For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் 75 பேருடன் தொடங்கி பிரிட்டிஷ் அரசாங்கத்தையே நடுங்க செய்த மாபெரும் போராட்டத்தை பற்றி தெரியுமா?

1930 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட உப்பு சத்யாகிரகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு எதிரான ஒரு வன்முறையற்ற போராட்டமே தாண்டியாத்திரை அல்லது தண்டி சத்யாகிரகம் ஆகும்.

|

நம் இந்திய நாடு சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் கடந்து விட்டது. 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் மூலமாக தொடங்கிய சுதந்திர போராட்டம் காந்தியின் பங்கெடுப்புக்கு பின் பல்வேறு வழிகளில் நடந்து வந்தது. ஒத்துழையாமை இயக்கத்திற்கு பிறகு உச்சம் தொட்ட போராட்டம் உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் மூலம் அடுத்த நிலையை எட்டியது.

1930 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட உப்பு சத்யாகிரகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு எதிரான ஒரு வன்முறையற்ற போராட்டமே தாண்டியாத்திரை அல்லது தண்டி சத்யாகிரகம் ஆகும். குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து மாநிலத்தின் கடலோரப் பகுதியில் உள்ள தண்டி கிராமத்த்தை நோக்கி நடைபெற்ற போராட்டத்திற்கு காந்தி தலைமை தாங்கினார். தண்டியை அடைய அவருக்கு 24 நாட்கள் தேவைப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலாற்று நிகழ்வின் தொடக்கம்

வரலாற்று நிகழ்வின் தொடக்கம்

காந்திஜி 78 தன்னார்வலர்களுடன் இயக்கத்தைத் தொடங்கினார், பின்னர் அவரது வழியில் ஆயிரக்கணக்கானோர் இணைந்தனர். உப்புச் சட்டங்களுக்கு எதிரான உள்நாட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் இந்த இயக்கம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக ஒரு பரபரப்பை ஏற்படுத்திய இந்த வரலாற்று இயக்கம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளது.

#1

#1

தண்டி போராட்டம் மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6, 1930 அன்று 24 நாட்களுக்குப் பிறகு முடிந்தது. இது காந்திஜி-ன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தாண்டி வரை 4 மாவட்டங்கள் மற்றும் 48 கிராமங்கள் வழியாக சென்றது.

#2

#2

பிரிட்டிஷ் ஆட்சி அறிமுகப்படுத்திய உப்புச் சட்டத்தை எதிர்ப்பதற்காக இந்த போராட்டத்தை மகாத்மா காந்தி நடத்தினார். இந்த உப்புச் சட்டத்தின் கீழ், இந்தியர்கள் உப்பு உற்பத்தி செய்வதிலிருந்தோ அல்லது விற்பனை செய்வதிலிருந்தோ தடை செய்யப்பட்டனர். ஆங்கிலேயர்கள் உப்பு தயாரிப்பதில் ஏகபோக உரிமையை மட்டுமல்லாமல், அதிக உப்பு வரியையும் விதித்தனர். இருப்பினும், காந்தி ஜி சட்டத்தை மீறி தண்டி கடற்கரையில் உப்பு தயாரித்தார் அவரை பின்பற்றி இந்தியா முழுவதும் இது தொடர்ந்தது.

#3

#3

சாதாரணமாக தொடங்கிய இந்த அணிவகுப்பு ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்தது மற்றும் விரிவான ஊடகங்கள் மூலம் இந்திய சுதந்திர இயக்கத்தை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்தது. 1930 மே 4 நள்ளிரவில் சட்டவிரோதமாக உப்பு உற்பத்தி செய்ததற்காக காந்திஜி கைது செய்யப்பட்டார்.

MOST READ: அதிகளவு நீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்... எந்தெந்த உறுப்புகள் இதனால் பாதிக்கப்படுகிறது தெரியுமா?

#4

#4

உப்பு வரிக்கு எதிரான இயக்கம் கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடர்ந்தது, கிட்டத்தட்ட 60,000 இந்தியர்கள் இதற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்காக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணற்ற இன்னல்களை சிறையில் அனுபவித்தனர்.

#5

#5

உப்பு சத்தியாக்கிரகம் பிரிட்டிஷ் உடைகள் மற்றும் பொருட்களை புறக்கணிக்க வழிவகுத்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு பேரிடியாக இந்த சம்பவம் மாறியது. இதனைத் தொடர்ந்து இந்திய சுதந்திர போராட்டம் அடுத்த நிலையை எட்டியது.

#6

#6

இந்த போராட்டத்தை தொடர்ந்து நில வருவாய், சவுக்கிதார் வரி மற்றும் பிற சட்டங்கள் உட்பட பிற சட்டங்களையும் இந்தியர்கள் எதிர்க்கத் தொடங்கினர்.

MOST READ: உங்க ராசிப்படி எந்த ராசிக்காரங்க உங்களுக்கு மோசமான நண்பராக இருப்பாங்க தெரியுமா? இவங்க நட்பே வேணாம்...!

#7

#7

1920-22 ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து பிரிட்டிஷாரை சவால் செய்வதில் இந்த அணிவகுப்பு மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தது. இது ஜனவரி 26, 1930 அன்று இந்திய தேசிய காங்கிரஸின் பூர்ணா ஸ்வராஜ் அறிவிப்பை நேரடியாகப் பின்பற்றியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

75 Years of Dandi March: Things That You Must Know About This Historic Movement In Tamil

Here are the things that you must know that how Dandi March movement created a stir against the British Colonial rule in India.
Desktop Bottom Promotion