For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021 அமேசான் பிரைம் டே விற்பனை ஜூலை 26-இல் அதிரடி தள்ளுபடியுடன் தொடங்குகிறது..

2021 ஆம் ஆண்டின் அமேசான் பிரைம் டே விற்பனை இந்தியாவில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விற்பனையில் பலவற்றில் அதிரடி சலுகைகளை வழங்குகிறது.

|

2021 ஆம் ஆண்டின் அமேசான் பிரைம் டே விற்பனை இந்தியாவில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு மின்னணு பொருட்கள், ஃபேஷன் மற்றும் அழகுப் பொருட்கள் என பலவற்றில் அதிரடி சலுகைகளை வழங்குகிறது. புதிய பிரைம் சந்தாதாரர்களை ஈர்ப்பதற்காக எச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் மற்றும் உடனடி தள்ளுபடியையும் பிரத்யேகமாக வழங்குகிறது. முக்கியமாக இந்த பொருட்களுக்கு கொடுக்கப்படும் தள்ளுபடிகள், அப்பொருட்கள் இருக்கும் வரை கிடைக்கும். கீழே அமேசான் பிரைம் டேவில் அட்டகாசமான தள்ளுபடியுடன் விற்பனைக்கு உள்ள பொருட்களின் பட்டியல் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ஹெட்ஃபோன்கள்

மிருதுவான ஒலியுடன் வண்ணமயமான மற்றும் சற்று ஸ்டைலான ஹெட்ஃபோன்கள் இந்த பட்டியலில் அடங்கும். இந்த ஹெட்ஃபோனை வாங்கிப் பயன்படுத்தினால், இசையை முழுமையாக அனுபவிக்கலாம். முக்கியமாக இதன் எல்லா தயாரிப்புகளிலும் 75% வரை தள்ளுபடி மற்றும் 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் ஈ.எம்.ஐ என்பதால் இதை எளிதில் வாங்கலாம். அட்டகாசமான இந்த கலெக்ஷன்களை இங்கே பாருங்கள்.

ஸ்மார்ட்வாட்ச்சுகள்

தினமும் நேரத்தைக் காணவும், உங்கள் கைகளை அழகாக வெளிக்காட்டவும் இந்த ஸ்டைலான ஸ்மார்ட்வாட்ச்சுகள் உதவும். அதோடு இந்த வாட்ச்சுகளைக் கொண்டு இசையை கட்டுப்படுத்துவது, இலக்கை நிர்ணயிப்பது அல்லது இன்றைய தேதியை பார்ப்பது என அனைத்தையும் ஒரு சிறிய பட்டனை அழுத்துவதன் மூலம் சாத்தியமாகும். இந்த வகை வாட்ச்சுகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. புதியவற்றிற்கு 50% வரை தள்ளுபடி + 10% உடனடி வங்கி தள்ளுபடி. இது பற்றி இங்கே பாருங்கள்.

டாப் ப்ரீமியம் பிராண்டுகள்: ஃபோசில், மைக்கேல் கோர்ஸ், டேனியல் வெலிங்டன், ஸ்காகன், அர்மானி எக்ஸ்சேஞ்ச்

டாப் ப்ரீமியம் பிராண்டுகளான ஃபோசில், மைக்கேல் கோர்ஸ், டேனியல் வெலிங்டன், ஸ்காகன், அர்மானி எக்ஸ்சேஞ்ச் ஆகியவற்றின் அட்டகாசமான கடிகாரங்கள் உங்கள் அழகையும், ஸ்டைலையும் மேம்படுத்தி காட்டும். அதுவும் அனைத்து அனலாக் மற்றும் டிஜிட்டல் கைக்கடிகாரங்கள் 50% வரை தள்ளுபடி + 10% உடனடி வங்கி தள்ளுபடி என்பதால் நிச்சயம் இது உங்களை வாங்க தூண்டும். இதைக் காண இங்கே பாருங்கள்.

ஆண்களின் கோடைக்கால ஆடைகள்

நீங்கள் என்ன அணிகிறீர்களோ, அது உங்களின் ஆளுமையை வரையறுக்கிறது. அமேசானில் வண்ணமயமான மற்றும் வசதியான கலெக்ஷன்களில் இருந்து ஆண்களின் கோடைக்கால ஆடைககளை 65% தள்ளுபடியுடன் பெறுங்கள். இந்த புதிய கலெக்ஷன்களை இங்கே பாருங்கள்.

பெண்களின் கோடைக்கால ஆடைகள்

நீங்கள் யார் என்பதை தெரிவிப்பதற்கான அமைதியான வழி ஸ்டைல். எனவே அமேசானில் இருந்து வண்ணமயமான மற்றும் மகிழ்ச்சியூட்டும் பெண்களின் கோடைக்கால ஆடைகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஆளுமைக்கு ஒரு வேடிக்கையான திருப்பத்தைக் கொடுங்கள். அதுவும் 65% தள்ளுபடியில் இதை அள்ளுங்கள். நீங்கள் உங்கள் அலமாரியை அழகாக மாற்ற நினைத்தால். இந்த வகை ஆடைகளை இங்கே வாங்கலாம்.

குழந்தைகளுக்கான கோடைக்கால ஆடை

உங்கள் குழந்தைகளின் முகத்தில் அழகான மற்றும் க்யூட்டான புன்னகையை காண குழந்தைகளுக்கான கோடைக்கால ஆடைககளை வாங்குங்கள். அதுவும் 399 ரூபாய்க்கு, நீங்கள் பல வேடிக்கையான வடிவமைப்புகள், சுவாரஸ்யமான வடிவங்களைக் கொண்ட உடைகளைத் தேர்வு செய்து உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியூட்டலாம். அதற்கு இங்கே பிடித்ததை ஷாப்பிங் செய்யுங்கள்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஸ்லீப்வேர்

நைட்ஷர்ட்ஸ், நைட்ரெஸ், ஸ்லீப்வேர் செட் அல்லது பைஜாமா செட், கவுன் அல்லது பைஜாமா ஆகியவற்றை ரூ.499-க்கு கீழ் தேர்வு செய்யலாம். இந்த அற்புதமான நைட்வேர்கள் தூங்கும் போது உங்கள் மனநிலையை பூர்த்தி செய்வுதோடு, சிறந்த வழியில் ஒய்வெடுக்கவும் உதவும். உங்களுக்கு ஸ்லீப்வேர் வாங்க வேண்டுமானால், இங்கே வாங்குங்கள்.

பிளாட்ஸ் & ஹீல்ஸ்

நீங்கள் உங்கள் கால்களுக்கு அணியும் காலணி ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதிர்ச்சியூட்டும் அளவிலான ஹீல்ஸ் மற்றும் ப்ளாட்ஸ்களை அணியுங்கள். அதுவும் 70% தள்ளுபடியில், உங்களுக்கு பிடித்த ஸ்டைலான பிளாட்ஸ் அல்லது ஹீல்ஸ் வாங்கி மகிழுங்கள். இதை வாங்க இங்கே பாருங்கள்.

கேசுவல் மற்றும் கிளாக்ஸ்

லேசான எடை மற்றும் ஸ்டைலான தோற்றத்தில், உங்கள் அலமாரிகளில் கேசுவல் மற்றும் கிளாக்ஸ் அவசியம் இருக்க வேண்டும். ஒருவருக்கு பாதணிகள் மிகவும் முக்கியம். இப்படிப்பட்ட நல்ல சௌகரியமாகவும், ஸ்டைலான பாதணிகளை 60% வரை தள்ளுபடியுடன் வாங்குங்கள். மேலும் இந்த வகை காலணிகள் பருவமழைக் காலத்திலும் அணிவதற்கு ஏற்றதாக இருக்கும். ஆகவே உங்களுக்கு பிடித்த ஜோடியை இங்கே தேர்ந்தெடுங்கள்.

ஃபார்மல்ஸ் மற்றும் கேசுவல்ஸ்

ஆண்கள் மற்றும் பெண்கள் நல்ல அழகான ஃபார்மல்ஸ் மற்றும் கேசுவல்ஸ் அணிந்து, தங்களின் தோற்றத்தை மேம்படுத்தி காட்ட வேண்டும். இப்படியான அழகான ஃபார்மல்ஸ் மற்றும் கேசுவல்ஸ் காலணிகளை 60% வரை தள்ளுபடியில் வாங்குங்கள். இந்த கலெக்ஷன்களைக் இங்கே பாருங்கள்.

ஆண்களுக்கான டி-சர்ட்டுகள் மற்றும் போலோஸ்

உங்கள் அலமாரியின் தோற்றத்தை கூடுதல் ஸ்டைலாக வெளிக்காட்ட, அமேசானில் கிடைக்கும் அற்புதமான ஆண்களுக்கான டி-சர்ட்டுகள் மற்றும் போலோஸைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த உடைகள் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தைக்கப்பட்டுள்ளது மற்றும் இவற்றை உடற்பயிற்சி நேரத்தில் மற்றும் விளையாட்டுக்களின் போதும் அணியலாம். மேலும் இந்த வகையான தயாரிப்புக்களில் நீங்கள் 40-70% தள்ளுபடியைப் பெறலாம். இந்த அற்புதமான டி-ஷர்ட்டுகள் மற்றும் போலோஸை நீங்கள் இங்கே காணலாம்.

ஹேண்ட்பேக்குகள்

பெண்கள் சரியான ஹேண்ட்பேக்கை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டலாம். நீங்கள் உங்களின் தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் உங்கள் தோற்றத்தை முழுமையாக்க விரும்பினால், இந்த அற்புதமான ஹேண்ட்பேக்குகள் உதவும். முக்கியமாக இதற்கு 80% தள்ளுபடி + எச்.டி.எஃப்.சி கார்டுகளில் 10% உடனடி தள்ளுபடி உண்டு. எனவே இதை இங்கே ஷாப்பிங் செய்யுங்கள்.

கண்ணாடி

கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை நாகரீகமாக நீக்குங்கள். அதற்கு கண்கவர் கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள். அதுவும் உங்கள் முகத்திற்கு ஏற்ற வடிவத்திலானதை வாங்கி பயன்படுத்துங்கள். இந்த தயாரிப்புக்கு 50% வரை தள்ளுபடியுடன் எச்.டி.எஃப்.சி கார்டுகளில் 10% உடனடி தள்ளுபடியும் உள்ளது. எனவே இதை நீங்கள் வாங்க யோசிக்க வேண்டாம். இங்கு இதன் கலெக்ஷன்களைப் பாருங்கள்.

பெண்களுக்கான டாப்ஸ் & டீஸ்

இது ஒவ்வொரு பெண்ணின் அலமாரியில் இருக்க வேண்டியது. நீங்கள் டாப்ஸ் & டீஸ் அணிபவராயின், உங்களுக்கு பிடித்ததை 50% தள்ளுபடியில் பெறுங்கள். இதுவரை உங்களிடம் டாப்ஸ் & டீஸ் அதிகமாக இல்லாமல் இருந்தால், இன்று இந்த அட்டகாசமான தள்ளுபடியில் வாங்கிக் குவிப்பீர்கள். இந்த அற்புதமான டாப்ஸ் & டீஸ் கலெக்ஷனை இங்கே பாருங்கள்.

பெண்களுக்கான ஆடைகள்

பல அழகான நெக்லைன்கள், துடிப்பான வண்ணங்கள் மற்றும் சரியான வடிவங்களைக் கொண்ட பெண்களுக்கான ஸ்டைலான மற்றும் ஃபேஷனான ஆடைகளை 50% வரை தள்ளுபடியில் அள்ளுங்கள். இந்த ஆடைகள் உங்களுக்கு அட்டகாசமாகவும், சௌகரியமாகவும் உணர வைப்பதால், இவற்றை உங்கள் அலமாரிகளில் வாங்கி அடுக்கி வைக்கலாம். உங்களுக்கு பிடித்த ஆடைகளை இங்கே பார்த்து வாங்குங்கள்.

சன்கிளாசஸ்

பிரமாதமான ஷேடுகளுடன், இந்த ஃபேஷனான சன்கிளாசஸ்கள் உங்கள் ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தும். இந்த வகையான சன்கிளாசஸ் உங்கள் கண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல், இதன் ஃபேஷனான ப்ரேம்கள் உங்கள் ஸ்டைலையும் மேம்படுத்தும். உங்களுக்கான சில அட்டகாசமான சன்கிளாஸ்களை இங்கே பார்த்து தேர்ந்தெடுங்கள்.

ஆன்டி-கிளார் கம்ப்யூட்டர் கண்ணாடிகள்

ஆன்டி-கிளார் கம்ப்யூட்டர் கண்ணாடிகளில் உள்ள சிறப்பான 'AR' பூச்சு சூரிய ஒளியில் கண்கள் கூசுவதைத் தடுத்து, கண்களுக்கு வசதியான உணர்வைத் தரக்கூடியது. இந்த கண்ணாடிகளால் கண்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, உங்களின் ஸ்டைலும் மேம்படும். இந்த வகை கண்ணாடிகளை இங்கே பாருங்கள்.

மொபைல்கள்

உங்களுக்கும் உங்கள் அன்பானவருக்கும் ஒரு அட்டகாசமான மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இதுவே சரியான தருணம். ஏனெனில் அமேசான் பிரைம் டேயில் மொபைல்களுக்கு 40% வரை தள்ளுபடியுடன், 12 எம் என்சிஇஎம்ஐ மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு 10,000 வரை தள்ளுபடி என நீங்கள் எதிர்பார்ப்பதை விட நிறைய உள்ளது. உடனே இங்கே ஷாப்பிங் செய்யுங்கள்.

ட்ரைபாட்ஸ், ரிங் லைட்ஸ் மற்றும் பல

ட்ரைபாட்ஸ், ரிங் லைட்ஸ், நெட்வொர்க்கிங் சாதனங்கள் மற்றும் பலவற்றை 80% வரை தள்ளுபடியுடன் சிறந்த பிராண்டுகளை அமேசானில் வாங்குங்கள். இந்த நம்பகமான தயாரிப்புக்கள் மிகவும் நீடித்தவை மற்றும் உங்கள் வேலையை மென்மையாகவும், சீராகவும் செய்ய வைக்கும். புகைப்பட கலைஞர்கள், பயண ஆர்வலர்கள் அந்த அட்டகாசமான பொருட்களை இங்கே பார்க்கலாம்.

இவ்வளவு அட்டகாசமான பொருட்கள் அதிரடி தள்ளுபடியில் இரண்டு நாட்கள் அமேசானில் கிடைக்கப் போகிறது. நீங்கள் இன்னும் அமேசான் பிரைமில் பதிவு செய்யவில்லை என்றால், இப்பொழுதே பதிவு செய்து அந்த சலுகைகளை அனுபவியுங்கள். குறைவான விலையில் அமேசானில் நிறைய பொருட்களை ஷாப்பிங் செய்து மகிழுங்கள்.

English summary

Amazon Prime Day Sale 2021 Starts 26 July: Top 19 Categories With Lightning Deals And Offers!

Amazon Prime Day Sale 2021 kicks off on 26 July in India and this two-day sale promises customers lightning deals and offers on categories such as electronic gadgets, fashion and beauty products and lots more. Exclusively hosted to attract new Prime subscribers, one can avail huge regular discounts and instant discounts for HDFC banks credit/debit card users.
Story first published: Monday, July 26, 2021, 8:36 [IST]
Desktop Bottom Promotion