Aries Horoscope 2022: மேஷ ராசிக்காரர்களுக்கு 2022 எப்படி இருக்கப் போகுது தெரியுமா?

2022 ஆம் ஆண்டு கல்வி, தொழில், வியாபாரம் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு பலன் தரும் ஆண்டாக இருக்கும். திருமணமாகாதவர்கள் புதிய உறவுகளை இந்த ஆண்டு பெறுவார்கள்.

வேத ஜோதிடத்தில் 2022 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி பல விஷயங்கள் கணித்து கூறப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டின் படி, ஏப்ரல் 13 ஆம் தேதி குரு மீனத்தில் 12 ஆவது வீட்டில் சஞ்சரிக்கிறார். ராகு மேஷ ராசியின் முதல் வீட்டில் மார்ச் 17, 2022 அன்று சஞ்சரிக்கிறார். 2022 ஏப்ரல் 29 அன்று சனி கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிலும், 2022 ஜூலை 12 ஆம் தேதி மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சென்று, அதன் பின் பிற்போக்கில் சஞ்சரிக்கிறார்.

Aries Horoscope 2022 Mesha Rasi Palan, Aries Yearly Horoscope Predictions In Tamil

இம்மாதிரியான கிரக சஞ்சாரங்களால் மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் நற்பலன்களைப் பெறப்போகிறார்கள். முக்கியமாக இந்த ஆண்டில் இவர்கள் புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ராசிக்காரர்கள் எதிர்காலத்தைப் பற்றி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். ஆண்டின் முதல் பாதியில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக தீட்டிய திட்டங்களை இரண்டாம் பாதியில் செயல்படுத்துவார்கள். சொல்லப்போனால் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி தொழில் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேஷ ராசிக்காரர்கள் ஆண்டின் முதல் பாதியில் போதுமான பணத்தை சம்பாதிப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டும். ஏனெனில் அந்த பணம் ஆண்டின் இறுதியில் மிகவும் உதவியாக இருக்கும். 2022 ஆம் ஆண்டு கல்வி, தொழில், வியாபாரம் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு பலன் தரும் ஆண்டாக இருக்கும். வேலையில் அதிக நேரத்தை செலவிட வேண்டியிருப்பதால், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தரமான நேரத்தை செலவிட முடியாது. திருமணமாகாதவர்கள் புதிய உறவுகளை இந்த ஆண்டு பெறுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2022 இல் மேஷ ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை

2022 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்கள் நல்ல காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள். தம்பதிகளிடையே சிற்றின்பம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் இந்த ஆண்டு மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது. தம்பதிகள் தங்கள் துணையுடன் சில மோதல்களை சந்திப்பார்கள். இருப்பினும் பரஸ்பர புரிதல்கள் மோதல்களை சரிசெய்யும்.

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை

2022 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும். மே நடுப்பகுதியில் இருந்து அக்டோபர் வரை மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் மற்றும் தொழில் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சாதகமான காலம் இது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேஷ ராசிக்காரர்களின் ஆற்றல் குறைவாக இருக்கும். சிக்கல்கள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகள் மோசம் செய்வார்கள், நிதி சிக்கல்கள் ஆரம்பமாகும். ஆனால் எக்காரணம் கொண்டும் கடன்களை வாங்கவோ, பணத்தை முதலீடு செய்யவோ, பெரிய அளவில் செலவு செய்யவோ, முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் கல்வி

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் கல்வி

2022 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்கார மாணவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். ஆண்டின் தொடக்கத்தில், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையால் ஜனவரி முதல் மார்ச் வரை கலவையான முடிவுகளை பெறுவார்கள். ஆனால் ஜூலை முதல் நவம்பர் வரை மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை

2022 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை ஆண்டு முழுவதும் வலுவாக இருக்கும். இருப்பினும் செலவுகளும் ஏற்படும். ஆனால் அவ்வாறு செய்யும் செலவுகள் உண்மையில் மதிப்புமிக்கதாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் பணம் எளிதாகவும் புத்திசாலித்தனமாகவும் வரும்.

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை

2022 ஆம் ஆண்டின் ஆரம்பம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். குரு மற்றும் சனி நான்காவது வீட்டில் இணைந்திருப்பதால், குடும்பத்தில் அமைதியான மற்றும் இணக்கமான சூழ்நிலை இருக்கும். ஆண்டின் இறுதியில் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இது உங்களை மகிழ்விக்கும். மேலும் நீங்கள் ஆன்மீகம் மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் நாட்டம் கொள்வீர்கள்.

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் குழந்தை

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் குழந்தை

மேஷ ராசிக்காரர்களின் குழந்தைகளைப் பொறுத்தவரை, ஆண்டின் ஆரம்பம் சாதகமாக இருக்கும். 5 ஆவது வீட்டில் குரு இருப்பதால், உங்கள் குழந்தைகள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதுமணத் தம்பதிகள் இந்த ஆண்டில் ஒரு நற்செய்தியை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகள் கல்வியில் முன்னேறுவார்கள். உங்களுக்கு திருமண வயதில் இரண்டாவது மகன்/மகள் இருந்தால், அவருக்கு திருமணம் நடத்த வாய்ப்புள்ளது. 2022 ஏப்ரல் 13 அம் தேதிக்கு பிறகு சற்று கடினமான காலமாக இருக்கும். ஆனால் ஆண்டின் இறுதியில், தனுசு ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வது குழந்தை பேறுக்கான நல்ல யோகத்தை உருவாக்கும். இதுவரை குழந்தை பெற்றெடுக்க முடியாமல் வலியையும் வேதனையையும் சந்திப்பவர்களுக்கு, இந்த ஆண்டு அது நீங்கும்.

