For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆகஸ்ட் மாதம் சிம்மத்தில் கூட்டணி சேரும் 4 கிரகங்கள் - யாருக்கு நன்மை?

|

ஆகஸ்ட் மாதம் வியாழன் பூசம் நட்சத்திரம் சந்திரன் கடகத்தில் இருக்கிறார். சூரியன் ஆகஸ்ட் மாதம் பாதி நாட்கள் கடகத்திலும் மாத பிற்பகுதியில் 15 நாட்கள் சிம்மத்திலும் சஞ்சரிப்பார். மாதம் பிறக்கும் போதே கடகத்தில் நான்கு கிரகங்களின் கூட்டணி இருக்கிறது. சூரியன், சந்திரன், செவ்வாய் சுக்கிரன் என கடகத்தில் கூட்டணி அமைத்திருக்கும் கிரகங்கள் மாத பிற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் என கூட்டணி அமைக்கின்றனர். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடக்கும் எந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் என்று பார்க்கலாம்.

wealth 12 zodiac signs

இந்த மாதம் கிரகங்கள் தனுசு ராசியில் சனி கேது மிதுன ராசியில் ராகு விருச்சிகத்தில் வக்ரம் பெற்ற குரு என சஞ்சரிக்கின்றன. கேது ராகு கிரகங்களுக்கு இடையே மற்ற ஏழு கிரகங்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன. வக்ர நிலையில் சஞ்சரித்த குரு, புதன் வக்ர நிவர்த்தி அடைந்து மீண்டும் முன்னோக்கி நகர்கின்றன.

இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு வேலை கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும், கடன்கள் தீரும், புதிய கடன்கள் கிடைக்கும், கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டில் ராசிநாதன் நீச்சம் பெற்ற நிலையில் இருக்கும் செவ்வாய் பலமான இடத்திற்கு பயணப்படுகிறார், சேமிப்பு உயரும் சொத்துக்கள் வாங்குவீர்கள். உற்சாகமான நிலை ஏற்படும். இந்த மாத துவக்கமே ராஜயோகம். காரணம் கடகத்தில் இருக்கும் கிரகங்களின் கூட்டணிதான். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையில் சின்னச் சின்ன மாற்றங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகம் கூடி வரும். 17 ஆம் தேதிக்கு மேல் சிம்மத்தில் சூரியன், சுக்கிரன் செவ்வாயுடன் இணைவதால் வேலையில் சின்ன மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படும். ஆகஸ்ட் மாதம் மேஷம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம், வேலையில் பிரச்சினை ஏற்படும். காரணம் அஷ்டமத்து சனி கேது கூட்டணிதான். நான்கு கோள்கள் ஒன்றாக மூன்றாம் வீட்டில் இணைந்திருக்கின்றனர். பிறவி ஜாதகத்தில் யோகம் பெற்றவர்களாக இருந்தால் இந்த மாதம் அற்புதமான பலனை தரும். 9ஆம் தேதி நான்காம் வீட்டிற்கு செவ்வாய் நகர்கிறார். சந்திரன் குரு பார்வையிடுவதால் மனதில் குழப்பம் நீங்கும். 17ஆம் தேதிக்கு மேல் சூரியன், சுக்கிரன் ஒன்றாக இணைந்து நான்காம் வீட்டில் இணையும் போது ராஜயோக காலமாகும் பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடிகள் தீரும். இந்த மாதம் இருமல் சளிதொந்தரவு வரும். குளிரான உணவு சாப்பிட வேண்டாம் கொஞ்சம் சூடா, காரமா சாப்பிடுங்க நல்லதே நடக்க லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்.

மிதுனம்

மிதுனம்

புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே மாத துவக்கத்தில் ராசியில் ராகு உடன் புதன் இணைகிறார். ஆகஸ்ட் 3ஆம் தேதி கடகத்தில் புதன் இணைகிறார். புதனால் பணவருமானம் கூடும். பொருளாதார ரீதியான வெற்றி கிடைக்கும். வெளிநாடு தொடர்பில் வெற்றி கிடைக்கும். குருவினால் பலன் கிடைக்கும். சனியால் இடையூறு இருந்தாலும் குரு நன்மை செய்வார். புதன் சூரியன், சுக்கிரன் செவ்வாயுடன் இணையும் காலத்தில் வெற்றி கிடைக்கும். இந்த மாதம் கல்வியில் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் சரிபடுத்திக்கொள்ளலாம். வருமானம் இந்த மாதம் உற்சாகமாக இருக்கும் மனநிறைவை தரும். பேர் புகழ் ஏற்படும். நீங்க எதற்கும் அவசரப்பட வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை உணவுக்கட்டுப்பாடு அவசியம். குடும்ப வாழ்க்கையிலும் உடல் நலத்திலும் அக்கறை தேவை.

