Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
Anti Valentine's Week List 2022: காதலர் தினம் முடிந்து வரும் 'காதலர் எதிர்ப்பு வாரம்' பற்றி தெரியுமா?
பிப்ரவரி மாதம் காதலர் தினத்தோடு முடிந்துவிடவில்லை. ஏனெனில் காதலர் தினத்திற்கு பிறகு வரும் அடுத்த ஏழு நாட்கள் ரொமான்ஸ் மற்றும் காதலுடன் முற்றிலும் தொடர்பில்லாதது. அது தான் காதலர் எதிர்ப்பு வாரம்.
பிப்ரவரி மாதத்தில் அதிகம் பேசப்படும் ஓர் விஷயம் என்றால் அது காதல் தான். சொல்லப்போனால் பிப்ரவரி மாதத்தை காதல் மாதம் என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் காதலர் தினம் வருகிறது. இந்த காதலர் தினம் காதலர்களுக்கு சிறப்பானது மட்டுமின்றி, காதலை முன்மொழிய நினைப்பவர்களுக்கும் ஒரு தைரியத்தை அளிக்கிறது. இந்த காதலர் தினம் ஒரு நாள் மட்டுமின்றி, ஒரு வாரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதில் ரோஸ் டே, பிரப்போஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, பிராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே என ஏழு நாட்கள் காதலர் வாரமாக கொண்டாடப்படுகிறது. அதன் பின் எட்டாவது நாளாக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆனால் இந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தோடு முடிந்துவிடவில்லை. ஏனெனில் காதலர் தினத்திற்கு பிறகு வரும் அடுத்த ஏழு நாட்கள் ரொமான்ஸ் மற்றும் காதலுடன் முற்றிலும் தொடர்பில்லாதது. அது தான் காதலர் எதிர்ப்பு வாரம். இந்த காதலர் எதிர்ப்பு வாரம் பிப்ரவரி 15 ஆம் தேதி ஸ்லாப் டேயில் தொடங்கி, பிப்ரவரி 21 ஆம் தேதி பிரேக்-அப் டேயுடன் முடிவடைகிறது. இப்போது இந்த காதலர் எதிர்ப்பு வாரத்தைப் பற்றி விரிவாக காண்போம்.

காதலர் எதிர்ப்பு வாரம்
* பிப்ரவரி 15, 2022 - ஸ்லாப் டே
* பிப்ரவரி 16, 2022 - கிக் டே
* பிப்ரவரி 17, 2022 - பெர்ஃப்யூம் டே
* பிப்ரவரி 18, 2022 - ஃபிளர்ட் டே
* பிப்ரவரி 19, 2022 - கன்ஃபெஷன் டே
* பிப்ரவரி 20, 2022 - மிஸ்ஸிங் டே
* பிப்ரவரி 21, 2022 - பிரேக்-அப் டே

ஸ்லாப் டே
ஸ்லாப் டே என்றதும் பலரும் தங்களுக்கு பிடிக்காதவர்களை அறையும் தினமாக நினைக்கலாம். ஆனால் அம்மாதிரியான நடத்தை மிகவும் தவறானது. மாறாக இந்த நாளில் ஒருவர் தங்களினுள் இருக்கும் எதிர்மறையான நடத்தைகளை அறைந்து, அவற்றை வாழ்க்கையில் இருந்து வெளியேற்றி, புதிதாக வாழ ஆரம்பிக்கலாம்.

கிக் டே
உங்கள் வாழ்க்கை எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமல், ஒருவித கவலைகள் சூழ்ந்து சென்று கொண்டிருந்தால், இந்நாளில் உங்கள் கவலைகள் மற்றும் பதட்டங்கள் அனைத்தையும் உங்களிடம் இருந்து எட்டி உதைத்து விரட்டுங்கள்.

பெர்ஃப்யூம் டே
இந்நாளில் எதிர்மறையான எண்ணங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, நீங்கள் எப்போதும் நல்ல மணமாக இருக்க அற்புதமான வாசனை திரவியத்தை புதிதாக வாங்கி அதை தெளியுங்கள்.

ஃபிளர்ட் டே
இந்த நாளில் நீங்கள் புதிய நபர்களை சந்திக்கலாம் மற்றும் வாழ்க்கையை புதிய வழியில் கொண்டு செல்ல முயற்சிக்கலாம். நீங்கள் காதலில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், நல்ல நட்புடன் பழக நினைத்தால், உங்களுக்கு பிடித்தவர்களிடம் அதைத் சொல்லலாம்.

கன்ஃபெஷன் டே
நீங்கள் உங்கள் உணர்வுகள் மற்றும் ஆழ்ந்த எண்ணங்களை யாரிடமாவது சொல்ல நினைத்தால், அதற்கு கன்ஃபெஷன் டே சரியாக இருக்கும். இந்த நாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் நீங்கள் முன்பு செய்த தவறுகளையோ அல்லது இதுவரை யாரிடமும் சொல்லாத தவறான செயல்களையோ சொல்லி அதை ஒப்புக்கொண்டு, உங்கள் தவறுகளை சரிசெய்ய முயற்சி செய்யலாம்.

மிஸ்ஸிங் டே
நீங்கள் ஏதோ சிறு பிரச்சனையால் உங்கள் வாழ்வில் யாரையேனும் தவறிவிட்டு, அவர்களை இப்போது மிஸ் செய்கிறீர்களா? அப்படியானால் அதை அவர்களிடம் தெரியப்படுத்த ஒருசிறந்த நாளை தேடுகிறீர்கள் என்றால், அதற்கு மிஸ்ஸிங் டே சரியாக இருக்கும். இது தவிர இந்நாளில் நீங்கள் உங்கள் காதலருடன் பகிர்ந்து கொண்ட இனிமையான தருணங்களை நினைவுகூர்ந்து அவருக்கு சிறந்த பரிசுகளையும் அளிக்கலாம்.

பிரேக்-அப் டே
நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு மோசமான உறவால் விரக்தியடைந்திருக்கிறீர்களா? அப்படியானால் அந்த உறவை விட்டு விலகுவது தான் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் நீண்ட கால தீர்வாக இருக்கும். காதலர் வாரத்தின் கடைசி நாளான பிரேக்-அப் டே, உங்கள் பாதுகாப்பற்ற மற்றும் பொருத்தமற்ற துணையுடன் உங்கள் உறவை முடித்துக் கொள்ள சரியான நேரம். இந்த நாள் அந்த நபருடன் உறவை முறித்துக் கொள்ள கூடுதல் உந்துதலைக் கொடுக்கும்.

குறிப்பு
காதல் ஒரு அற்புதமான உணர்வு. காதலிக்கும் போது உலகம் மிகவும் அழகாக இருக்கும் மற்றும் காதலிப்பவருடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமாக இருக்கும். ஆனால் அந்த காதல் உடையும் போது, அது தரும் வலியை தாங்குவது கடினம். அப்போது உலகத்தின் மீது கோபம் எழும். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், உங்களை ஏமாற்றுபவர்களை விட உங்களை நேசிப்பவர்களுக்காக இவ்வுலகில் வாழலாம்.



Click it and Unblock the Notifications