Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
37 வருடங்களுக்கு பின் ராகு-செவ்வாயால் உருவாகும் அங்காரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
மேஷ ராசியில் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் பெரும்பாலும் மோசமான பலன்களை பெற நேரிடும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த அங்காரக யோகத்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
ஜோதிடத்தில் மொத்தம் 27 யோகங்கள் உள்ளன. அதில் ஒரு யோகம் தான் அங்காரக யோகம். இந்த யோகம் ஒரு அசுப யோகமாகும். அங்காரக யோகம் ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கையால் உருவாகும். ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசிக்கு சென்றார். இந்த ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். செவ்வாயும் ராகுவும் மேஷ ராசியில் இணைவதால் அங்காரக யோகம் உருவானது. இந்த யோகம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை உள்ளது. இதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்படுகிறது.

மேஷ ராசியில் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் பெரும்பாலும் மோசமான பலன்களை பெற நேரிடும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த அங்காரக யோகத்தால் நற்பலன்கள் கிடைக்கும். இப்போது 37 வருடங்களுக்கு பின் மேஷத்தில் உருவாகும் அங்காரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் எவையென்பதைக் காண்போம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் மரியாதை, கௌரவம் உயரும். வணிகம் செய்பவர்களுடககு நல்ல லாபம் கிடைக்கும். இந்த அங்காரக யோக காலத்தில் குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

மிதுனம்
அங்காரக யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தரும். அதுவும் பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தை சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்
அங்காரக யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். மேலும் திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கடந்த காலத்தில் உங்கள் வேலையில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டிருந்தால், அது இந்த யோக காலத்தில் முடிவடையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகத்தால் நற்பலன்கள் கிடைக்கும். அதுவும் வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். இது தவிர, நாளுக்கு நாள் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை மிகவும் வலுவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications