Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
செப்டம்பரில் 3 கிரகங்கள் கன்னி ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது...
செப்டம்பர் மாதத்தில் 3 கிரகங்கள் கன்னி ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றிக் கொண்டிருக்கும். அப்படி மாறும் போது, சில கிரகங்கள் ஒரே ராசியில் இணைந்து பயணிக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் 3 கிரகங்கள் ஒரே ராசிக்கு செல்கின்றன. அதில் செப்டம்பர் 10 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் வக்ரமாகிறார். செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார். அதன் பின் செப்டம்பர் 24 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். இப்படி 3 கிரகங்களும் கன்னி ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். வேலையில் வெற்றி கிடைக்கும். உங்கள் எதிரிகளை வீழ்த்தும் திறனைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை ஏதேனும் நோயால் அவதிப்பட்டு வந்தால், இக்கால கட்டத்தில் அதிலிருந்து குணமடைவீர்கள். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இக்காலகட்டம் பயனுள்ளதாக இருக்கும். மொத்தத்தில், இந்த நற்பலன்களை சூரியன் கன்னி ராசிக்கு நுழைந்ததும் பெறுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். உங்களின் வீட்டைப் புதுப்பிக்க இது சிறந்த காலம். பணியிடத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். இருப்பினும் பணியிடத்தில் வேலைப்பளு அதிகம் இருக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. புதன் வக்ர பெயர்ச்சிக்கு பின் மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை அற்புதமாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் சாதகமான பலனைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்கள் முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். இக்காலத்தில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. இப்பயணங்கள் நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். சிறந்த குடும்ப வாழ்க்கை மற்றும் சமூகத்தில் அதிக மரியாதையுடன் இருப்பதோடு, திடீர் நிதி ஆதாயங்களும் கிடைக்கும். இந்த பலன்கள் அனைத்தும் சூரியன் கன்னி ராசிக்கு சென்ற பின்னர் பெறுவார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாகும். இதனால் கையில் பணம் அதிகம் குவியும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும். காதல் உறவுகளும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிப் பெறுவார்கள். இந்த நற்பலன்கள் அனைத்தையும் சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்லும் போது கும்ப ராசிக்காரர்கள் பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications