For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களை வசியம் செய்ய அவர்கள் குடிக்கும் பானத்தில் மாதவிடாய் இரத்தத்தை கலக்கும் விசித்திர பழக்கம்...!

பெண்களின் மாதவிடாய் இரத்தம் குறித்த பல நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் பண்டையகாலம் முதல் இப்போது வரை நிலவி வருகிறது.

|

பெண்களின் மாதவிடாய் இரத்தம் குறித்த பல நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் பண்டையகாலம் முதல் இப்போது வரை நிலவி வருகிறது. பெண்களின் மாதவிடாய் இரத்தம் தொழுநோயை குணப்படுத்தும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் இதுபோன்ற பல நம்பிக்கைகள் பெண்களின் மாதவிடாயை சுற்றி பண்டைய காலத்தில் இருந்தது.

Ancient Bizarre Beliefs About Periods

இந்த நம்பிக்கைகள் அனைத்தும் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும். பெண்களின் மாதவிடாயின் போது வெளிப்படும் இரத்தத்திற்கு பல அற்புத சக்திகள் இருந்ததாக நம் முன்னோர்கள் நம்பினார்கள். இந்த பதிவில் மாதவிடாய் இரத்தத்தைப் பற்றி இருந்த வினோதமான நம்பிககைகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய் குறித்த நம்பிக்கைகள்

மாதவிடாய் குறித்த நம்பிக்கைகள்

ரோமானிய இயற்கையியலாளர் பிளினி தி எல்டர், மாதவிடாய் குறித்த திகிலூட்டும் பல கருத்துக்களுக்காக அறியப்பட்டவர். அவரின் கருத்துக்களின் படி, " மாதவிடாயில் இருக்கும் பெண்ணுடன் உறவு கொண்டால் புதிய ஒயின் கூட புளிப்பாக மாறும், பயிர்கள் வாடிப்போகும், பூச்சிகளை கொன்றுவிடும், தோட்டங்களில் விதைகளை காயவைக்கும், மரங்களில் பழங்களை உதிர வைக்கும், கண்ணாடியின் பிரகாசமான மேற்பரப்பை மங்கச் செய்கிறது, எஃகு விளிம்பை மங்கச் செய்கிறது தந்தத்தின் ஒளி, தேனீக்களைக் கொன்று, இரும்பு மற்றும் வெண்கலத்தை துருப்பிடித்து, காற்றை நிரப்ப ஒரு பயங்கரமான வாசனையை ஏற்படுத்தும். " என்று கூறினார்.

மாதவிடாய் இரத்தம் தொழுநோயை ஏற்படுத்தி குணப்படுத்தும்

மாதவிடாய் இரத்தம் தொழுநோயை ஏற்படுத்தி குணப்படுத்தும்

இடைக்கால ஐரோப்பாவில் உள்ள மக்கள், மாதவிடாய் இரத்தத்தை "ஏவாளின் சாபம்" என்று கருதினாலும், இது தொழுநோய் போன்ற ஒரு தீவிர நோயைக் குணப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த விஷயம் என்று நம்பினர்.

ஆண்களுக்கும் மாதவிடாய்

ஆண்களுக்கும் மாதவிடாய்

சில இடைக்கால கிறிஸ்தவ அமைப்புகளும், அறிஞர் வில்லிஸ் ஜான்சனும் ஒவ்வொரு மாதமும் யூத ஆண்களும் இரத்தம் கொட்டுவதாக ஒரு வதந்தியை பரப்பினர். கடந்த நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை கூட இந்த நம்பிக்கை நிலவியது.

MOST READ: உங்க ராசிப்படி எந்த வயசுல கல்யாணம் பண்ணுனா உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடிவரும் தெரியுமா?

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் அரக்கர்கள் பிறப்பார்கள்

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் அரக்கர்கள் பிறப்பார்கள்

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதை தவிர்க்க உலகம் முழுவதும் பல நம்பிக்கைகளும், கருத்துக்களும் உருவாக்கப்பட்டது. அதில் முக்கியமானது பிரெஞ்சு சமூகத்தில் நிலவியதாகும். அவர்களின் நம்பிக்கைப்படி மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் அரக்கர்கள் பிறப்பார்கள் என்று நம்பினார்கள்.

மாதவிடாய் வரும் பெண்கள் சூனியக்காரிகளாக கருதப்பட்டனர்

மாதவிடாய் வரும் பெண்கள் சூனியக்காரிகளாக கருதப்பட்டனர்

பண்டைய ரோமானியர்கள் மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருந்த பெண்கள் இருண்ட மந்திரவாதிகள் என்று நம்பினர், அவர்கள் ஆலங்கட்டி மழை, சூறாவளியை நிறுத்த முடியும் என்று நம்பினார்கள். மேலும் அவர்கள் பயிர்களை அழிக்க முடியும் என்று நினைத்தார்கள்.

இரத்தப்போக்கை கட்டுப்படுத்த தவளைகள் எரிக்கப்பட்டது

இரத்தப்போக்கை கட்டுப்படுத்த தவளைகள் எரிக்கப்பட்டது

ஒரு தொட்டியில் ஒரு தவளையை எரிப்பதன் மூலமும், அதன் சாம்பலை பெண்களின் யோனிக்கு அருகில் ஒரு பையில் போட்டு கட்டிக்கொள்வதன் மூலம் மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் என்று இடைக்கால ஐரோப்பியர்கள் நம்பினர்.

MOST READ: அக்னி நட்சத்திரத்தில் உங்கள் வீட்டை செலவே இல்லாமல் எப்படி கூலாக வைத்திருக்கலாம் தெரியுமா?

மாதவிடாய் இரத்தத்தை குடிப்பது பாலியல் ஆசையை அதிகரிக்கும்

மாதவிடாய் இரத்தத்தை குடிப்பது பாலியல் ஆசையை அதிகரிக்கும்

உலகின் பல பகுதிகளிலும் இன்றும் நிலவும் திகிலூட்டும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். ஆப்பிரிக்காவில் ஒரு ஆணின் காபி அல்லது வேறு பானங்களில் பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தை கலப்பது அவரை அந்த பெண்ணிடம் மயங்க வைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த வழக்கம் இந்தியாவிலும் இருந்தது.

இந்தியாவில் நிலவும் நம்பிக்கைகள்

இந்தியாவில் நிலவும் நம்பிக்கைகள்

இந்தியாவில் மாதவிடாய் குறித்து பல மூடநம்பிக்கைகள் நிலவி வருகிறது. இந்தியாவில் மாதவிடாயில் இருக்கும் பெண்கள் எந்தவொரு புனித செடிகளுக்கும் அருகில் செல்ல அனுமதியில்லை. பெண்களின் மாதவிடாய் அவர்களை புனிதமற்றவர்களாக மாற்றுவதாக கூறப்படுகிறது, இதனால் அவர்கள் தொடும் பூக்களும் புனிதமற்றதாக மாறுவதாக மூடநம்பிக்கை இன்றும் நிலவி வருகிறது.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் ஆபாசப்படங்களுக்கு அடிமையாக இருக்கிறார் என்று அர்த்தம்... உஷாரா இருங்க

ஊனமுற்ற குழந்தைகள்

ஊனமுற்ற குழந்தைகள்

நமது முன்னோர்கள் மாதவிடாய் காலத்தில் ஆண்கள் பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று எச்சரித்தார்கள். ஏனெனில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக பிறப்பார்கள் என்று கூறினர். ஆனால் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ancient Bizarre Beliefs About Periods

Check out the ancient shocking beliefs about periods
Story first published: Tuesday, May 5, 2020, 12:06 [IST]
Desktop Bottom Promotion