Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
விருச்சிக ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கையால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
மூன்று கிரகங்களும் விருச்சிக ராசியில் ஒன்றாக பயணிப்பதால், சில ராசிக்காரர்கள் தங்கள் துறையில் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளதோடு, செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.
ஜோதிடத்தின் படி, நவம்பர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் 3 மிகப்பெரிய கிரகங்கள் ஒரே ராசியில் பயணிக்கவுள்ளன. மேலும் ஒரே ராசியில் 3 கிரகங்கள் சேர்வதால், 2 சுப யோகங்களும் உருவாகின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு ஏராளமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன.

ஜோதிடத்தின் படி, 2022 நவம்பர் 11 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து 2022 நவம்பர் 13 ஆம் தேதி புதன் விருச்சிக ராசிக்கு செல்கிறார். அதன் பின் மூன்று நாட்கள் கழித்து சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். இந்த மூன்று கிரகங்களும் விருச்சிக ராசியில் ஒன்றாக பயணிப்பதால், சில ராசிக்காரர்கள் தங்கள் துறையில் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளதோடு, செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

2022 நவம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி
சுக்கிரன் நவம்பர் 11 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இரவு 7.52 மணிக்கு மாறுகிறார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாவார். மேலும் இவர் செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, அழகு மற்றும் இளமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

2022 நவம்பர் மாத புதன் பெயர்ச்சி
பேச்சு, தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் புதன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நவம்பர் 13 ஆம் தேதி இரவு 9.06 மணிக்கு செல்கிறார்.

2022 நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அந்த வகையில் 2022 நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனது நட்பு ராசியான செவ்வாய் ஆளும் விருச்சிக ராசிக்கு மாலை 6.58 மணிக்கு செல்கிறார்.
இப்போது விருச்சிகம் செல்லும் 3 கிரகங்களால் எந்தெந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ஜோதிடத்தின் படி, புதன் ரிஷப ராசியின் 5 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதியாவார். எனவே இந்த புதன் பெயர்ச்சியால் வியாபாரம் செய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சுக்கிரன் 7 ஆவது வீட்டில் இருப்பதால், திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

மிதுனம்
சூரியன் மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். அதோடு அரசாங்க வேலை செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாகும். மேலும் மாணவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். முந்தைய வாக்குவாதங்கள் இக்காலத்தில் முடிவுக்கு வரும். சுக்கிர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு இன்னும் சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் அல்லது பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் நல்ல வளர்ச்சியைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் தங்களது வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள்.

துலாம்
நவம்பர் மாதத்தில் சூரியனும், புதனும் மாறுவதால், துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். மேலும் குடும்ப சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும். சுக்கிரன் விருச்சிக ராசிக்கு வருவதால், இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications