For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அருண் ஜேட்லி மரணம்... இந்த நேரத்தில் அவர் பேசிய 6 முக்கியமான விஷயங்கள் இதோ...

அருண் ஜேட்லி திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் என்ன நடந்தது என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒருமுறை உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனாலேயே பாராளுமன்ற தேர்தலில் எனக்கு எந்தவித அமைச்சர் பதவியும் வேண்டாம்.

Arun Jaitley

உடல் நிலை சீராக இல்லாமல் என்று ஒரு கடிதத்தை எழுதியிருந்தது நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் தான். ஆனால் தேர்தலுக்குப் பின்பாக, அவருடைய உடல்நிலை சீராகவும் நல்ல முன்னேற்றத்துடனும் தான் இருந்தது. இந்த நிலையில் தான் இப்படி ஒரு விஷயம் இரண்டு வாரத்திற்கு முன்பாக நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இன்று மதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவர் சொன்ன சில விஷயங்களைப் பற்றி இந்த கட்டரையில் நினைவு கூர்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

அருண் ஜேட்லி அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனே எய்ம்ஸ் மருத்துவமனையில் காலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறுநீரகக் கோளாறால் அவதிப்பெற்று வந்தார்.

MOST READ: வேண்டா வெறுப்பாக உறவில் ஈடுபடுகிறவர்களை எப்படி கண்டுபிடிப்பது? (ஆண்- பெண் இருவருக்கும்)

பிறப்பும் பணியும்

பிறப்பும் பணியும்

இவருக்கு வயது 67. 1952 டிசம்பர் 28 ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் தொழில்முறை வழக்கறிஞர். அத்வானியின் நட்பின் மூலம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். 2014 முதல் 2019 வரை நிதியமைச்சராக இருந்திருக்கிறார்.

வாஜ்பேயி தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். கிரிக்கெட் ரசிகர் அதனா்ல பிசிசிஐ தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்த நாடாளுமன்ற அமைச்சரவையில் இல்லாமல் போனாலும் கடந்த அமைச்சரவையில் பல முக்கிய முடிவுகளை நாட்டுக்காக எடுத்திருக்கிறார். இவருடைய தலைமையில் தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.

பிரமோத் மகாஜனுக்குப் பிறகு பாஜக தலைவர்களில் மக்கள் விரும்பும் தலைவராக இருந்தவர். கருணாநிதி வலுக்கட்டாயமாக கைது செய்த போது, பாஜகவின் வாஜ்பேயி சொன்னதைக் கேட்டு மிக வலுவான கண்டணத்தை ஜெயலலிதாவுக்கு எதிராக வைத்தவர்.

தகவல் தொலைதொடர்புத் துறை அமைச்சர், சட்ட அமைச்சர் என பல பதவிகளை வகித்தார்.

குடும்பம்

குடும்பம்

இவருடைய மனைவியின் பெயர் சங்கீதா. இவருக்கு சோனாலி என்ற மகளும் ரோஹன் என்ற மகனும் இருக்கிறார்.

கார்டியாலஜி

கார்டியாலஜி

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் கார்டியாலஜி துறைக்கு மாற்றப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்த பின்பு, அவருக்கு மூச்சுத் திணறல் தான் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்தனர். நிதின் கட்காரி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் மேற்கொண்ட சர்க்கரை நோய்க்கான அறுவை சிகிச்சையும் எடுத்துக் கொண்ட பின்தான், சிறுநீரகக் கோளாறும் சிறுநீரகப் புற்றுநோயும் ஏற்பட்டு, அதன் காரணமாகத் தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

MOST READ: பெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா? இதோ தெரிஞ்சிக்கங்க...