MOST READ: விமானத்துல போய்ட்டு இருக்கும்போது 6 மாத குழந்தை இதயத்துடிப்பு நின்று மரணம்...

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆசைப்பட்டவை நிறைவேறும். காரணம் குரு பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் நன்மை. ஆகஸ்ட் 1ஆம் தேதி கடகத்தில் சூரியன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய் என நான்கு கிரகங்கள் கூட்டணி இருப்பது நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. புது வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். 17ஆம் தேதி சூரியன் இரண்டாம் வீட்டிற்கு நகர்ந்து ஆட்சி பெற்று அமர்வதால் நன்மைகள் நடைபெறும். சுக்கிரனும் இரண்டாம் வீட்டிற்கு வருவதால் தன வருமானம் அதிகரிக்கும். வேலையில் உயர்வு கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கட்டிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும் காலம். புதிய வேலைகள் நன்மைகள் நடைபெறும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. மாத பிற்பகுதியில் திருமண முயற்சிகள் கைகூடி வரும். பெண்ணுக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை அமைவார். திருமணத்திற்கு எதிர்பார்த்து காத்திருக்கும் ஆண்களுக்கு மனதிற்கு பிடித்த மனைவி அமைவார். நன்மைகள் நடைபெறும் மாதம்.

சிம்மம்

சிம்மம்

சூரியனின் பலத்தால் இந்த மாதம் உங்களுக்கு உற்சாகம் கூடும். சிம்மராசிக்காரர்களுக்கு பிரயாணங்களால் சுப விரையங்கள் ஏற்படும் மாதம். அலைச்சல்பட்டாலும் நன்மைகள் நடைபெறும். நான்காம் வீட்டில் வக்ரமடைந்த குரு வக்ர நிவர்த்தி அடைகிறார்.நேரடியாக குரு செல்லும் போது திட்டமிட்ட வேலைகளை செய்வார். படிப்பு செலவு அதிகரிக்கும். குடும்பத்திற்கு அதிகம் செலவு செய்வீர்கள். மாத பிற்பகுதியில் ஜென்மத்தில் செவ்வாய், சூரியன், சுக்கிரன் இணைவதால் பிரச்சினைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத பதவி பணவரவு உண்டு. திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். 17ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் சுக்கிரன், சூரியன் ஒன்றாக இணைந்து ஏழாம் வீட்டை பார்ப்பதால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். சிம்ம ராசிக்காரர்களுக்கு மாதத்தின் முதல்பாதி சுமாராக இருந்தாலும் மாதத்தின் இரண்டாம் பாதியில் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கன்னி

கன்னி

இந்த மாதம் நீங்கள் போராட்டமான வாழ்க்கையை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் போகிறது. நான்கு கோள்கள் லாப ஸ்தானத்தில் இருக்கும் காலத்தில் பணவரவு அதிகமாகும். புதிய வேலை கிடைக்கும். ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு மேல் சிம்ம வீட்டிற்கு செவ்வாய் வரும் போது கன்னி ராசிக்கு தடைகள் ஏற்படும். மூன்றாம் வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். புதன் உங்க ராசிநாதன் முயற்சி எடுக்க வைத்தாலும் செவ்வாய் தடையை ஏற்படுத்துவார். 17ஆம் தேதிக்கு மேல் மூன்று கோள்கள் விரைய ஸ்தானத்தில் இணைவதால் செய்யும் முயற்சியில் தடை தாமதங்கள் அதிகமாகும். அர்த்தாஷ்டம சனியால் அம்மாவின் உடல்நலம் பாதிப்பை ஏற்படுத்தும் உடல் ரீதியாக மனரீதியாக உளைச்சலை தரும். இந்த மாதம் கன்னி ராசிக்காரர்கள் கவனமுடன் செயல்படுவது அவசியம்.

