For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Aadi Amavasya 2022: ஆடி அமாவாசை அன்று யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?

2022 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 28 ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அமாவாசை ஜூலை 7 ஆம் தேதி புதன்கிழமை இரவு 10.07 மணிக்கு தொடங்கி, ஜூலை 28 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11.58 மணிக்கு முடிவடைகிறது.

|

தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமானது. 2022 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 28 ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அமாவாசை ஜூலை 7 ஆம் தேதி புதன்கிழமை இரவு 10.07 மணிக்கு தொடங்கி, ஜூலை 28 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11.58 மணிக்கு முடிவடைகிறது.

Aadi Amavasya: Date, Tithi, Significance, Rituals And Benefits Of Tarpanam In Tamil

ஆடி அமாவாசை நாளன்று பித்ருக்களாகிய முன்னோர்களுக்கு தர்பணம் செய்தால், அவர்களின் பாவங்கள் நீங்குவதோடு, அவர்களது ஆசீர்வாதங்களையும் பெறலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. உங்களுக்கு ஆடி அமாவாசை பற்றி விரிவாக தெரியாது என்றால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆடி அமாவாசையின் முக்கியத்துவம்

ஆடி அமாவாசையின் முக்கியத்துவம்

தெய்வ சக்திகள் பூமியை கிருபையால் ஆசீர்வதித்து பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பதால், ஆடி மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு எள்ளு மற்றும் நீரால் தர்ப்பணம் செய்வது அவர்களின் ஆத்மாக்கள் மோட்சத்தை அடைய உதவுகின்றன. மேலும் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என சாஸ்திரம் கூறுகிறது.

ஆடி அமாவாசை நாளில் சூரியனும், சந்திரனு ஒரே ராசியில் இருக்கின்றன. சூரியன் தந்தையையும், ஆன்மாவையும் குறிக்கிறது. சந்திரன் தாயையும், மனதையும் குறிக்கிறது. சூரியனும், சந்திரனும் சந்திரனின் ராசியான புற்றுநோயில் இருப்பதால், ஆடி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று ஆத்மாக்கள் படையல்களை ஏற்றுக் கொள்ள அதிக விருப்பம் கொண்டிருப்பதாகவும், அந்நாளில் அந்த ஆத்மாக்களின் வாரிசுகள் தர்ப்பணம் செய்யும் போது, ஆத்மாக்கள் திருப்தி அடைவதாகவும் நம்பப்படுகிறது. கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதத்தில் சூரியன் தெற்கு நோக்கு நகரத் தொடக்குகிறது. இது 'தட்சிணாயனம்' என்று அழைக்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் இது முதல் அமாவாசை என்பதால், தர்ப்பணம் சடங்குகளை செய்வதற்கு இது சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.

ஆடி அமாவாசைக்கு பின் இருக்கும் புராணம்

ஆடி அமாவாசைக்கு பின் இருக்கும் புராணம்

இந்து காவியமான மகாபாரத்தின் படி, ஒவ்வொரு மனித ஆத்மாவும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுள்களுக்கும் கடன்பட்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று பித்ரு கடன் (முன்னோர்களுக்கான கடன்). இது பிரம்மாவிற்கு கடன்பட்டிருப்பதைக் குறிக்கிறது. எனவே முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வதன் மூலம் இந்த கடன் அழிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசையின் சடங்குகள்

ஆடி அமாவாசையின் சடங்குகள்

ஆடி அமாவாசை அன்று செய்யக்கூடிய தர்ப்பணம் சடங்குகளை எப்போதும் நீர்நிலைகளான கடல், ஆறு, குளம் அல்லது ஏரி பகுதிகளில் செய்வது சிறந்தது. அதுவும் தர்ப்பணம் செய்வதற்கு முன் புனித நீர் நிலைகளில் நீராடுவது, அசுத்தங்களை சுத்தம் செய்வதாக கருதப்படுகிறது. பொதுவாக தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரத்தில் இருக்கும் அக்னி தீர்த்தத்தில் ஆடி அமாவாசை நாளில் தங்கள் முன்னோர்களுக்கான சடங்குகளைச் செய்ய ஏராளமான மக்கள் கூடுவார்கள். இது தவிர, புனித தளங்களான கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் மற்றும் காவிரி ஆற்றின் கரைகளிலும் தர்பணத்தை செய்வார்கள். உங்கள் முன்னோர்கள் மீதுள்ள அன்பை வெளிக்காட்ட ஆடி அமாவாசை நாளில் விரதமிருந்து, அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து அவர்களுக்கு படைத்து, வீட்டில் உள்ள பெரியோரை முதலில் சாப்பிடச் செல்லி பின் சாப்பிடலாம். இதனால் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதன் நன்மைகள்

ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதன் நன்மைகள்

ஆடி அமாவாசையன்று உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறலாம். அவை:

* உங்களின் மறைந்த முன்னோர்களின் ஆன்மாவை விடுவிக்க உதவும்.

* எதிர்மறை கர்மாவில் இருந்து விடுபடலாம்.

* வாழ்க்கையில் செழிப்பு மற்றும் சந்தோஷம் நீடித்திருக்கும்.

* உங்களின் தலைமுறை நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

* கருட புராணத்தின் படி, எள்ளு மற்றும் நீரை முன்னோர்களுக்கு தர்ப்பணமாக வழங்குவது அவர்களை மகிழ்விக்கும் மற்றும் உங்களுக்கு நீண்ட ஆயுள், வெற்றி, கடன்களில் இருந்து நிவாரணம் ஆகியவை கிடைக்கும் மற்றும் எதிரிகளின் தொல்லை நீங்கும்.

யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்?

யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்?

தாய், தந்தை இருவரும் இல்லாதவர்கள் கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். 'அப்பா இருக்கிறார், அம்மா இல்லை' மற்றும் 'அம்மா இருக்கிறார், அப்பா இல்லை' என்று கூறுபவர்களும் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அம்மா, அப்பாவிற்கு அண்ணன் தர்ப்பணம் செய்தால் போதும், தம்பி செய்யத் தேவையில்லை என்பதில்லை. தாய் தந்தையை இழந்த இரண்டு சகோதரர்களுமே தர்ப்பணம் செய்ய வேண்டும். இது தாய் தந்தைக்கு மகன்கள் செய்யும் முக்கிய கடமைகளுள் ஒன்று.

ஆகவே ஆடி அமாவாசை நாளில் மறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களுக்கு புண்ணியங்களை அளித்து, நீங்களும் புண்ணியங்களைப் பெற்று, முன்னோர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aadi Amavasya 2022: Date, Tithi, Significance, Rituals And Benefits Of Tarpanam In Tamil

Aadi Amavasya 2022: Date, Tithi, Significance, Rituals And Benefits Of Tarpanam In Tamil, Read on...
Desktop Bottom Promotion