For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதிஷேசனுக்காக உருவான ஆருத்ரா தரிசனம்!

|

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள மஹாவிஷ்ணு தன்னை மறந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பதைக் கண்டார் ஆதிஷேசன். அதுபற்றி மஹாவிஷ்ணுவிடம் கேட்க, தாருகாவனத்தில் சிவபெருமான் ஆடிய அற்புத நடனம் பற்றி சொல்ல, ஆதிஷேசனுக்கு தானும் அந்த நடனத்தை பார்க்க ஆவல் ஏற்பட்டது. அதற்காக பாதி உடல் மனிதனாகவும் மீதி உடல் பாம்பாகவும் தோன்றி பூவுலகில் தவம் இருந்தார். அவருக்காக சிதம்பரத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடப்படுகிறது.

Arudra Darisanam formed for Adiseshan

எம்பெருமான் ஈசன் ஆடும் நடனத்திற்கு ஏற்பவே இப்பூவுலகம் அசைகிறது என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களின் வாதம். அதற்கேற்பவே, தில்லையில் நடராஜர் ஆடும் நடனமானது காஸ்மிக் நடனம் என்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் உறுதிபடக் கூறுகின்றனர். அணுவை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூட அணுவின் அசைவானது நடராஜர் ஆடும் நடனத்தைப் போலவே இருப்பதாக ஒப்புக்கொண்டனர்.

அதை உணர்ந்தோ என்னவோ, திருமந்திரம் அருளிய திருமூலர் கூட அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறியிருக்கிறார். பிரபஞ்சம் உருவாக காரணமான ஹிக்ஸ் போசான் என்னும் கடவுளின் துகள் பற்றிய ஆராய்ச்சி நடத்துவதற்கு பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி கடவுள் துகள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய விஞ்ஞானிகள் கூட முதலில் பயந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்துல் கலாமின் ஐடியா

அப்துல் கலாமின் ஐடியா

நமது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அவர்கள் தான், கவலைப்பட வேண்டாம். அணுவும் நானே, அண்டமும் நானே என்று நடராஜ பெருமான் அருளியிருக்கிறார். நீங்கள் உங்களுடைய ஆராய்ச்சியை தொடங்குவதற்கு முன்பு, அங்கு ஒரு நடராஜர் சிலையை வைத்து வணங்கிவிட்டு பிறகு உங்கள் ஆராய்ச்சியை தொடங்குங்கள், உங்களுடைய ஆராய்ச்சி எந்தவிதமான தடங்களும் ஆபத்தும் இன்றி வெற்றிகரமாக முடியும் என்று ஆலோசனை வழங்கினார்.

நடராஜர் நடனமும் அணுவின் சுழற்சியும்

நடராஜர் நடனமும் அணுவின் சுழற்சியும்

அணு விஞ்ஞானிகளும் அப்துல் கலாமின் ஆலோசனைப்படியே, நடராஜர் சிலையை வைத்து வணங்கி அதன் பின்னர் அணு ஆராய்ச்சியை தொடங்கியதோடு, அதனை வெற்றிகரமாக முடித்தும் விட்டனர். அது தான் கடவுள் துகள் என்று சொல்லப்பட்ட ஹிக்ஸ் போசன் துகள் ஆகும். அந்த அணுவின் சுழற்சியை ஆராய்ந்த விஞ்ஞானிகள், அது தில்லையில் ஆடும் நடராஜரின் நடனத்தை ஒத்திருப்பதாக வியந்தனர். இந்துக்களாகிய நாம் அதனை ஆனந்த தாண்டவம் என்று போற்றுகிறோம்.

சிவபெருமான் தேவையில்லை

சிவபெருமான் தேவையில்லை

இந்த ஆனந்த தாண்டவமே பின்னாளில் ஆருத்ரா தரிசன நிகழ்வாக உருவாகவும் காரண கர்த்தாவாக இருந்தது. முன்னொரு காலத்தில், வேதங்களை கரைத்து குடித்த முனிவர்களும் ரிஷிகளும் தாருகா வனம் என்ற இடத்தில் வசித்து வந்தனர். அவர்கள் நால்வகை வேதங்களையும் கற்றறிந்ததால் கர்வம் தலைக்கேறியது. கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. கர்ம மார்க்கமே சிறந்தது. அவரவர் செய்த கர்மங்களே பலன்களை அளிப்பதால், உயிர்கள் தாங்களாகவே கர்ம பலன்களை அனுபவிப்பதாலும், ஈசன் என்ற ஒருவர் தேவையில்லாத ஒன்று என்று கர்வம் கொண்டு திரிந்தனர்.

பிட்சாடனர் மோகினி அழகில் மயக்கம்

பிட்சாடனர் மோகினி அழகில் மயக்கம்

அந்த கர்வத்தினால் எங்களால் தான் அனைத்தும் நடக்கிறது, அப்புறம் ஈசன் எதற்கு என்று அளவுக்கதிகமாக ஆட்டம் போட ஆரம்பித்தனர். முனிவர்களின் கர்வத்தை போக்க எண்ணிய ஈசன், பிட்சாடனர் கோலத்தில் உடன் மஹாவிஷ்ணுவையும் மோகினி வடிவத்தில் அழைத்துக் கொண்டு தாருகா வனத்திற்கு சென்றனர். தாருகா வனத்தில் இருந்த பெண்கள் அனைவரும் பிட்சாடனர் அழகில் மயங்கி அவரை பின் தொடர, பல முனிவர்கள் மோகினியை பின் தொடர்ந்து சென்றனர்.

ஈசனின் புலித்தோல் ஆடை

ஈசனின் புலித்தோல் ஆடை

இதனால் அன்றாடம் நடக்க வேண்டிய யாகம் தடைபட்டது. மிச்சமிருந்த முனிவர்கள் ஒன்று சேர்ந்து நிலைமையை சரிசெய்ய நினைத்தனர். இதற்காக அபிசார வேள்வி ஒன்றை நடத்த ஆரம்பித்தனர். அந்த வேள்வியில் இருந்து முதலில் புலி ஒன்று வெளிப்பட்டது. அதை பிட்சாடனர் மீது ஏவினர். ஆனால் பிட்சாடனர் புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டார்.

முயலகனை அனுப்பிய முனிவர்கள்

முயலகனை அனுப்பிய முனிவர்கள்

அடுத்ததாக, வேள்வியிலிருந்து மான், நெருப்பு ஆகியவற்றை அனுப்ப, அவற்றின் வீரியத்தை குறைத்து தன் கைகளில் ஏந்திக் கொண்டார். அடுத்ததாக வேள்வியிலிருந்து வெளிப்பட்ட யானையை அனுப்பினர். பிட்சாடனர் அதைக் கொன்று அதன் தோலை மேலாடையாக போர்த்திக் கொண்டார். இதைக் கண்ட முனிவர்கள் தங்களின் முழு ஞானத்தையும் பயன்படுத்தி வேள்வியில் இருந்து முயலகன் என்ற அரக்கனை உருவாக்கி பிட்சாடனரை அனுப்பி வைத்தனர்.

நடராஜரின் ஆனந்த நடனம்

நடராஜரின் ஆனந்த நடனம்

பிட்சாடனர், முயலகனை பிடித்து தன்னுடைய காலடியில் போட்டு அமுக்கி விட்டார். இதனால், செய்வதறியாது திகைத்த முனிவர்கள் வந்திருப்பது தங்களையும் மீறிய சக்தியான ஈசனே என்பதை அறிந்து கொண்டு, தங்களை மன்னித்தருள வேண்டினர். அப்போது அங்கு வந்த நந்தி தேவர் மத்தளம் வாசிக்க, மோகினி வடிவத்திலிருந்த மஹாவிஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க, முனிவர்களின் அறியாமையை நீக்க பேருள்ளம் கொண்ட ஈசனும் நடராஜ மூர்த்தியாக ஆனந்த தாண்டவம் ஆடினார். அதைக் கண்ட தாருகா வனத்து முனிவர்களும் புண்ணியம் அடைந்தனர்.

ஆதிஷேசனின் ஆவல்

ஆதிஷேசனின் ஆவல்

ஒரு நாள் இந்த நிகழ்வை நினைத்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டருளும் மஹாவிஷ்ணு, தன்னை மறந்து ஆனந்தத்தில் திளைத்திருக்க, அதைக் கண்ட ஆதிஷேசன் காரணம் கேட்க, மஹாவிஷ்ணுவும் தாருகா வனத்தில் நடந்த நிகழ்வையும், அங்கு ஈசன் நிகழ்த்திய ஆனந்த தாண்டவ நடனத்தைப் பற்றியும் ஆதி ஷேசனுக்கு சொல்ல, அவருக்கும் அந்த அற்புத நடனத்தைக் காண ஆவல் உண்டானது.

பதஞ்சலியான ஆதிஷேசன்

பதஞ்சலியான ஆதிஷேசன்

ஆதிஷேசனும் உடனடியாக பதஞ்சலி என்ற பெயரில், பாதி மனித உடலாகவும் பாதி பாம்பு உடலாகவும் தோன்றி பூவுலகில் தவம் புரியத் தொடங்கினார். அந்த தவத்தின் பயனாக பதஞ்சலி மகரிஷி முன் தோன்றிய ஈசன், உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண்பதற்காக ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் இணைந்து தில்லைவனம் என்றழைக்கப்படும் சிதம்பரத்திற்கு வாருங்கள், அங்கே உங்கள் ஆவல் பூர்த்தியாகும் என்றார்.

திருவாதிரை நாளில் தரிசனம்

திருவாதிரை நாளில் தரிசனம்

ஈசன் சொன்னது போல், மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு நன்னாளில், மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. திருவாதிரை என்ற நட்சத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்பது பொருளாகும். அதுவே பின்னாளில் மருவி ஆருத்ரா என மாறியது.

பிறவிப் பிணி நீக்கும் ஆருத்ரா தரிசனம்

பிறவிப் பிணி நீக்கும் ஆருத்ரா தரிசனம்

திருவாதிரை நட்சத்திரம் ருத்ரனின் அம்சமாகும். திருவாதிரை நட்சத்திரத்தன்று ஈசனின் ஆனந்த நடன தரிசனம் கிடைத்ததால் அது ஆருத்ரா தரிசனம் என்று சொல்லப்படுகிறது. அந்நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டு களித்தால் சகலவித சுகபோகங்களும் கிடைக்கப்பெற்று பிறவிப் பிணி நீங்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Arudra Darisanam formed for Adiseshan

Adiseshan found that Mahavishnu in the Thiruparkadal had forgotten himself and soaked in happiness. To ask Mahavishnu about the miracle dance performed by Lord Shiva in the Daruka vanam forest, Adiseshan himself was eager to see the dance. For that, half the body was human and the rest was a snake in the earth. For him, Lord Siva performed the Ananda Nadanam again on the day of the Margazhi month Thiruvathirai in Chidambaram. That day is celebrated as Arudra Darisanam Day.
Story first published: Saturday, January 4, 2020, 13:35 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more