Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
18 வருடத்திற்கு பின் 2022-ல் மேஷம் செல்லும் ராகுவால் இந்த 4 ராசிக்காரங்க அதிர்ஷ்டத்தைப் பெறப் போறாங்க...
2022 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சியானது மேஷ ராசியில் நிகழ்கிறது. இந்த ராகு மேஷ ராசியில் எப்போது இடம் மாறப் போகிறது மற்றும் ராகு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை காண்போம்.
நவகிரகங்களின் நிலைகள் ஒவ்வொன்றும் நமது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில கிரகங்கள் புனிதமானதாகவும், சில கிரகங்கள் அச்சமுறுத்துபவையாகவும் இருக்கின்றன. அதில் சனிக்கு அடுத்தபடியாக இருப்பது ராகு. ஒருவரது ஜாதகத்தில் ராகு மோசமான நிலையில் இருந்தால், அது அந்நபரை பல இன்னல்களை சந்திக்க வைக்கும் மற்றும் பல மோசமான விஷயங்களை செய்யத் தூண்டும். அதுவும் 2022 ஆம் ஆண்டு ராகு தனது ராசியை மாற்றவுள்ளதால், பல ராசிகளுக்கு கெட்ட பலன்களும், சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் கிடைக்கப் போகின்றன. இந்த ராகு ஒருவருக்கு பல கஷ்டங்களைக் கொடுத்தாலும், சில நேரங்களில் ராகுவால் சிறப்பான பலன்களையும் கொடுக்கும்.

சனி பகவானைப் போலவே ராகுவும் மெதுவாக ஒரு ராசியில் இருந்து ம்ற்றொரு ராசிக்கு நகர்வார். ராகு ஒரு கிரகம் இல்லாவிட்டாலும், இது ஒரு நிழல் கிரகம். இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 1.5 வருடங்கள் ஆகும். தற்போது ராகு ரிஷப ராசியில் உள்ளார். 2022 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சியானது மேஷ ராசியில் நிகழ்கிறது. இந்த ராகு மேஷ ராசியில் எப்போது இடம் மாறப் போகிறது மற்றும் ராகு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ராகு எப்போது மேஷ ராசிக்கு இடம் மாறுகிறது?
18 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களுக்குப் பிறகு, ராகு மேஷ ராசிக்கு வருகிறது. அடுத்த வருடம், அதாவது 2022 ஆம் ஆண்டு ராகு ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 10.36 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறது. பொதுவாக ராகு பின்னோக்கி தான் நகர்வார். பின்னோக்கி மட்டுமே பயணிப்பார். இப்போது ராகு பெயர்ச்சியால் எந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட0த்தைப் பெறப் போறார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்
2022 ராகு பெயர்ச்சியின் போது மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் திடீரென்று உங்களைத் தேடி பணம் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களின் சம்பளம் அதிகரிக்கும் மற்றும் வியாபாரிகள் தொழிலில் லாபத்தைப் பெறுவார்கள். அதாவது உங்களின் வருமானம் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ராகு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.

கடகம்
2022 ராகு பெயர்ச்சியின் போது கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் பெருகும் மற்றும் விரிவடையும். நிதி நிலைமை வலுவாகும். இருப்பினும், பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உள்ள உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

துலாம்
2022 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு பெயர்ச்சியின் போது, துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய உத்தி உருவாகும் வாய்ப்புள்ளது. பயண யோகம் உண்டாகும். ஆனால் திருமண வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

விருச்சிகம்
2022 ஆம் ஆண்டில் விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் இருந்து வெளியேறி 6 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இந்த பெயர்ச்சியின் போது பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் தொழிலதிபராக இருந்தால், நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக ராகு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications