Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
ஆகஸ்ட் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் பெரிய லாபத்தை பார்ப்பாங்களாம்... இதுல உங்க ராசி இருக்கா?
2021 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், பல முக்கியமான கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகின்றன. கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2021 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், பல முக்கியமான கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகின்றன. கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி புதன் சிம்ம ராசியிலும், ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசியிலும் நுழைகிறார்கள். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் நுழைகிறார். இதனால் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்மத்தில் புத்தாதித்ய யோகம் உருவாகிறது.

எந்த ஒரு ராசியிலும் சூரியனும், புதனும் சேர்ந்து இருந்தாலும், சுப யோகம் உருவாகும். இந்த சூரிய புதன் சேர்க்கையால் ஆகஸ்ட் மாதத்தில் பின்வரும் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து, தொழிலில் பெரிய லாபத்தைக் காணப் போகிறார்கள். உங்கள் ராசியும் இதில் உண்டா என்பதை படித்து பாருங்கள்.

மேஷம்
தொழில் மற்றும் வேலை அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு, பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். மாதத்தின் நடுப்பகுதி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்
ஆகஸ்ட் மாதத்தில் கிரகங்களின் இயக்கம் காரணமாக, உங்களின் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பை காண்பீர்கள். உங்களின் கௌரவம் அதிகரிக்கும். இந்த காலக்கட்டத்தில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறலாம். சக ஊழியர்களிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மிதுனம்
ஆகஸ்ட் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் மாதமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும். அரசாங்க வேலை செய்பவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வர்த்தகர்கள் லாபம் ஈட்டுவார்கள். மேலும் முதலீடு செய்வதற்கு இது நல்ல காலம்.

சிம்மம்
ஆகஸ்ட் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள், அவர்களின் துறையில் வெற்றி பெறுவார்கள். வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் இந்த மாதத்தில் நற்செய்தியைப் பெறுவார்கள். வியாபாரிகள், தங்கள் வியாபாராத்தில் லாபத்தைக் காண்பார்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம்
ஆகஸ்ட் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான மற்றும் நல்ல பலன்களை அளிக்கும் என்பதை நிரூபிக்கும். இந்த மாதத்தில் எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையாக செய்வீர்கள். வேலை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளுடனான உறவு சுமூகமாக இருக்கும். புதிய வேலையை தொடங்குவதற்கு நல்ல மாதம் இது.



Click it and Unblock the Notifications