Just In
- 54 min ago
சுவையான... தேங்காய் சாதம்
- 2 hrs ago
ஆண்களே! உங்க மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் தெரிஞ்சா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- 2 hrs ago
இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க... இல்லன்னா அது பெரிய ஆபத்தாயிடும்...
- 2 hrs ago
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்க லாக்கர் இந்த இடத்தில் இருந்தா உங்க வறுமை எப்பவுமே உங்களைவிட்டு போகாது!
Don't Miss
- Movies
"ஜெயிச்சவன் மட்டும் தான் உயிரோடு இருப்பான்"… அக்னி சிறகுகள் மிரட்டலான டீசர் அவுட் !
- News
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் ஆளுநர் ரவி தீவிரம்.. அரசுகள் மறைத்த கலாச்சாரத்தை மீட்குமாம்
- Automobiles
சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்தது கீவே!
- Finance
5 மாதத்தில் 25% இழப்பு.. ராதாகிஷன் தமனிக்கே இந்த நிலைமையா..?
- Sports
"ப்ளான் சக்சஸ்" டாஸில் தோற்றாலும் ஆர்சிபிக்கு அடித்த லக்.. எவ்வளவு ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம்?
- Technology
ரூ.12,500-க்கு ஒப்போ ஏ57 2022 அறிமுகம்: மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி, 5000 எம்ஏஎச் பேட்டரி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 தீபாவளி இந்த 5 ராசிக்காரங்களுக்கு மறக்க முடியாததாக இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் லட்சுமி தேவி மற்றும் விநாயக பெருமானுக்கு சிறப்பான பூஜைகளை செய்து வழிபடுவது வழக்கம். லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறார். லட்சுமி தேவியை பய பக்தியோடு வணங்குபவர்களுக்கு, லட்சுமி தேவி கண்டிப்பாக அருள் புரிவதாக நம்பப்படுகிறது. மேலும் லட்சுமி தேவியை வணங்கினால், குடும்பத்தில் உணவிற்கும், பணத்திற்கும் பஞ்சம் ஏதும் இருக்காது.
இந்த வருட தீபாவளி மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த ஆண்டு தீபாவளி நாளன்று நான்கு கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாக உள்ளது. தீபாவளி நாளில் சூரியன், புதன், செவ்வாய், சந்திரன் போன்ற கிரகங்கள் துலாம் ராசியில் ஒன்றாக இருக்கும். இதன் காரணமாக, தீபாவளி அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பின்வரும் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக மற்றும் மறக்க முடியாததாக இருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை காண்போம் வாருங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆம் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த யோகத்தின் போது அறிவாற்றல் மேம்பாடு ஏற்படும் மற்றும் தொழிலில் புதிய முன்னேற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சதுர்கிரக யோகம் கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 4 ஆம் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் தீபாவளி நாளன்று பணம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. லட்சுமி தேவியின் முழு ஆசீர்வாதம் கிடைப்பதோடு, புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் நீங்கள் எங்காவது முதலீடு செய்திருந்தால், இப்போது அதன் பலனைப் பெறலாம்.

கன்னி
கன்னி ராசியின் 2 ஆம் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாவதால், இந்த ராசிக்காரர்களின் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் சம்பந்தமாக சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 11 ஆம் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இந்நிலையில் இந்த ராசிக்காரர்கள் முதலீட்டில் நிறைய லாபத்தை எதிர்பார்க்கலாம். ஏதேனும் தொழிலில் ஈடுபட்டிருந்தால், நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த தீபாவளியன்று இளையவர்கள் தங்கள் பெரியவர்களிடமிருந்து நிறைய ஆச்சரியங்களையும் பரிசுகளையும் பெறலாம்.

மகரம்
மகர ராசியின் 10 ஆம் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் வேலையில் இருப்பவர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். தொழிலில் உள்ள தடைகள் நீங்கும். நீங்கள் ஏதேனும் தொழிலை தொடங்க விரும்பினால், இந்த நேரம் அதற்கு ஏற்றது.