தொடர் கண்காணிப்பு

தொடர் கண்காணிப்பு

இதயம் மற்றும் நெப்ராலிஸ்ட் துறையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜேட்லிக்கு 66 வயது நிறைவுற்றிருக்கிறது. வயதின் காரணமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டதும், தற்போது வரை தொடர்ந்து அவருடைய உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அருண் ஜேட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அருண் ஜேட்லியின் உடல்நிலையை விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். அதன்பிறகு, அரசுமுறைப் பயணமாக பூடானும் சென்று அடுத்து பிரான்ஸ் போன்ற உலகப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நாடு திரும்புவாரா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு, பிறகு தன்னுடைய பயணத்தைத் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

மருத்துவமனைக்கு பிரதமர் செல்லும் முன்பாகவே மத்திய அமைச்சர் அமித்ஷா, ஹர்ஷவர்தன் மற்றும் ஸ்பீக்கர் ஓம் பிர்லா ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்திருக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று காலையிலேயே வெங்கைய்யா நாயுடு மருத்துவமனைக்கு நலம் விசாரிக்கச் சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து கட்சியில் உள்ள தலைவர்கள், அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனை சென்று நலம் விசாரித்து வந்தார்கள்.

சிகிச்சை

சிகிச்சை

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அருண் ஜேட்லிக்கு அவ்வப்போது உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் நடந்தது. இவருக்கு நீரிழிவு நோய் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை பயப்படும்படி எதுவும் இல்லை. வெறுமனே மூச்சுத்திணறல் தான். இயல்பு நிலையில் உள்ளார் எனவும் தொடர்ந்து அவருடைய உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தனர்.

மரணித்தார்

மரணித்தார்

உடல்நிலை ஸ்டேபிளாக இருப்பதாகவும் கொடுக்கப்படும் சிகிச்சையை அவருடைய ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, உயிர் காக்கும் உபகரணங்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 24 ஆம் தேதியான இன்று மதியம் 12 மணியளவில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

பேசிய முக்கிய விஷயங்கள்

பேசிய முக்கிய விஷயங்கள்

மனிதநேயம்

மனித நேயம் பற்றி அவர் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அதில் ஒன்று, சமுதாயத்தில் பலவீனமான பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்களேயானால் அது வலிமையானவர்களால் கவனிக்கப்பட்ட வேண்டும் என்பது தான் மனிதநேயம்.

இனிமையான பேச்சு

இனிமையான பேச்சு

அடுத்தவர்களை வெறுக்கும் படி எப்போதும் யாரும் பேசக்கூடாது என்று சொன்னவர். அவரும் அப்படித்தான். எல்லோரிடமும் அக்கறையுடன் அன்புடனும் நடந்து கொள்வார். அது எதிர்கட்சியாக இருந்தாலும் சரிதான்.

MOST READ: எலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...

மாற்றம்

மாற்றம்

மாற்றம் என்பது மாறாதது. அது எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கும். அதனால் மாற்றங்களைக் கண்டு அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடாது என்றும் அது நம்மை எங்கும் அழைத்துச் செல்லப் போவதில்லை என்பதால் நிதானம் காக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மானியம்

மானியம்

தங்களுடைய அரசு நாட்டில் நடக்கும் மானியக் கசிவைத் தடுக்க வேண்டும். அது அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்று என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

MOST READ: டாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா?

குவாண்டம் ஜம்ப்

குவாண்டம் ஜம்ப்

அதிகரிக்கின்ற மாற்றங்கள் நம்மை பெரிதாக எங்கும் அழைத்துச் செல்லப் போவதில்லை என்பது தெரிந்தது தான். ஆனாலும் நாம் குவாண்டம் அளவு ஜம்ப் செய்து முன்னேற வேண்டிய கட்டாயத்திலும் கடமையிலும் இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Arun Jaitley passes away: Important Qoutes of Jaitely #arunjaitely

Venkaiah Naidu visited Arun Jaitley at the All India Institute of Medical Sciences (AIIMS) on Saturday morning. The former Union minister is currently undergoing treatment in the Intensive Care Unit (ICU).
Desktop Bottom Promotion