For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Aquarius Horoscope 2023: கும்ப ராசிக்காரர்களுக்கு 2023 எப்படி இருக்கப்போகுது? எந்த விஷயத்துல கவனமா இருக்கணும்?

2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அனைவருமே ஆவலாக இருப்போம். நீங்கள் கும்ப ராசியா? உங்களுக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

|
Aquarius Horoscope 2023 Kumbam Rasi Palan, Kumbam Yearly Horoscope Predictions In Tamil

2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அனைவருமே ஆவலாக இருப்போம். ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று ஏற்கனவே கணித்து கூறப்பட்டுள்ளது. நீங்கள் கும்ப ராசியா? உங்களுக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே கும்ப ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் ஆரோக்கியம், தொழில் வாழ்க்கை, நிதி நிலை, கல்வி, திருமண வாழ்க்கை போன்றவை எப்படி இருக்கும், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளதா போன்றவை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து 2023 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2023-ல் காதல்

2023-ல் காதல்

2023 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையில் நல்ல இணக்கத்தை அனுபவிப்பார்கள். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம், ஆனால் மார்ச் 13 ஆம் தேதி செவ்வாய் 5 ஆவது வீட்டிற்கு மாறும் போது உறவு மிகவும் பதட்டமாக இருக்கும். இருவரும் வாதிடுவதற்கான வாய்ப்பு உள்ளது, கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முயலாவிட்டால், உறவில் விரிசல் ஏற்படும். ஆண்டின் பிந்தைய காலத்தில் உறவில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நிலைமை சீராகும். மே மாதத்தில் நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு ரொமான்டிக்கை உணர்வீர்கள். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்குள் திருமண செய்வதற்கு இருவரும் முடிவெடுப்பீர்களள். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அழகான தருணங்களைப் பகிர்ந்து கொள்ள அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

2023-ல் தொழில் வாழ்க்கை

2023-ல் தொழில் வாழ்க்கை

2023 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் குழப்பமான சூழ்நிலைகள் எழும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு தொந்தரவு செய்யலாம். உங்களுக்கு எதிராக சதித்திட்டங்களையும் தீட்டலாம். இதனால் வேலையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் ஆண்டின் உங்கள் ஆரம்பம் நன்றாக இருக்கும். உங்கள் வேலையில் உறுதியாக இருப்பீர்கள். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் வேலைகளை மாற்ற முயற்சி செய்யலாம். மே முதல் ஆகஸ்ட் வரை உங்கள் எதிரிகள் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள். மேலும் வேலையில் சவாலான காலகட்டத்தை அனுபவிப்பீர்கள். செப்டம்பர் முதல் விஷயங்கள் படிப்படியாக மாறத் தொடங்கும் மற்றும் நவம்பர் மற்றும் டிசம்பரில் உங்கள் தொழில் செழிக்கும்.

2023-ல் கல்வி

2023-ல் கல்வி

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசிக்கார மாணவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வெற்றி பெறுவதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுப்பீர்கள். அந்த முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். ஆண்டின் முதல் காலாண்டில் சிறந்து விளங்குவீர்கள் மற்றும் குறைவான சவால்களையே அனுபவிப்பீர்கள். மே முதல் செப்டம்பர் வரை உங்கள் படிப்பில் பல வகையான கவனச்சிதறல்கள் இருக்கும். மன அழுத்தமும் இருக்கும். வீட்டுச்சூழலால் படிப்பு சற்று பாதிக்கப்படும். ஆனால் கடினமாக உழைத்தால் ஆண்டின் கடைசி சில மாதங்கள் உங்களுக்கு வெற்றிகரமாக இருக்கும். மே, ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசை ஆண்டின் முதல் மாதத்தில் நிறைவேறும்.

2023-ல் நிதி நிலை

2023-ல் நிதி நிலை

2023-ல் கும்ப ராசிக்காரர்கள் நிதி ரீதியாக ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பார்கள். ஆனால் அது ஆண்டில் தொடக்கத்தில் மட்டுமே. ஜனவரி மாதத்தில் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும் குருவின் நிலையில் நிதி நிலைமை சாதகமாக இருக்கும். நிதிகளை உங்களால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சனி பகவான் கும்ப ராசிக்கு வந்தவுடன் நிலைமைகள் மேம்படும். இந்த ஆண்டு பலவிதமான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கும். பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க விரும்பினால், அந்தத் துறையிலும் நீங்கள் நிறைய வெற்றிகளை காண்பீர்கள். குறிப்பாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

2023-ல் குடும்ப வாழ்க்கை

2023-ல் குடும்ப வாழ்க்கை

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குடும்ப உறவுகளில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வீட்டுச் சூழல் சற்று மோசமாக இருக்கும். ஆனால் ஜனவரி 17க்குப் பிறகு, சனியின் ராசி மாறும்போது விஷயங்கள் சிறப்பாக இருக்கும். உங்கள் பேச்சு இனிமையாக மாறும், இது குடும்ப பிரச்சினையை சமாளிக்க உதவும். ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உடன்பிறந்தவர்களுடன் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கவும். செப்டம்பர் முதல் அக்டோபர் வரை வீட்டுச் சூழல் உற்சாகமாக இருக்கும். நவம்பர் முதல் டிசம்பர் வரை குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் மேற்கொள்வீர்கள்.

2023-ல் குழந்தைகள்

2023-ல் குழந்தைகள்

2023 ஆம் ஆண்டின் தொடக்கம் கும்ப ராசிக்காரர்களின் குழந்தைகளுக்கு நன்றாக இருக்கும். உங்கள் குழந்தைகளை சரியான ஒழுக்கத்துடன் வளர்க்க முயற்சிப்பீர்கள். உங்கள் குழந்தைகள் மரியாதையுடனும் ஒழுக்கத்துடனும் இருக்க கற்றுக்கொள்வார்கள். இருப்பினும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் அவர்களின் குணாதிசயங்களிலும் கோபத்தின் அளவிலும் சில மாறுபாடுகள் இருக்கும். இக்காலத்தில் அவர்களுடன் ஒரு நல்ல நண்பராக பழக முற்சிப்பது நல்லது. ஜூலை செப்டம்பர் மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் உங்கள் குழந்தை குறிப்பிட்ட வளர்ச்சியைக் காண்பார்கள்.

2023-ல் திருமண வாழ்க்கை

2023-ல் திருமண வாழ்க்கை

2023 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களின் திருமண மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் ஜனவரி மாதத்தில் திருமண வாழ்க்கை சற்று பதட்டமாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடனான உறவுகள் அவ்வளவு நன்றாக இருக்காது. ஜனவரியில் நிகழும் சனிப் பெயர்ச்சிக்குப் பின் தம்பதிகளுக்கு இடையேயான பிணைப்பு அதிகரிக்கும். இருவரும் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்குவீர்கள். மார்ச் மாதத்தில் திருமண வாழ்வில் விஷயங்கள் மேம்படும். ஜூலை மாத தொடக்கத்தில் செவ்வாய் நிலையால் மீண்டும் டென்ஷன் அதிகரித்து வாக்குவாதங்கள் ஏற்படலாம். எனவே ஜூலை 1 மற்றும் ஆகஸ்ட் 18 க்கு இடையில் நீங்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சூழ்நிலை எவ்வளவு சவாலானதாக இருந்தாலும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் உங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் குறைகள் தீர்ந்து உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

2023-ல் வியாபாரம்

2023-ல் வியாபாரம்

2023 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு வியாபாரம் ரீதியாக சாதகமாக இருக்கும். இந்த ஆண்டில் சில குறிப்பிடத்தக்க வணிக ஒப்பந்தங்களை உருவாக்க முயற்சிப்பீர்கள். இது உங்களுக்கு சாதகமாக இருக்கும். விடாமுயற்சியின் பலனாக வெற்றி பெறுவீர்கள். புதிய தொடர்புகளை ஏற்படுத்துவீர்கள். வணிகம் நிலையானதாக இருக்கும். வெளிநாட்டு தொடர்புகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். மார்ச் முதல் மே வரையிலான மாதங்கள் மற்றும் அதன்பின் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள் வணிக ரீதியாக வெற்றிகாரமானதாக இருக்கும். ஏப்ரல் மாதம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் அனுபவசாலிகளின் உதவியால், வியாபாரத்தை நல்ல வழியில் நடத்துவீர்கள்.

2023-ல் சொத்து மற்றும் வாகனம்

2023-ல் சொத்து மற்றும் வாகனம்

2023-ல் கும்ப ராசிக்காரர்கள் எந்தவிதமான வாகனத்தையும் ஓட்டக்கூடாது. ஏனெனில் வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கார் வாங்க விரும்பினால் ஏப்ரல் 6 முதல் மே 2 வரையிலான காலகட்டம் சிறந்ததாக இருக்கும். ஜூன் மாதம் இன்னும் அற்புதமான காலமாக இருக்கும். தேவைப்பட்டால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் வாகனம் வாங்குவது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு ரியல் எஸ்டேட் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மார்ச் வரை இந்த காலம் நன்றாக இருக்கும். மே 10 முதல் ஜூலை 1 வரை எந்த வகையிலும் சொத்துக்களை வாங்குவதைத் தவிர்க்கவும், ஆகஸ்ட் 18 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நவம்பர் 16 முதல் டிசம்பர் 27 வரை தரமான ரியல் எஸ்டேட் வாங்கலாம்.

2023-ல் ஆரோக்கியம்

2023-ல் ஆரோக்கியம்

2023 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கண் பிரச்சனைகள், கண் நோய்கள், கண்களில் நீர் வடிதல், கால் வலி அல்லது முறிவு, அல்லது முடக்கு வாதம் போன்றவை பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. சனிப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியம் மேம்படும். இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் குரு, சூரியன் மற்றும் ராகு 3 ஆவது வீட்டில் இருக்கும் போது, தோள்பட்டை காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, தொண்டை புண், டான்சில்ஸ் வளர்ச்சி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் நல்ல ஆரோக்கியத்தைப் பெற, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aquarius Horoscope 2023 Kumbam Rasi Palan, Kumbam Yearly Horoscope Predictions In Tamil

Kumbam Rasi Palan 2023: Check out the Aquarius yearly horoscope 2023 predictions related to life, love, marriage, career, education, finance, health and more in tamil. Read on.
Story first published: Monday, December 5, 2022, 10:09 [IST]
Desktop Bottom Promotion