேரம்:
ஆயுத பூஜையின் முக்கியத்துவத்தைப் பற்றி தற்போது நன்கு அறிந்திருக்கிறோம், ஆயுத பூஜை கொண்டாடுவதற்கான நாள், பூஜை செய்ய வேண்டிய நேரங்களை இப்போது பார்க்கலாம்...
ஆயுத பூஜை தேதி: அக்டோபர் 25, 2020, ஞாயிற்றுக்கிழமை
ஆயுத பூஜை விஜய முகூர்த்தம் - 01:57 PM முதல் 02:42 PM (45 நிமிடங்கள்)
நவமி திதி தொடக்கம் - 2020 அக்டோபர் 24, காலை 06:58
நவமி திதி முடிவு - அக்டோபர் 25, 2020, காலை 07:41

ஆயுத பூஜை எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
ஆயுத பூஜை செய்வதற்கான நடைமுறை ஒவ்வொரு மாநிலங்களிலும் வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆயுத பூஜை தினத்தில் பூஜை செய்ய இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
* பூஜை அன்று மாலை நேரத்தில், உங்களது வீட்டு கருவிகள், தொழில் கருவிகள் அல்லது உங்களது வாகனங்களை கழுவி, சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். தேவைப்பட்டால் அவற்றிற்கு வண்ணம் கூட தீட்டலாம்.
* மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைக் கொண்டு கருவிகள், வாகனங்களுக்கு திலகமிட வேண்டும்.
* ஆயுதங்களைப் பொறுத்தவரை, நீங்கள் அவற்றை சுத்தம் செய்து கழுவ வேண்டும். முன்பு போல் அவற்றிற்கும் திலகத்தை வைக்க மறவாதீர்கள். பூக்களால் ஒரு சுவருக்கு எதிராக, ஒரே வரிசையில் அவற்றை வைக்கவும். ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் சாமந்தி பூ மிகவும் குறிப்பிடத்தக்க மலர். எனவே, அன்றைய தினம் அந்த மலர் கொண்டு பூஜை அறையை அலங்கரியுங்கள்.
*அடுத்த நாள் காலை, மகா நவமி நாளில், தேவி சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி ஆகியோரின் சிலைகள் அல்லது படங்களை வைத்து அனைத்து கருவிகளையும் அல்லது ஆயுதங்களையும் வைத்து வணங்குங்கள்.
* சில இடங்களில், ஆயுத பூஜை மந்திரத்தை உச்சரித்த படியே தேவி அபராஜிதாவையும் வழிபடுவார்கள்.

ஆயுத பூஜை மந்திரம்
‘ஜெயதே வரதே தேவி தஷ்மயம்பராஜிதே'. தரயாமி பூஜே தக்ஷா ஜெயலாபபவித்தியே. '
இசைக்கருவிகள் மற்றும் புத்தகங்களையும் இதே வழிமுறையில் வணங்கலாம். ஆயுத பூஜை நாளில், இந்த கருவிகள், ஆயுதங்கள் அல்லது புத்தகங்களை ஒருபோதும் பூஜையில் இருந்து எடுக்கவோ, நகர்த்தவோ கூடாது.

ஆயுத பூஜை நமக்கு கற்பிப்பது என்ன?
ஆயுத பூஜை என்பது ஆயுதங்கள், கருவிகள், வருவாய் ஊடகங்கள் ஆகியவற்றை வணங்குவதற்கும், நம் வாழ்வில் அவற்றிற்கான பங்குகளைப் பற்றி சிந்திப்பதற்குமான நாளாக கருத வேண்டும். பண்டைய காலங்களில், எதிரிகளை வென்றெடுக்கும் மற்றும் போர்வீரரைப் பாதுகாக்கும் ஆயுதங்களைப் போற்றி வணங்கும் தினமாகும். ஆனால் இன்றைய நவீன உலகம் ஆயுத பூஜைக்காக வரையறையை மாற்றியுள்ளது. அதன்படி, நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற உதவும் ஒவ்வொரு சிறுசிறு விஷயங்களுக்கும் நன்றியுடன் இருக்க வேண்டும்.