For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் இந்த விஷயங்களை நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்...!

பாபாசாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய மகத்தான தலைவர்.

|

பாபாசாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய மகத்தான தலைவர். உலகம் முழுவதும் அதிகமான சிலைகள் உள்ள ஒரு தலைவர் என்றால், அது புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்குதான். விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பதவி வகித்தவர். இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில்)1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

ambedkar-jayanti-2022-famous-and-inspiring-quotes-by-dr-babasaheb-ambedkar-in-tamil

தீண்டாமைக்கு எதிராக குரல் எழுப்பியவர். இந்து மத எதிர்ப்பை ஆழமாக வலியுறுத்தியவர். 18 பட்டபடிப்புகளை படித்தவர். ஒருநாளில் 18 மணி நேரம் புத்தகம் படிப்பதையே பழக்கமாக வைத்திருந்தார். அதுமட்டுமின்றி, பொருளாதார நிபுணராகவும், வழக்கறிஞராகவும் இருந்தார். அவரது பிறந்தநாளில், உங்களை ஊக்குவிக்கும் அவரது சில ஊக்கமளிக்கும் மேற்கோள்களை இக்கட்டுரையில் நீங்கள் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#மேற்கோள் 1

#மேற்கோள் 1

கற்பி!

ஒன்றுசேர்!

புரட்சி செய்!- புரட்சியாளர் பி.ஆர். அம்பேத்கர்

#மேற்கோள் 2

#மேற்கோள் 2

ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

#மேற்கோள் 3

#மேற்கோள் 3

சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்- புரட்சியாளர் அம்பேத்கர்

#மேற்கோள் 4

#மேற்கோள் 4

தன்னை உயர்ந்த ஜாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி - டாக்டர். அம்பேத்கர்

#மேற்கோள் 5

#மேற்கோள் 5

உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது, அப்படி உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமல் போகும் - டாக்டர். அம்பேத்கர்

#மேற்கோள் 6

#மேற்கோள் 6

ஆயிரம் ஆண்டுகாலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது- புரட்சியாளர் பி.ஆர். அம்பேத்கர்

#மேற்கோள் 7

#மேற்கோள் 7

பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல சிங்கங்களாக இருங்கள் - டாக்டர் அம்பேத்கர்

#மேற்கோள் 8

#மேற்கோள் 8

நீ பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லையெனில் அச்சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்- புரட்சியாளர் பி.ஆர். அம்பேத்கர்

#மேற்கோள் 9

#மேற்கோள் 9

ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை. மதம் என்ற கைவிலங்கை உடைக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை - புரட்சியாளர் பி.ஆர். அம்பேத்கர்

#மேற்கோள் 10

#மேற்கோள் 10

"ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அந்த சமூகத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே நான் அளவிடுகிறேன்" - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

#மேற்கோள் 11

#மேற்கோள் 11

சமத்துவம்!

சகோதரத்துவம்!

சுதந்திரம்! -டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

#மேற்கோள் 12

#மேற்கோள் 12

என்னை கடவுள் ஆக்காதே நீ !

தோற்றுவிடுவாய்

என்னை ஆயுதமாக்கி போராடு! -புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ambedkar Jayanti 2022: Famous and Inspiring quotes by Dr. Babasaheb Ambedkar in tamil

Here we are talking about the Ambedkar Jayanti 2022: Famous and Inspiring quotes by Dr. Babasaheb Ambedkar in tamil
Story first published: Tuesday, April 12, 2022, 18:56 [IST]
Desktop Bottom Promotion