Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
அபிநந்தனோட கொடுவா மீசை வெட்டணுமாம்... சலூன் கடை எப்படி நிரம்பி வழியுதுனு நீங்களே பாருங்க...
கமெண்டோ அபிநந்தனின் மீசை இப்போது இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அது பற்றிய ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு தான். அது பற்றிய நடப்பினை விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
பாகிஸ்தானிடம் சிக்கி பின் மீண்டு இந்தியாவுக்கு திரும்பிய அபிநந்தன் மீசை தற்போது இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் எஃப்16 போர் விமானத்தை விக்21 போர் விமானத்தில் துரத்திச் சென்று விரட்டி அடித்தவர் தான் அபிநந்தன்.

தற்போது இவருடைய பெயரைக் கேட்டால் குழந்தைக்குக் கூட தெரியும். இதில் இன்னும் கூடுதல் பெருமை அவர் ஒரு தமிழர் என்பது தான். அவருடைய மீசை இன்னும் கொஞ்சம் கூடுதல் கம்பீரத்தை நமக்குக் கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அருவா மீசை இப்போது டிரெண்ட் ஆகிவருவதைப் பற்றித் தான் நாம் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

புது நாயகன்
பாகிஸ்தான் தீவரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலின் போது, பாகிஸ்தானிடம் சிக்கிய விமானப்படை விங் கமாண்டோவை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. அவர் இந்திய எல்லையைத் தொடும்வரை பரபரப்புக்குப் பஞ்சமில்லை. அதுமட்டுமா நம் நாட்டு இளைஞர்களுடைய புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

அபிநந்தன் மீசை
பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை அபிநந்தன் வெற்றிகரமாக வீரநடை போட்டு இந்தியா திரும்பிய நிலையில் அவர் உலக அளவில் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனார். தற்போது அவருக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளித்து வரப்படுகிறது. இந்த நிலையில் அபிநந்தன் எப்படி டிரெண்ட் ஆனாரோ அதைவிட அதிகமாக அவருடைய மீசை இன்றைய இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

கெட்டப்
பிரபலங்கள், திரை நட்சத்திர கதாநாயகர்கள், கிரிக்கெட் வீரர்களுடைய புதுப்புது ஸ்டைலை ஃபாலோ செய்து ஆடைகள், ஹேர்கட், ஸ்டைல் என தங்களை மாற்றிக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். அந்த வரிசையில் கமாண்டோ அபிநந்தனைப் போன்று ஹேர்கட்டும் மீசையும் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பெயர் டிரெண்ட்
உலகம் முழுவதும் டிரெண்ட் ஆன அபிநந்தன் என்ற பெயரை பல்வேறு மாநிலங்களிலும் தற்சமயம் பிறக்கும் தங்களுடைய ஆண் குழந்தைகளுக்கு அபிநந்தன் என்னும் பெயரை சூட்டி அவருக்கும் தங்களுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இதுகூட பரவாயில்லங்க. வேற என்னலாம் நடக்குது தெரியுமா?

அட்ராக்டிவ் மீசை
இளைஞர்களின் மத்தியில் அபிநந்தனின் மீசை பெரும் கம்பீரத்தையும் கர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அபிநந்தன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரைப் போல தங்களுடைய மீசையை மாற்றிக் கொள்வதில் பெருமையாகக் கருதுகிறார்கள்.

முக்கிய நகரங்கள்
அபிநந்தனின் மீசை கிராமப்புற இளைஞர்களை மட்டுமல்லாது பெரு நகரங்களான சென்னை, பெங்களூரூ, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இளைஞர்கள் நீ, நான் என போட்டிப் போட்டுக் கொண்டு அபிநந்தனின் மீசை போல் மீசை வைத்துக் கொள்ள பார்லர்களில் முண்டியத்துக் கொண்டு நிற்கிறார்கள். அந்த மீசை மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சலூன் கடைகள்
சலூன் கடைகளில் நாடு முழுவதும் அபிநந்தனின் கெட்டப்புக்கு மாறுவதற்கு பெரும் வரவேற்பு கூடிக் கொண்டே போகிறோம். முடி திருத்த வருகிறவர்கள் அவர் ஒரு ரியல் ஹீரோ. அது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. அவரை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று பெருமிதமாகச் சொல்கிறார்கள். அதனால் நிறைய கடைகளில் தற்போது, இங்கு அபிநந்தன் ஹேர்கட், மீசை டிசைன் செய்யப்படும்னு போர்டே வெச்சிட்டாங்கன்னா பார்த்துக்கங்களேன்.



Click it and Unblock the Notifications