For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ரத்த குரூப் பாசிட்டிவ்வா? நெகடிவ்வா? - இந்த ஃபுட் சாப்பிடுங்க...

நீங்க எந்த ரத்த வகையை சேர்ந்தவர் என்பதை வைத்து உங்களின் குணங்களை சொல்லி விடலாம் அதே போல நீங்க என்ன உணவை சாப்பிடலாம் சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

|

மனித உடம்பில் ஓடும் ரத்த வகையை வைத்து ஒருவரின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளலாம் என்பதை பல ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர். நீங்க வலிமையானவரா? மென்மையானவரா? உங்களுக்கு எந்த மாதிரியான உணவுகள் ஒத்துக்கொள்ளும் என்றும் உணரலாம். ஓ, ஏ, பி, ஏபி வகை ரத்த குரூப்களில் எந்த குரூப் ரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான குணங்கள் இருக்கும் என்ன சாப்பிடலாம் என்று பார்க்கலாம். எந்த கிரகத்தின் ஆதிக்கத்தை கொண்டவர்கள் என்றும் பார்க்கலாம்.

Astrological Signs And Blood Types

சனி மற்றும் ராகுவின் ஆதிக்கம் கொண்டவர்கள் 'ஓ' குரூப் ரத்த வகையை சேர்ந்தவர்கள். ஏ குரூப் ரத்த வகையை கொண்டவர்கள் சந்திரன், சுக்கிரனின் ஆதிக்கத்தை கொண்டவர்கள். 'பி' குரூப் ரத்த வகையில் பிறந்தவர்கள் வியாழன் மற்றும் சனியில் ஆதிக்கத்தை கொண்டவர்கள். இவர்கள் வலிமையானவர்கள். ஏபி ரத்த குரூப்பில் பிறந்தவர்கள் புதன், ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓ குரூப் ரத்தம்

ஓ குரூப் ரத்தம்

ஓ குரூப் ரத்தவகை கொண்டவர்கள் தனிமை விரும்பிகள். நகைக்சுவை உணர்வு அதிகம் கொண்டவகள், சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுப்பார்கள். அன்பும் காதலும் கொண்டவர்கள். எனினும் தங்களின் அன்பை வெளிப்படுத்த மாட்டார்கள். பொய் சொல்ல தெரியாது. எதையும் மறைக்க முடியாது. எந்த பிரச்சினையையும் சமாளிக்க முடியாமல் தடுமாறுவார்கள். இந்த குரூப் ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம். எளிதில் செரிமானம் அகும் முட்டை, ராஜ்மா, பீன்ஸ் சாப்பிடலாம். இவர்களுக்கு சிந்திக்கும் திறன் அதிகம், பிற குரூப் ரத்த வகையில் பிறந்தவர்களை விட அல்சைமர் நோய் இவர்களை தாக்காது.

ஏ குரூப் ரத்தம்

ஏ குரூப் ரத்தம்

ஏ ரத்த குருப்பில் பிறந்தவர்களுக்கு காய்கறி உணவுதான் சிறந்தது. பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடலாம். ஆர்கானிக் உணவுகள் இயற்கையாக விளைந்த உணவுகள் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம். காரமான அசைவ உணவுகளை தவிர்த்து விடுங்கள். ஆல்கஹால், வினிகர், ஊறுகாய் சாப்பிடாதீங்க. இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும். அதிகம் கோபப்படுவார்கள். எதற்காகவும் வாக்குவாதம் செய்ய மாட்டார்கள். இந்த குரூப் ரத்த காரர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

காதலுக்கு அடிமை

காதலுக்கு அடிமை

ஏ பாசிட்டிவ், நெகட்டிவ் ரத்த குரூப்பில் பிறந்தவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள். நம்பகமானவர்கள். எந்த வேலையையும் கச்சிதமாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பார்கள். அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். அதிக வேலைப்பளு இவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். அன்புக்கும் காதலுக்கும் அடிமையாவார்கள். கொஞ்சம் தலைக்கணம் கொண்டவர்கள்.

பி குரூப் ரத்தம்

பி குரூப் ரத்தம்

பி ரத்த குரூப்பில் பிறந்தவர்கள் பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடலாம். கடல் உணவு, ஐஸ்கிரீம், கோதுமை பொருட்களை தவிர்க்க வேண்டும். பி ரத்த வகையில் பிறந்தவர்கள் கற்பனையாளர்கள். ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பார்கள். வலிமையானவர்கள். அனைவரையும் நேசிப்பார்கள். இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். இவர்களை காதலிப்பவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. தான் சொல்வதுதான் சரி என்று நினைப்பவர்கள். இவர்கள் நண்பர்களுக்காக உயிரை கொடுக்க கூட தயங்க மாட்டார்கள். உண்மையும் பொய்யும் கலந்து பேசுவார்கள்.

ஏபி குரூப் ரத்தம்

ஏபி குரூப் ரத்தம்

ஏபி ரத்த குரூப்பில் பிறந்தவர்கள் உடல் வலிமை கொண்டவர்கள். கடல் உணவுகள் திரவ உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். காபி, டீ, சோளம், மசாலா பொருட்களை தவிர்க்க வேண்டும். இவர்கள் கற்பனை வளம் கொண்டவர்கள். தத்துவமாக பேசுவார்கள். நண்பர்கள் மீது பாசமழை பொழிவார்கள். புத்திசாலித்தனமும் நகைக்சுவை உணர்வும் கொண்டவர்கள். சிறந்த பேச்சாளர்கள். வேலை என்று வந்து விட்டால் தீயாக வேலை செய்வார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். அதே சமயம் ரொம்ப ரொமான்டிக் ஆனவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Astrological Signs And Blood Types

Do you know, our blood group also related with Astrology and horoscope, check out how they can impact us.
Story first published: Saturday, March 21, 2020, 15:17 [IST]
Desktop Bottom Promotion