For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...

ஐப்பசி மாதம் 30 நாளும் விஷேசம்தான். புரட்டாசியில் விரதம் இருந்து சனிக்கிழமை பெருமாளை தரிசனம் செய்துவிட்டோம். இனி ஐப்பசியில் தீபாவளி, கந்த சஷ்டி என விஷேசங்கள் களைகட்டப் போகின்றன. எந்த நாட்களில் என்ன வி

|

Recommended Video

Aippasi Month 2019 | ஐப்பசியில் நாட்களில் என்ன செய்யலாம்? | Boldsky Tamil

ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. ஐப்பசி மாதம் துலாம் மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் துலா ஸ்நானம் முக்கியமானது. தமிழ் மாதத்தில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். இந்த மாதத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. தீபாவளி, கந்த சஷ்டி, அன்னாபிஷேகம் போன்றவை முக்கியமானவை. இந்த நாட்களில் என்ன செய்யலாம் விரதமுறைகளை பார்க்கலாம்.

பொதுவாக பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது மரபு. ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைக்கலாம்.

Aippasi Month of 2019 Important Viratham Pooja Days

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. பலவிதமான பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை. இம்மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேய்பிறை ஏகாதசி

தேய்பிறை ஏகாதசி

ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி 'இந்திரா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது. இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும். ஐப்பசி 7, அக்டோபர் 24ஆம் தேதி இந்திரா ஏகாதசி வருகிறது விரதம் இருங்க.

கோவத்ச துவாதசி

கோவத்ச துவாதசி

ஐப்பசி மாதம் 8ம் தேதி 25-10-2019 கோவத்ச துவாதசி ஆகும். இன்று மாலை நேரத்தில் பிரதோஷ காலத்தில் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து பூஜித்து வழிபட்டால் வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். யம துவாதசி நாளில் தெற்கு நோக்கி விளக்கேற்றி எமனுக்கு பூஜை செய்ய முன்னோர்கள் மகிழ்வார்கள். ஆயுள் நீடிக்கும் எம பயம் நீங்கும்.

தனத்திரயோதசி

தனத்திரயோதசி

ஐப்பசி மாதம் 9ம் தேதி 26-10-2019 தனத் திரயோதசி ஆகும். இன்று தங்கம் வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது சிறப்பு. இதனால் பொருள் பணம் சேர்க்கை உண்டாகும். இன்று தன்வந்திரி ஜெயந்தி தன்வந்திரியை பூஜித்து வழிபட்டால் அனைவரும் நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

ஐப்பசி மாதம் 10 ஆம் தேதி 27-10-2019 தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம்-தேய்பிறை சதுர்தசி திதி நரக சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளன்று கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்தார் என்பது புராணம். இன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும் லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு. மஹாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் சிறக்கும்.

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம்

ஐப்பசி மாதம் 10ம் தேதி 27-10-2019 கேதார கௌரி விரதம். இன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயான சண்டை சச்சரவுகள் நீங்கும்.

வாஸ்து பூஜை

வாஸ்து பூஜை

ஐப்பசி 11 28 -10-2019 வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள். வீடு கட்ட பூஜை செய்யலாம். வாஸ்து பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த நாளில் சஷ்டி விரதம் இருக்க சங்கடங்கள் தீரும் எதிரிகள் தொல்லை ஒழியும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கந்த சஷ்டி விரதம்

யமத் துவிதியை

யமத் துவிதியை

ஐப்பசி மாதம் 12 தேதி 29-10-2019 யமத் துவிதியை இந்த நாளில் சகோதர சகோதரிகள் ஒன்று கூடி சகோதரியின் வீட்டில் விருந்து உண்டு மன மகிழ்ச்சியுடன் பரிசுகள் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தார் அனைவரும் தீர்க்க ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

ஐப்பசி சதயம்

ஐப்பசி சதயம்

ஐப்பசி மாதம் 22 நவம்பர் 7 ஐப்பசி சதய விழா தஞ்சாவூரில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

வளர்பிறை ஏகாதசி :

வளர்பிறை ஏகாதசி :

ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி பிரபோதினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஐப்பசி 22, நவம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி பௌர்ணமி

ஐப்பசி பௌர்ணமி

ஐப்பசி 26 நவம்பர் 12, சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி பேறு அடையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: தீபாவளி
English summary

Aippasi Month of 2019 Important Viratham Pooja Days

Here is the list of important days mukurtham days for the Aippasi month 2019.Sevan of the Tamil solar month Aippasi is called the month for Thula Matham. Deepavali Skanda sasti All Viratham celebration in India.
Story first published: Monday, October 21, 2019, 11:26 [IST]
Desktop Bottom Promotion