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு மிகவும் நல்ல ஆண்டு. குரு 11 ஆவது வீட்டில் இருப்பதால் காதல் அல்லது திருமண உறவு வலுவடையும். திருமணமாகாதவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குரு பகவான் காதல் வீட்டில் இருப்பதால், சமூக வட்டம் விரிவடையும். இந்த ஆண்டில் அதிக நண்பர்களை உருவாக்குவீர்கள். நீங்கள் காதலித்தால், அது திருமணத்தை நோக்கி நகரும். திருமணமானவர்களின் வாழ்க்கை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும்.

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் வியாபாரம்

2022 இல் மேஷ ராசிக்காரர்களின் வியாபாரம்

2022-இல் மேஷ ராசிக்கார வணிகர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். இது வணிகத்தை விரிவுப்படுத்த உதவும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கியவர்களுக்கு சாதகமான ஆண்டாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் 2022 ஆம் ஆண்டில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். புதிய ஒன்றில் முதலீடு செய்வதால் லாபம் கிடைக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருங்கள். ஆண்டின் நடுப்பகுதியில் வியாபாரிகள் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். ஆண்டின் இறுதியில் வியாபாரிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவித இழப்பை சந்திக்க நேரிடும்.

2022-இல் சொத்து மற்றும் வாகனம்

2022-இல் சொத்து மற்றும் வாகனம்

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுக்கிரன் மகர ராசியில் இருக்கிறார். எனவே ஆண்டின் தொடக்கத்தில் வாகனம் வாங்கும் வாய்ப்புள்ளது. ஆனால் சனி 10 ஆம் வீட்டில் அமர்வதால், மேஷ ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சனியின் ஏழாம் பார்வை நான்காம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு அல்லது உங்கள் வாகனத்திற்கு சேதம் ஏற்படலாம்.

2022-இல் செல்வம் மற்றும் லாபம்

2022-இல் செல்வம் மற்றும் லாபம்

2022 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு சில நிதி நெருக்கடிகளைத் தரவுள்ளது. நிதி தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், தொடர்ந்து முன்னேறி செல்வீர்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். குரு பகவானின் சஞ்சாரம் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் மற்றும் அனைத்து வகையான மன பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்கும். ஆண்டின் இறுதியில் மேஷ ராசிக்காரர்கள் செல்வத்திலும், லாபத்திலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆண்டின் இறுதியில் ராகு மேஷ ராசியின் முதல் வீட்டில் இருப்பதால், சம்பாதிக்க பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதே வேளையில் செலவுகளும் அதிகரிக்கும். குறிப்பாக அதிக மருத்துவ செலவு செய்வீர்கள். ஆகவே, மேஷ ராசிக்காரர்கள் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே பணத்தை சேமிப்பதில் கவனத்தை செலுத்த மறக்கக்கூடாது.

2022-இல் ஆரோக்கியம்

2022-இல் ஆரோக்கியம்

2022 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவு, யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இப்படி இருந்தால், ஆண்டின் இறுதியில் வரவுள்ள மருத்துவ செலவுகளைத் தவிர்க்கலாம்.

2022-இல் மேஷ ராசிக்கான அதிர்ஷ்ட எண்

2022-இல் மேஷ ராசிக்கான அதிர்ஷ்ட எண்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு 6 மற்றும் 9 அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி 2022 ஆம் ஆண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் செழிப்புடன் இருப்பீர்கள் என்றும் கூறுகிறது. இந்த ஆண்டு குரு மற்றும் சனி சுப வீடுகளில் இருப்பதால், இந்த ஆண்டு பெரும்பாலும் சாதகமாக இருக்கும்.

2022-இல் மேஷ ராசிக்கான ஜோதிட பரிகாரங்கள்

2022-இல் மேஷ ராசிக்கான ஜோதிட பரிகாரங்கள்

* ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அனுமனுக்கு சமேலி அல்லது மல்லிகை எண்ணெய் மற்றும் செந்தூரை வாங்கிக் கொடுப்பது நல்லது.

* எப்போதும் சிவப்பு நிற கைக்குட்டை பயன்படுத்துங்கள் அல்லது சிவப்பு நிற கயிற்றை கையில் கட்டியிருங்கள். ஏனெனில் இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரக்கூடும்.

* உங்கள் வீட்டில் மஹாமிருத்யுஞ்சய யந்திரத்தை வைத்து தினமும் வழிபட்டு வாருங்கள்.

* வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற பருப்பு அல்லது வாழைப்பழத்தை தானம் செய்து வாருங்கள்.

* ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதம் இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion