For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மாதிரி கொண்டாடுனா இந்த புத்தாண்டு உங்களுக்கு மறக்க முடியாத நாளா இருக்கும்…!

வரவிருக்கும் ஆண்டை சிறப்பானதாக்க நீங்கள் செய்யக்கூடிய புதுமையான விஷயங்கள் நிறைய உள்ளன.

|

புத்தாண்டு 2020 கிட்டத்தட்ட இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அனைவரும் பல்வேறு திட்டங்களை மனதில் யோசித்துக்கொண்டிருப்பீர்கள். நீங்களும் நிச்சயமாக ஏதாவது ஒரு திட்டத்தை தயாராக வைத்திருப்பீர்கள் இல்லையா? அந்த பட்டியலில் பார்ட்டி இருக்கிறதா? உங்களில் பலர் ஏற்கனவே ஒரு இடத்தில் பார்ட்டி கொண்டாடலாம் என்று யோசித்து வைத்திருப்பீர்கள். இன்னும் சிலர் வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை ஒரே விதமாக ஏன் கொண்டாட வேண்டும்? வரும் ஆண்டை ஏன் நீங்கள் வித்தியாசமாக கொண்டாடக்கூடாது?

amazing-things-that-you-can-do-instead-of-partying-this-new

வரவிருக்கும் ஆண்டை சிறப்பானதாக்க நீங்கள் செய்யக்கூடிய புதுமையான விஷயங்கள் நிறைய உள்ளன. இவை நிச்சயமாக உங்களை மகிழ்ச்சிபடுத்தும். நீங்கள் இதுவரை அப்படி எதையும் திட்டமிட்டுள்ளீர்களா? இல்லையென்றால் சரி, புத்தாண்டு கொண்டாட்டத்தை உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்கும் இன்னும் சிறப்பானதாக மாற்ற சில அற்புதமான யோசனைகளை இங்கே நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீண்டதொரு பயணம்

நீண்டதொரு பயணம்

நீங்கள் புதிதாக திருமணமான தம்பதியராக இருந்தாலும், காதலர்களாக இருந்தாலும் அல்லது நடுத்தர வயதுடைய இரட்டையராக இருந்தாலும், புத்தாண்டு தினத்தன்று ஒரு நீண்டதொரு பயணத்தை மேற்கொள்வது என்பது உங்களுக்கு ஒரு நல்ல திட்டமாகும். பயணத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் காரின் நிலையைச் சரிபார்த்து, வழக்கமான குழப்பத்திலிருந்து வெளியேறும் புதிய இடத்தைத் தேர்வுசெய்துகொள்ளுங்கள். புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை ஒன்றாக அனுபவித்து, உங்கள் இதயத்தில் உள்ள தருணத்தை என்றென்றும் நினைவில் கொள்ளுமாறு புத்தாண்டை கொண்டாடுங்கள்.

MOST READ:15 ஆண்டுகள் ஆகியும் இன்றும் மனதில் ஆறா வடுவாக இருக்கும் சுனாமி நினைவு நாள்...!

சினிமாவிற்கு செல்லுங்கள்

சினிமாவிற்கு செல்லுங்கள்

ஆண்டு முழுவதும், உங்கள் துணையுடன் செலவழிக்க உங்களுக்கு போதுமான வசதியான நேரம் கிடைக்கவில்லை. உங்களுக்கு பிடித்த சில திரைப்படங்களுடனும் புத்தாண்டு இரவை ஒரு சிறப்பு திரைப்பட இரவாக நீங்கள் மாற்றலாம். உங்களுக்கு பிடித்த திரைப்படங்களை தியேட்டருக்கு சென்றோ அல்லது வீட்டிலோ திரையிட்டு, புத்தாண்டு இரவை தொடங்குங்கள். உங்கள் துணையுடன் வசதியாக இருங்கள் மற்றும் சிற்றுண்டி மற்றும் பானங்களுடன் திரைப்படங்களை பார்த்து அனுபவியுங்கள்.