MOST READ: மொபைல் அதிகமா யூஸ் பண்ணதால வெறிபிடித்து சுவரில் போய் முட்டிக்கொள்ளும் இளைஞன்...

துலாம்

துலாம்

ஆகஸ்ட் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு பணவருமானம் அதிகரிக்கும். குரு சுபமான திருப்பங்களைத் தருவார். ராசிக்கு பத்தாம் வீட்டில் கோள்கள் அற்புதமாக இணைந்திருக்கின்றன. குருவின் பார்வை அந்த கோள்களின் மீது விழுகிறது. சாதகமான திருப்பங்களைத் தரும். புதன் மாத துவக்கத்தில் ஒன்பதாம் வீட்டிலும் பின்னர் பத்தாம் வீட்டிற்கும் நகர்கிறார். ஒன்பதாம் தேதி செவ்வாய் சிம்மத்திற்கு நகர்கிறார். 17ஆம் தேதி சூரியன் சுக்கிரன் நகர்வது நன்மையான காலம். பெண்களுக்கு திருமண வரம் அமையும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிறப்பான காலம் இது. மாணவர்களுக்கு புதன் நகர்வினால் கல்வியில் வெற்றிகரமான பயணமாக அமையும். இந்த மாதம் மொத்தத்தில் வருமானம் கூடும் வேலையில் புதிய டிரான்ஸ்பர் கிடைக்கும். வீடு வாகனம் வாங்குவீர்கள். சொத்துக்கள் வாங்குவீர்கள். மன திருப்தியை தரும் மாதம் இது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே... உங்கள் ராசியில் வக்ரமடைந்திருந்த குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ராசி நாதன் செவ்வாய் மாத முற்பகுதியில் ஒன்பதாம் வீட்டில் இணைந்திருப்பது சந்தோசமான விசயம். பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் முன்னேற்றத்தைத் தரும். ஆகஸ்ட் 17ஆம் சூரியன் பத்தாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் உடன் இணைவதால் வேலையில் முக்கிய திருப்பங்கள் நடைபெறும். சுகமான செயல்கள் நடைபெறும் வீடு சொத்து வாங்குவீர்கள். ஏழரை சனி பிடியில் இருந்தவர்களுக்கு பாதிப்புகள் குறையும். மனதில் தைரியம் கூடும். பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கப்போகிறது சந்தோசமாக இருக்கும்.

MOST READ: அரை கிலோ பழைய பிளாஸ்டிக் கவர்கள் கொடுத்தா ஃபுல் மீல்ஸ் சோறு... எந்த ஹோட்டல்னு தெரியுமா?

தனுசு

தனுசு

ஜென்ம சனி, விரைய குருவினால் படாத பட்டுக்கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரத்தினால் கஷ்டங்களை தாக்கு பிடிக்கும் சக்தியை தரும். மாத முற்பகுதியில் எட்டாம் வீட்டில் சந்திரன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் இணைந்து இடையூறுகளைத் தரும் காலம். ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு மேல் பிரச்சினைகள் தீரும். காரணம் செவ்வாய் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கிறார். 17ஆம் தேதிக்கு மேல் தடைகள் நீங்கும். அரசு துறைகளில் தடைபட்டிருந்த வருமானம் வரும். அரசு தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள். புதன் எட்டாம் வீட்டிற்கு வருவதால் தடைகளை ஏற்படுத்துவார். 26ஆம் தேதி புதன் சிம்மத்திற்கு வரும் பொழுது பிரச்சினைகள் தீரும். தனுசு ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் முதல்பாதி இடைஞ்சல்களும் குழப்பங்களும் இருந்தாலும் மாத பிற்பகுதியில் கிரகங்களின் இடமாற்றத்தால் நன்மைகள் நடைபெறும். தெய்வ நம்பிக்கையால் தீமைகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

