For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நினைத்த வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்க இந்த எளிய பரிகாரங்களை சனிக்கிழமையில் செய்யுங்கள் போதும்...!

|

அனைவருக்கும் தங்களுக்கு மன அமைதியை அளிக்கும் வேலையை விரும்புகிறார்கள், அதனுடன் சேர்த்து அதிக சம்பளம் மற்றும் தங்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வையும் விரும்புகிறார்கள். கொரோனா உலகம் முழுவதும் மிகப்பெரிய வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெரும்பாலான மக்களுக்கு வேலையைத் தக்க வைத்துக்கொள்வதே மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது.

தற்போதைய சூழல் அனைவருக்கும் சாதகமானதாக இல்லை என்றாலும், இந்த நிலை விரைவில் மாறும். திறமை இருந்தும் சரியான வேலையோ அல்லது பதவி உயர்வுகளோ கிடைக்காமல் இருப்பவர்களுக்கு ஜோதிடம் சில வழிகள் உதவலாம். அதன்படி சிலர் நம்பும் சில மாற்று முறைகளை முயற்சிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை, ஏனெனில் அதனால் பயனில்லை என்றாலும் அதனால் உங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. புதிய வேலை அல்லது பதவி உயர்வை எதிர்பார்க்கும் நபர்களுக்கு ஜோதிடத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில எளிய பரிகாரங்கள் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காகத்திற்கு சாதம் வைப்பது

காகத்திற்கு சாதம் வைப்பது

சனிக்கிழமைகளில் காகங்களுக்கு வேகவைத்த அரிசியை வழங்குவது ஒரு உன்னத பரிகாரம். காகங்களுக்கு ஏன் அளிக்க வேணடும்? ஏனெனில் அவை ஜோதிடரீதியாக உங்கள் தொழிலை ஆள்வதாகக் கூறப்படும் சனிபகவானக் குறிக்கின்றன. எனவே இந்த கருப்பு பறவைகளுக்கு அதை வழங்குவதன் மூலம், உங்கள் நட்சத்திரங்கள் உங்கள் தொழிலை ஆசீர்வதிக்கும் வகையில் நீங்கள் கிரகத்தை அமைதிப்படுத்துகிறீர்கள்.

சூரிய வழிபாடு

சூரிய வழிபாடு

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் வெல்லம் சேர்க்க வேண்டும். இந்த நீரை தினமும் காலையில் சூரியனுக்கு அர்ப்பணித்து, சூரிய உதயத்தின் ஒரு மணி நேரத்திற்குள் "ஓம் ஹ்ரீம் சூர்யாயே நமஹ" என்று 11 முறை உச்சரிக்கவும்.

உள்ளங்கையை பார்ப்பது

உள்ளங்கையை பார்ப்பது

நீங்கள் காலையில் எழுந்ததும், உங்கள் உள்ளங்கைகளைப் பாருங்கள், ஏனெனில் இது செல்வத்தைக் கொண்டுவருவதாகும், ஏனெனில் ஜோதிடத்தின்படி, லட்சுமி தேவி அதில் வசிக்கிறார்.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்க வாழ்கையை மகிழ்ச்சியா அனுபவிச்சு வாழப்பொறந்தவங்களாம்... உங்க ராசி என்ன?

பீஜ மந்திரங்கள்

பீஜ மந்திரங்கள்

பீஜ மந்திரங்கள் விக்ன வினாயகர் என்று அழைக்கப்படும் விநாயகப் பெருமானை மகிழ்விக்கிறது. இந்த மந்திரம் உங்கள் தொழிலில் உள்ள தடைகளை தகர்க்கும் என்று கூறப்படுகிறது.

கிராம்பு மற்றும் எலுமிச்சை

கிராம்பு மற்றும் எலுமிச்சை

உங்கள் வலது கையில், 4 கிராம்புகளுடன் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து, "ஓம் ஸ்ரீ ஹனுமதே நமஹ" என்று 21 முறை உச்சரிக்கவும். இந்த மந்திரத்தை உச்சரித்த பிறகு, உங்கள் பாக்கெட்டில் எலுமிச்சையை வைக்கவும். இது உங்கள் வணிகத்தை வளர்க்க உதவும் என்று நம்பப்படுகிறது.

சனிபகவானுக்கு எண்ணெய் வழங்குவது

சனிபகவானுக்கு எண்ணெய் வழங்குவது

சனிக்கிழமைகளில் சனிபகவான் கோவிலுக்குச் சென்று சனிபகவான் சிலைக்கு எண்ணெய் வைத்து வழிபடுவது நீங்கள் விரும்பும் முன்னேற்றங்களைக் கொடுக்கும்.

MOST READ: ஓமிக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த தவறுகளை தெரியாமல் கூட பண்ணிராதீங்க... இல்லனா ஆபத்துதான்...

அனுமனை வழிபடுவது

அனுமனை வழிபடுவது

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அனுமன் கோயிலுக்குச் செல்வது தவிர, ஏழைகளுக்கு எண்ணெய் மற்றும் பூந்தி வழங்குவது உங்கள் வாழ்க்கையில் செல்வத்தைக் கொண்டுவரும்.

பாதாமை தானம் வழங்குவது

பாதாமை தானம் வழங்குவது

ஜோதிட நம்பிக்கைகளின்படி, பொதுவாக ஏழைகளுக்கு நன்கொடை அளிப்பதும் உதவி செய்வதும் எப்போதும் உங்கள் வாழ்க்கைக் குறிப்பில் நன்மையை ஏற்படுத்தும். இது கடவுளை மகிழ்விக்கிறது மற்றும் நீங்கள் ஒருவருக்கு உபயோகமாக இருக்கிறீர்கள் மற்றும் சில மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று நீங்களே நன்றாக உணர்கிறீர்கள். இங்கு, அனைத்து கிரகங்களையும் சாந்தப்படுத்த, பாதாம் ஒரு உலர் பழமாகும், இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். மேலும், குளிர்காலத்தில் கருமை நிற போர்வைகளை தானம் செய்யுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Astrology Remedies for Good Career and Job in Tamil

Check out the astrological remedies that may help people looking for a new job or promotion.
Desktop Bottom Promotion