Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு உலகம் முழுவதையும் சுற்றி பார்க்க வாய்ப்புள்ளதாம்...!
இந்த உலகம் என்பது மிகவும் பெரியது. உலகம் முழுவதையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அனைவராலும் அது முடியாது.
இந்த உலகம் என்பது மிகவும் பெரியது. உலகம் முழுவதையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அனைவராலும் அது முடியாது. சிலர் வீடுதான் உலகம் என்று வாழ்வார்கள், சிலரோ வீட்டை தாண்டி வெளியே சென்று புதிய இடங்கள், புதிய அனுபவங்கள், புதிய நபர்கள் என அனைத்தையும் சந்திக்க விரும்புவார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு வீடு ஒரு சிறை போல தோன்றும். எனவே இவர்கள் முடிந்தளவு வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்சிப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் இந்த குணத்துடன் இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி சிந்திப்பார்கள் என்று பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் சொந்த இடத்திலிருந்து எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் செல்ல விரும்புவார்கள். இதனால் அவர்கள் வாழ்க்கையில் புதிய கண்ணோட்டடத்தை பெறலாம் என்று நம்புவார்கள். தூரமாக செல்வது விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி உற்சாகமாக உணரவைக்கிறது. மேலும் வாழ்க்கையில் எப்படியெல்லாம் மாற்றங்களை உண்டாக்கலாம் என்றும் இவர்கள் எண்ணுவார்கள். ஒவ்வொரு பயணமும் இவர்களின் ஆற்றலை அதிகரித்து கொண்டே இருக்கும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் சாகசங்களை விரும்புபவர்களாக இருப்பார்கள், பயணம் செய்வதை விட பெரிய சாகசம் வேறு என்ன இருந்துவிட போகிறது. வெளியே செல்வதன் மூலம் இவர்கள் புதிய கலாச்சாரங்கள், உடைகள், வாழ்க்கை முறைகளுக்கு இவர்கள் தங்கள் மனதை திறக்கிறார்கள். எந்தவித யோசனையுமின்றி புதிய சூழ்நிலையில் குதிப்பதற்கு தனி தைரியம் வேண்டும் அது இவர்களிடம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. வாழ்க்கை தனக்கு அளிக்கும் அதனை அனுபவங்களையும் ஏற்றுக்கொள்ள இவர்கள் தயாராக இருப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் அங்கு நண்பர்களை உருவாக்கி கொள்கிறார்கள். இதற்கு காரணம் அனைத்து மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் அவர்களின் குணம்தான். இவர்கள் மிகவும் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள் அது தனக்கு வீட்டை விட்டு வெளியே சென்றால்தான் கிடைக்கும் என்று நம்புபவர்கள் இவர்கள். சவால்களை ஏற்றுக்கொண்டு அதனை சாதிப்பதில் இவர்களுக்கு அலாதி பிரியம் இருக்கும். ஒருபோதும் தங்கள் வீட்டில் உதவிக்காக சென்று நிற்பதை இவர்கள் விரும்பமாட்டார்கள்.

சிம்மம்
இவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்வரை இவர்களுக்கான அடையாளத்தை பெறமுடியாது. அவர்களுக்கு தெரிந்தவர்கள் அவர்களை சுற்றி இருக்கும்போது அவர்களுக்கான அடையாளத்தை உருவாக்குவது அவர்களுக்கு மிகவும் கடினமாகும். சிம்ம ராசிக்காரர்கள் வெளியிடத்திற்கு சென்றால்தான் ஒரு புதிய தொடக்கத்தை தொடங்குவார்கள். மேலும் அவர்கள் விரும்பியவர்களாக மாற அவர்கள் வெளியே வந்தால்தான் முடியம். இவர்கள் தனியாக இருக்கும் பொது இவர்கள் மிகவும் வலிமையானவர்களாகவும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

தனுசு
இவர்களுக்கு வெளியே செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் முதல் முறை அதனை தவற விட்டுவிடுவார்கள். இவர்கள் வெவேறு இடங்களில் வாழ்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துவார்கள். புதிய விஷயங்களும், அனுபவங்களும் இவர்களுக்கு ஊக்கத்தைத் தருகிறது. இவர்கள் சுதந்திரத்தை உணரும்போது அதனை மேலும் மேலும் அனுபவிக்க விரும்புவார்கள். அதற்கான முயற்சியையும் செய்வார்கள்.



Click it and Unblock the Notifications











