Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்!
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடிக்க கூடியவர்களாம் தெரியுமா?
நடிப்பு என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாகும். திரையில் நடிப்பவர்கள் மட்டும்தான் நடிகர்கள் என்று அர்த்தமல்ல.
நடிப்பு என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாகும். திரையில் நடிப்பவர்கள் மட்டும்தான் நடிகர்கள் என்று அர்த்தமல்ல. நம் அன்றாட வாழ்க்கையில் அனைவருமே மற்றவர்களிடம் வெவ்வேறு காரணங்களுக்காக நடித்து கொண்டுதான் இருக்கிறோம். அப்படி நடிப்பதுதான் இன்று வாழ்க்கையின் எதார்த்தமாகவே மாறிவிட்டது.

என்னதான் நாம் அனைவருமே நிஜ வாழ்க்கையில் நடித்தாலும் திரை நட்சத்திரங்களின் மீது அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதற்கு காரணம் அவர்களின் அதீத நடிப்பாற்றல்தான். ஆனால் நடிகர்களை மிஞ்சும் நடிப்பு சிலருக்கு இயற்கையிலேயே வரும். அதற்கு காரணம் அவர்களின் ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் சிறந்து நடிகர்களாக வருவார்கள் என்று பார்க்கலாம்.

சிம்மம்
மேடையும், திரையும் இவர்களுக்கு கை வந்த கலையாகும். இவர்கள் நடிப்பில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல, மேலும் இவர்கள் தான் எங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங்கு தானாக செல்லக்கூடிய திறமை உடையவர்கள். இயற்கையாகவே இவர்கள் தங்கள் திறமையை அனைவரிடமும் காட்டிக்கொள்ள விரும்புவார்கள். ஆயிரம் மக்கள் முன் நடப்பது இவர்களுக்கு பெரிதல்ல, மற்றவர்களை தங்கள் திறமையால் ஓரங்கட்டுவதே இவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

ரிஷபம்
உங்களுக்கு உங்களால் உதவ முடியாது. நீங்கள் ஒரு நடிகர் அதனை நல்லதாகவே செய்யவும் கூடியவர். உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்ள வைக்க நீங்கள் நடிப்பீர்கள். மற்றவர்களை உங்களை போல நடிக்க வைக்க நினைப்பீர்கள். மற்றவர்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றும் மற்றவர்களிடம் இருந்து அவர்களின் சிறந்த குணத்தை எப்படி வெளிக்கொண்டு வருவது என்று இவர்கள் நன்கு அறிவார்கள். நீங்கள் மற்றவர்களை உங்களின் நலனுக்காக பயன்படுத்த நடித்தாலும் அது மற்றவர்களுக்கு கெடுதலை ஏற்படுத்தாது.

மீனம்
ஒரு கூட்டம் இருந்தால் அது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அங்கு நடித்து நீங்கள் விரும்பும் பாராட்டை பெற விரும்புவார்கள். இது உங்களுக்கு திரையரங்கு படைப்புகளில் அதிகம் உதவும். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது என்பது இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று, அதனை அடைய என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். மற்ற துறைகளை காட்டிலும் நடிப்பும், சினிமாவும் இவர்களுக்கு மிகவும் சிறந்த எதிர்காலத்தை வழங்கும்.

கன்னி
திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் நடிப்பில் சிறந்து விளங்குபவராக இருக்கிறார்கள். நீங்கள் சிறந்த நடிகர் அதில் முழுமையாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள், இவர்கள் உங்களை சாதாரணமானவர்களாக எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நீங்கள் என்ன பாத்திரம் ஏற்றுக்கொண்டாலும் அதனை சரியாக செய்ய வேண்டும் என்னும் பிடிவாதம் கொண்டவர்கள் இவர்கள்.

தனுசு
திறமையான நடிகரான இவர்கள் தங்களின் கற்பனை உலகிற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். நீங்கள் நிஜ உலகத்தில் வாழ்வதை விட கற்பனை உலகில்தான் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். கற்பனை உலகம்தான் இவர்களுக்கு எப்பொழுதும் பிடித்த இடமாக இருக்கும். இவர்களின் நிஜ உலக பிரச்சினைகளில் இருந்து இவர்களை பாதுகாக்கும் விஷயமாக நடிப்பு இருக்கிறது. நடிப்பதற்கோ, திறமையை காட்டுவதற்கோ இவர்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்.

கடகம்
மற்றவர்களின் பாராட்டை பெறுவது என்பது இவர்களுக்கு போதை தரும் ஒன்றாகும். உங்களிடம் பொழுதுபோக்கை எதிர்பார்ப்பவர்களை இவர்கள் ஒருபோதும் ஏமாற்றமாட்டார்கள். நடிப்பதற்கோ, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடிப்பதற்கோ இவர்களுக்கு கூச்சம் என்பதே இருக்காது. பொதுஇடமோ அல்லது பொதுமக்களோ இவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாது. இவர்கள் முயற்சி செய்தால் சிறந்த நடிகராக வர வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications