Just In
- 3 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 5 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 10 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 11 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- Movies
தொடர்ந்து பிளாப் படங்கள்.. கீர்த்திக்கு கைக் கொடுக்காத சொந்தப் படம்.. எப்பதாங்க ஹிட் கொடுப்பீங்க?
- News
காலேஜ்ல டான் பட ஹீரோ மாதிரி நான்! எங்கப்பா படிக்க வேண்டாம்ணு சொல்லிட்டார்! கே.என்.நேரு கலகல!
- Finance
ஜூலை மாதம் மட்டும் வங்கிகள் 14 நாள் விடுமுறை.. தமிழ்நாட்டில் எத்தனை நாள் லீவ்..?!
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Aquarius Horoscope 2022: சனியின் வருகையால் கும்ப ராசிக்காரர்களுக்கு 2022 எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
நீங்கள் கும்ப ராசியா? 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா? ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் சாதகமாக இருக்கும். நிதி ரீதியாக, இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். ஜனவரி மாதத்தில் நிகழும் செவ்வாய் பெயர்ச்சியால் பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெறுவீர்கள். மார்ச் மாத ஆரம்பத்தில் சனி, செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய நான்கு முக்கிய கிரகங்களின் சேர்க்கையானது உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற உதவுவதோடு, நல்ல செல்வத்தைப் பெறவும் உதவும். இந்த ஆண்டு ஆரோக்கியம் சராசரியாக இருக்கும். ஆனால் ராகு பெயர்ச்சிக்கு பின் உங்கள் உடன்பிறப்புகள் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இதுப்போன்று பல விஷயங்களை கிரக நிலைகளைக் கொண்டு ஜோதிடத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் சனி பகவான் கும்ப ராசிக்கு வருவதால், சனி பகவான் வருகையால் எம்மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். நீங்கள் கும்ப ராசிக்கான முழு பலனையும் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவராயின் தொடர்ந்து படியுங்கள்.

2022-ல் காதல் வாழ்க்கை
2022-ல் கும்ப ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சராசரியாகவே இருக்கும். அதற்கு உங்கள் துணையின் முரட்டுத்தனமான நடத்தை காரணமாக இருக்கலாம். குறிப்பாக காதல் உறவில் ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் புரிதலின்மையின் காரணமாக இருக்கலாம்; எனவே அவற்றைப் புரிந்துகொண்டு தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஆனால் இந்த ஆண்டின் இறுதியில் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இது உங்கள் உறவை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் மாற்றும்.

2022-ல் தொழில் வாழ்க்கை
2022-ல் கும்ப ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, சில சவால்களையும் சில ஏற்ற தாழ்வுகளையும் சந்திக்க நேரிடும். கார்ப்பரேட் துறை மற்றும் அரசுத் துறைகளில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கலாம். இந்த ஆண்டில் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். பணியிடத்தில் விஷயங்கள் குழப்பமாகவோ அல்லது கடினமாகவோ இருக்கும்போது பொறுமையுடன் சூழ்நிலையை கையாள வேண்டும். உங்கள் பணி வாழ்க்கையில் நீங்கள் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் அல்லது மோதலில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சக ஊழியர்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்வது நல்லது. தற்போது வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்ல வேலை கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதி மிகவும் செழிப்பாக இருக்கும்.

2022-ல் நிதி நிலைமை
2022 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும். வரவைப் போல செலவும் இருக்கும். உங்களால் போதுமான அளவு பணத்தை சேமிக்க முடியாமல் போகலாம். ஆனால் இந்த ஆண்டில் சொத்து மற்றும் நகைகளை வாங்குவீர்கள். குடும்ப நிகழ்ச்சிகளால் செலவுகள் அதிகமாக இருக்கும்.

2022-ல் கல்வி
2022ல் கும்ப ராசிக்கார மாணவர்கள் படிப்பில் தடைகளையும் சந்திக்கமாட்டார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு விரும்பிய பலன் கிடைக்காமல் போகலாம். உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதம் சாதகமாக இருக்கும். கும்ப ராசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல வாய்ப்புகளையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடும் என்பதால் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது.

2022-ல் குழந்தைகள்
கும்ப ராசிக்காரர்களின் குழந்தைகளுக்கு 2022 ஆம் ஆண்டின் தொடக்கம் சாதகமாக இருக்கும். குருவின் நிலையால், உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆண்டின் தொடக்கத்தில், உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் இரண்டாவது குழந்தைக்கு இது மிகவும் சாதகமான நேரம். திருமண வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகலாம். உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே அவர்களின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருங்கள். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கலாம்.

2022-ல் திருமண வாழ்க்கை
2022 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஆண்டின் தொடக்கத்தில் சராசரி பலன்களப் பெறுவார்கள். சிலர் சில தடைகளை சந்திக்க நேரிடும். ஆனால் போக போக விஷயங்கள் சிறப்பாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால், நிறைய அன்பும் நேரமும் தேவை. மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையை வளமாக்கும், இது காலப்போக்கில் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.

2022-ல் குடும்ப வாழ்க்கை
கும்ப ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் குடும்ப வாழ்க்கையில் பெரிய குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது என்பதால், சராசரியான பலன்களையே பெறுவார்கள். ஆண்டின் முதல் காலாண்டில், நீங்கள் குடும்பத்தில் சில தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும், மேலும் சில சச்சரவுகள் இருக்கலாம், இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே ஆண்டின் முற்பாதியில், நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆண்டின் இரண்டாம் பாதியில், உங்கள் குடும்பத்துடன் விஷயங்களை சிறப்பாகச் செய்வதற்கான வாய்ப்பைக் காண்பீர்கள். ஆண்டின் கடைசி காலாண்டு உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவையும் பெறுவீர்கள்.

2022-ல் வியாபாரம்
2022-ல் கும்ப ராசிக்காரர்களின் வியாபாரத்தைப் பொறுத்தவரை, முதல் காலாண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் வியாபாரத்ல் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். மேலும் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். ஆண்டின் இரண்டாம் பாதியில் சில பிரச்சனைகள் வரலாம். வியாபாரம் வளர அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைப் பெறுவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் நெட்வொர்க்கிங் மூலமாகவும் நீங்கள் பயனடைவீர்கள். இதன் காரணமாக, உங்கள் வணிகத்தின் வேகம் அதிகரிக்கும். ஆண்டின் நடுப்பகுதியில், ஏப்ரல் முதல் ஜூலை வரை, சில தடைகள் இருக்கலாம். எனவே இக்காலத்தில் கவனமாக இருங்கள், வாய்ப்பைப் பயன்படுத்த நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இயந்திரங்கள் அல்லது பட்டறை தொடர்பான வணிகங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்த ஆண்டில் எந்தவொரு வணிகக் கடனையும் வாங்கும்போது, நீங்கள் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

2022-ல் சொத்து மற்றும் வாகனம்
2022-ல் கும்ப ராசிக்காரர்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் ஏப்ரல் மாதம் குரு பெயர்ச்சிக்கு பிறகு சற்று நிம்மதியைத் தரும். மேலும் சொத்து வாங்குவதில் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சொத்துக்களை வாங்க முயற்சிக்கும் போது சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம், மேலும் உங்கள் பட்ஜெட் தொகையை விட அதிகமாக உங்களிடம் இருக்காது. நீங்கள் உங்கள் சொத்தை வாங்க அல்லது விற்க விரும்பினால், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் உங்கள் சொத்தை நல்ல விலைக்கு வாங்கவோ அல்லது விற்கவோ வாய்ப்புகள் உள்ளன.

2022-ல் ஆரோக்கியம்
2022-ல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கும்ப ராசிக்காரர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். இந்த ஆண்டில் சில நாட்பட்ட உடல்நல பிரச்சனைகள் இருந்தாலும், அடிக்கடி செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. இப்படி சந்திக்கும் உடல்நல பிரச்சனைகளால் உங்கள் வேலை பாதிக்கப்படலாம். எனவே உங்கள் உடல்நிலையை மேம்படுத்த மன ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்துங்கள்.