Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
2022 இந்த ராசி பெண்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டின் கிரக இயக்கங்களால் எந்த ராசிப் பெண்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதை இக்கட்டுரையில் காண்போம். உங்கள் ராசி இந்த பட்டியலில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
2022 ஆம் ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். பலரது மனதிலும் புத்தாண்டு குறித்த எண்ணங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும். சொல்லப்போனால் 2022 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானது மற்றும் முக்கியமான ஆண்டும் கூட. ஏனெனில் 2022 ஆம் ஆண்டில் தான் சனி பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி போன்ற முக்கியமான கிரக மாற்றங்கள் ஏற்படவுள்ளன. பொதுவாக இந்த கிரக பெயர்ச்சிகள் ஒருவரது வாழ்வில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தக்கூடியவை.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் கிரக இயக்கங்களால் எந்த ராசிப் பெண்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதை இக்கட்டுரையில் காண்போம். உங்கள் ராசி இந்த பட்டியலில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்கார பெண்களுக்கு 2022 ஆம் ஆண்டு மிகவும் ஸ்பெஷலானதாக இருக்கும். நீங்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவரானால், இந்த புத்தாண்டில் அது முடிவடையும். இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கப் போகிறது. மேலும் இந்த ஆண்டில் உங்களின் வெளிநாட்டில் படிக்கும் கனவும் நிறைவேறும். ஆனால் 2022-ல் ஆரோக்கியத்தில் மட்டும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

கடகம்
கடக ராசி பெண்களுக்கு 2022 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்கும். கடந்த ஆண்டில் உங்களால் முடிக்க முடியாமல் போன வேலைகளை இந்த ஆண்டில் வெற்றிகரமாக முடிப்பீர்கள். இந்த ஆண்டில் சிவபெருமானை வழிபாடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும்.

கன்னி
கன்னி ராசி பெண்களுக்கு 2022 ஆம் ஆண்டு பல விஷயங்களில் சாதகமாக இருக்கும். கல்வி துறையில் நல்ல பலன்கள் காணப்படும். மேலும் 2022 ஆம் ஆண்டில் முடிவடையாத பல பணிகளை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. விநாயகர் வழிபாடு வாழ்வில் உள்ள தடைகளை நீக்கி, நற்பலன்களை வழங்கும்.

தனுசு
தனுசு ராசி பெண்களுக்கு 2022 ஆம் ஆண்டு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இந்த ஆண்டில் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். தாயின் ஆரோக்கியம் கவலையை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. செலவுகளை கண்காணியுங்கள். இல்லாவிட்டால் பட்ஜெட் பாதிக்கப்படும்.



Click it and Unblock the Notifications