வாழ்த்து அட்டைகள்

வாழ்த்து அட்டைகள்

நீங்கள் ஒரு முழுமையான குடும்ப நபராக இருந்தால், உங்கள் குழந்தைகளுடன் ஏதாவது வேடிக்கையான விஷயம் செய்ய விரும்பினால், அது உண்மையில் ஒரு நல்ல திட்டமாகும். புத்தாண்டுக்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே நீங்கள் வாழ்த்து அட்டைகளை தொடங்க வேண்டும். இதனால் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அற்புதமான அட்டைகளைத் தயாரிக்கலாம். உங்கள் குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்துங்கள். இது உங்கள் துணைக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.

குழந்தைகளுடன் விளையாடுங்கள்

குழந்தைகளுடன் விளையாடுங்கள்

புத்தாண்டை வேறு வழியில் கொண்டாட விரும்புகிறீர்களா? சுற்றியுள்ள எல்லாவற்றையும் இழந்து அனாதை இல்லத்தில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நீங்கள் ஏதாவது சிறப்பு ஏற்பாடு செய்யலாம். அவர்களுக்கு நல்ல பரிசு ஒன்றை கொடுக்கலாம். அவர்களுடன் விளையாடலாம். நல்ல உணவை ஏற்பாடு செய்து அவர்களை மகிழ்வித்து நீங்களும் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடலாம்.

MOST READ:இந்த புத்தாண்டுக்கு உங்க லவ்வருக்கு இந்த அழகான பரிசுகள கொடுத்து அசத்துங்க...!

முதியோர் இல்லத்திற்கு செல்லுங்கள்

முதியோர் இல்லத்திற்கு செல்லுங்கள்

ஆண்டு முழுவதும், முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பிள்ளைகளையும், உறவுகாரர்களுக்காகக் காத்திருந்து, ஏராளமான ஏமாற்றங்களுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள். அவர்களின் புத்தாண்டு சிறப்பானதாக மாற்ற மற்றும் நீங்களும் மகிழ்ச்சியுடன் இருக்க அவர்களுடன் உங்கள் நாளைச் செலவிடுங்கள். அப்போது, பாருங்கள் நீங்கள் எவ்வளவு அரவணைப்பையும் அன்பையும் பெறுவீர்கள் என்று. மனதார மகிழ்ச்சியாய் இந்த புத்தாண்டை இவ்வாறு சிறப்பாக கொண்டாடலாம்.

ஒன்றாக சமைக்கவும்

ஒன்றாக சமைக்கவும்

புத்தாண்டு தினத்தன்று இரவு உணவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. உங்கள் துணையுடன் நீங்கள் ஏன் சமைக்கக்கூடாது? சமையலறைக்கு நீங்கள் சென்று உங்கள் துணையுடன் ஒன்றாக சமையுங்கள், அதை அன்பாக செய்யுங்கள். நிச்சயம் அது உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். சமைக்கும்போது நிறைய வேடிக்கையாக இருங்கள் மற்றும் இறுதியாக ஒன்றாக சமைத்த உணவுகளை காதலுடன் பரிமாறிக்கொள்ளுங்கள்.

பழைய நினைவுகளை புதுப்பிக்கவும்

பழைய நினைவுகளை புதுப்பிக்கவும்

மகிழ்ச்சியான உங்களின் பழைய நினைவுகளை மீண்டும் புதுப்பிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. உங்கள் காதலியின் கைகளைப் பிடித்து, நீங்கள் முதன்முதலில் சந்தித்த இடங்களுக்குச் செல்வது மிகவும் அருமையான விஷயம். புத்தாண்டு தினத்தன்று நீங்கள் இதைச் செய்தால், இதுபோன்ற பல அன்பான நினைவுகள் மீண்டும் உங்களுக்கு ஞாபகம் வரும். இவ்வாறு வித்தியாசமாக உங்கள் புத்தாண்டு தினத்தை திட்டுமிடுங்கள். வரும் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

amazing things that you can do instead of partying this new year

Here are amazing things that you can do instead of partying this new year.
Desktop Bottom Promotion