Latest Updates
-
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
அடுத்த மாச புதன்பெயர்ச்சியால இந்த 6 ராசிக்காரங்களுக்கு பெரிய அடி இருக்குமாம்... பரிகாரம் இருக்கா?
இந்த வருடம் மார்ச் 5-28 ஆம் தேதியில் ஏற்படும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விளைவை ஏற்படுத்த போகிறது. பாதிப்பை சந்திக்க போகும் அந்த 6 ராசிக்காரர்கள் யார் யார் என்று இங்கே காண்போம்.
எங்கயோ வானத்தில் இருக்கும் கிரக நிலை எப்படி நம் வாழ்க்கையை பாதிக்கும் என்பது இன்றளவும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. ஆனால் ஜோதிட கூற்றுப்படி பார்த்தால் அந்த மாற்றங்கள் நம் வாழ்விலும் நடக்கத்தான் செய்கிறது.
ஏழரைச் சனியிலிருந்து, ராகு கேது பெயர்ச்சி வரை ஜோதிட கணிப்பும் முன்கூட்டியே நம் ராசிக்கான அனுகூலங்களை சரியாக சொல்லத் தான் வருகிறது .

அந்த வகையில் இந்த வருடம் மார்ச் 5-28 ஆம் தேதியில் ஏற்படும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விளைவை ஏற்படுத்த போகிறது. பாதிப்பை சந்திக்க போகும் அந்த 6 ராசிக்காரர்கள் யார் யார் என்று இங்கே காண்போம்.

மிதுனம்
உங்கள் ஆளும் கிரகமே புதன் தான். அப்படி என்றால் புதனின் பார்வை இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? மற்றவர்களுடன் ஏற்படும் தொடர்பில் இடையூறு ஏற்படலாம். மக்கள் தொடர்பு தான் உங்கள் பலம் ஆனால் தற்போது அதில் பாதிப்பு வரக் கூடும். எனவே உங்கள் நாவையும் பேச்சையும் கவனமாக பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் வீண் சண்டைகள், எதிரிகள் உருவாக வாய்ப்புள்ளது. புதன் பார்வை அகலும் வரை பேச்சை குறைத்து கொள்ளுங்கள்.

கடகம்
இதுவரை அமைதியாக இருந்த கடக ராசிக்காரர்களால் இனி அமைதியாக இருக்க முடியாது. அதிக கோபம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவை தென்படும். எந்த காரணமும் இல்லாமல் கோபம் தலைக்கேறும். எனவே பேசுவதற்கு முன் பொறுமையாக இருந்து செயல்படுங்கள்.

சிம்மம்
ஒரு அறையில் இருந்தால் கூட சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த மார்ச் மாதம் உங்களுக்கு அப்படி அமையாது. எனர்ஜி குறைந்து காணப்படுவீர்கள். சோம்பேறித்தனம், விருப்பமின்மை எல்லாம் தொற்றிக் கொள்ளும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் குழப்பமான பேர்வழிகள். இந்த வருடமும் அதிக குழப்பத்தில் இருப்பீர்கள். எனவே அதிகம் யோசிக்க வேண்டாம். முடிந்ததை பற்றி யோசிக்காமல் பொறுமையாக இருங்கள். சிக்கல்கள் சீக்கிரம் சரியாகி விடும்.

துலாம்
தங்கள் மனதில் உள்ளதை யாரும் அறியாமல் மறைப்பதில் வல்லவர்கள் துலாம் ராசிக்காரர்கள். ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குள் திறமை முழுவதையும் வெளிக்கொணர முயற்சி செய்யுங்கள். கூலாக எதையும் டீல் பண்ணுங்க. மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டாம்.

கும்பம்
இந்த புதன் பார்வையால் தேவையற்ற விரக்தி உங்களை தாக்கும். வித்தியாசமான பார்வை முயற்சியை கையாளுங்கள். நேர்மறையாக யோசிப்பது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மோசமான விளைவை தள்ளி வைக்கும்.



Click it and Unblock the Notifications
