Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
12 ஆண்டுகளுக்கு பின் மீனம் சென்ற குரு சுக்கிரனுடன் இணையும் போது யாருக்கெல்லாம் சூப்பரா இருக்கும் தெரியுமா?
2022-இல் குரு சுக்ர சேர்க்கையால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசிக்கு சென்றுள்ளார். மீன ராசியில் குரு வந்திருப்பது, பல வழிகளில் நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் குரு மீன ராசிக்கு சென்றதை அடுத்து, சுக்கிரனும் மீன ராசிக்கு செல்கிறார். குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுமே சுப கிரகங்கள் ஆகும். ஆனால் இந்த இரண்டு கிரகங்களுக்கும் இடையே பகைமை உள்ளது. இந்நிலையில் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி சுக்கிரன் குரு ஆளும் மீன ராசிக்கு வருவதால், சில சிறப்பான பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது 2022-இல் குரு சுக்ர சேர்க்கையால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
குரு-சுக்ர சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்கள் தங்களின் திருமண வாழ்க்கையில் இனிமையான தருணத்தை அனுபவிப்பார்கள். மறுபுறம் திருமணம் நடப்பதில் பிரச்சனையை சந்திப்பவர்கள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.

ரிஷபம்
குரு சுக்ர சேர்க்கை காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதுவும் இக்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் மற்றும் சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். இருப்பினும், இக்காலத்தில் உங்கள் எதிரிகளிடம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! குரு-சுக்கிர சேர்க்கை உங்கள் செல்வாக்கை அதிகரித்து, வாழ்க்கையை சிறப்பாக்கும். திருமணமாகி குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் யோகம் உள்ளது. குழந்தை உள்ளவர்களுக்கு இக்காலத்தில் நற்செய்திகள் கிடைக்கும்.

கடகம்
குரு சுக்கிர சேர்க்கையால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் பொருள் வசதிகள் அதிகரிக்கும். இக்கால கட்டத்தில் மன மகிழ்ச்சியுடன், சொத்து மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. அதோடு வீடு, நிலம் வாங்க நினைப்பவர்களின் ஆசையும் இக்காலத்தில் நிறைவேற வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிர சேர்க்கை வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். இக்காலத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் காண வாய்ப்புள்ளது. உங்கள் நண்பர்களுடனான உறவு வலுவாக இருக்கும். இதனால் இக்காலத்தில் பல சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! குரு சுக்கிர சேர்க்கை உங்கள் வாழ்க்கையில் பல புதிய விஷயங்களைக் கொண்டு வரும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் அல்லது திருமணத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களின் வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

துலாம்
குரு சுக்கிர சேர்க்கையால் துலாம் ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, தேவையான செலவுகளை மட்டும் செய்யுங்கள். இதனால் நிதி பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால், தேவையில்லாத செலவுகளால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! குரு சுக்கிர சேர்க்கையால் உங்களின் கௌரவம் அதிகரிக்கும். இக்காலத்தில் நீங்கள் சமூக மற்றும் மத பணிகளில் தீவிரமாக பங்கேற்பீர்கள். இதனால் உங்கள் புகழும், மரியாதையும் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிர சேர்க்கையால் நிறைய பயணங்களை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளலாம். அதோடு இப்பயணம் நல்ல லாபத்தையும் தரும். இதனுடன், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பும் கிடைக்கும், இது மன கஷ்டத்தைக் குறைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த குரு சுக்கிர சேர்க்கையால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை செய்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கும்பம்
குரு சுக்கிர சேர்க்கையால் கும்ப ராசிக்காரர்கள் சுப பலன்களைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மேலும் உறவுகளும் வலுபெறும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள். இது எதிர்கால திட்டங்களை வலுப்படுத்தும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! குரு சுக்கிர சேர்க்கையால் உங்கள் வாழ்க்கையில் சுப காரியங்கள் நடக்கும். திருமணமான தம்பதிகளுக்கு இடையிலான உறவு மேம்படும். மேலும், இந்த கிரகங்களின் தாக்கத்தால், உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்கும்.



Click it and Unblock the Notifications