 மகரம்

மகரம்

விரைய ஸ்தானத்தில் சனி கேது ஒன்றாக இருப்பதால் விரையங்கள் ஏற்படும். லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் நன்மைகளைத் தருவார். வாய்ப்புகளை அள்ளித்தருவார். ஏழாம் வீட்டில் நான்கு கோள்கள் இருக்கின்றன. மகர ராசியினை நான்கு கோள்களும் பார்ப்பதால் நன்மைகள் நடைபெறும். பயணங்களினால் நன்மை அமையும். சூரியன், சுக்கிரன் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் கூடும். இந்த மாதம் 9ஆம் தேதி செவ்வாய் எட்டாம் வீட்டிற்கு நகர்கிறார். மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைவது நல்லதல்ல. திருமணம், பயணம், வேலை விசயமாக இந்த மாதம் முடிவெடுக்க வேண்டாம். ஆறில் ராகு, எட்டில் செவ்வாய் 12ஆம் வீட்டில் கேது சனி கிரங்கள் இந்த மாதம் சஞ்சரிப்பதால் சற்று சுமாரான மாதம்தான். இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லை எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள்.

MOST READ: மொபைல் அதிகமா யூஸ் பண்ணதால வெறிபிடித்து சுவரில் போய் முட்டிக்கொள்ளும் இளைஞன்...

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சோதனைகளும் சாதனைகளும் நிறைந்த மாதம். லாபத்தில் சனி கேது நிற்கின்றனர். வக்ரமடைந்த குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். அலைச்சலை ஏற்படுத்தி வந்த குரு இனி நன்மைகளை செய்யப்போகிறார். 9ஆம் தேதி செவ்வாய் ஏழாம் வீட்டிற்கு நகர்ந்து சம சப்தம பார்வை ராசி மீது விழுவதால் வேலையில் இருந்த அலைச்சல்கள் தீரும். 17ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன், சூரியன் ஏழாம் வீட்டிற்கு நகர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகின்றனர். இதனால் அரசு தொடர்பான வேலைகள் நடைபெறும். வீடு, வாகனம் சொத்துக்கள் வாங்கலாம். கல்வியில் நன்மைகள் நடைபெறும். உங்களுக்கு இந்த மாத முற்பகுதியில் சில தடைகள் இருந்தாலும் மாத பிற்பகுதியில் கிரகங்களின் நகர்வினாலும் பார்வையினாலும் நன்மைகள் நடைபெறும். திருமணத்திற்கு முயற்சி செய்ய வேண்டாம். குரு பெயர்ச்சிக்கு பின்னரே திருமண முயற்சிகள் வெற்றி பெரும்.

MOST READ: வீட்ல புகுந்து ராத்திரி முழுக்க கூத்தடித்த ஏலியன்... திகிலில் உறைந்த மனிதர்... நீங்களே பாருங்க

மீனம்

மீனம்

உங்க ராசி நாதன் குரு வக்ர நிவர்த்தி அடைந்து பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு நகர்வதால் நன்மைகள் நடைபெறும். பிரச்சினைகள் குறையும். மாத துவக்கத்தில் ஐந்தாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், சந்திரன் செவ்வாய் இணைந்திருக்கின்றனர். அந்த கிரகங்களின் மேல் உங்கள் ராசிநாதன் குரு பார்வை விழுவது சிறப்பம்சம். வங்கிக் கடன் கிடைக்கும். பத்தில் கேதுவும் சனியும் இருப்பது வேலையில் சிக்கலை ஏற்படுத்துவார். நான்காமிட ராகு உடல் நல பாதிப்பை ஏற்படுத்தினாலும் குருவின் நகர்வு நன்மைகளை ஏற்படுத்தவார். செவ்வாய், சுக்கிரன், சூரியன் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டிற்கு நகர்வதால் அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். கெடுபலன்கள் குறையும் நன்மைகள் நடைபெறும். மாணவர்களுக்கு புதன் உற்சாகத்தை தருவார். கடல் கடந்து செல்லக்கூடிய நன்மைகளைத் தருவார். தனலாபத்தை தருவார். நிறைய நன்மைகள் நடைபெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

August 2019 Monthly Horoscope love, health, wealth 12 zodiac signs

August 2019 horoscope predictions for love, health, wealth, family, career and relationships. Know how favorable this month in 12 zodiac signs. The sun joins Mars and Venus in the sign of the Lion, and all three planets will affect.
Story first published: Wednesday, July 31, 2019, 11:24 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more