For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகை போக்க கணவரின் சிறுநீரில் தலையை அலசும் பெண்... வாரத்துல ரெண்டு நாள் இப்படிதானாம்

|

உலகம் மிகவும் பெரியது. இந்த உலக வாழ்க்கை நமக்கு பல்வேறு அனுபவங்களை சொல்லித் தருகிறது. காடுகளில் வாழ்ந்த மனிதன் இன்று காட்டை அழித்து நாடாக்கி அதனை ஆண்டு வருகிறான். மீண்டும் காட்டு வாழ்க்கைக்கு செல்ல நம்மில் பலர் நினைப்பதில்லை. அந்த அளவிற்கு இந்த உலகத்தை செயற்கை மயமாக்கி அனைத்தையும் தனது கட்டுபாட்டில் வைத்திருக்கிறான் மனிதன். ஆனால் நம்மில் சிலர் இன்னும் அந்த காட்டு வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர்.

அதற்கான தேடலில் தனது வாழ்வை கடத்தி வருகின்றனர். எல்லாமே நவீன மயமாகி வரும் இந்த சூழலில் மீண்டும் காட்டு வாழ்க்கை வாழ்வது நாம் நினைக்கும் அளவிற்கு எளிய விஷயம் அல்ல. முற்றிலும் இயற்கையை மட்டும் சார்ந்து வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க ஆசையாகவே உள்ளது. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் ஒரு தம்பதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் அந்த பெண்

யார் அந்த பெண்

அவர்கள் நியுசிலாந்தை சேர்ந்த ஒரு ஜோடி. அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக காடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களும் இயற்கையானது. குறிப்பாக அந்த பெண், தனது சிறுநீரை தனது தலையை அலசுவதற்கு பயன்படுத்துகிறார். கேட்கவே தலை சுற்றுகிறதா? தொடர்ந்து படியுங்கள்... இன்னும் அதிகமாக இதனைப் பற்றி தெரிந்து கொள்ள..

MOST READ: இணையத்தில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்கள்... பார்த்து விசில் அடிங்க...

பொடுகைப் போக்க

பொடுகைப் போக்க

நாம் மேலே குறிப்பிட்ட ஜோடி, மிரியம் லான்ஸ்வுட் மற்றும் பீட்டர் . அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் சிறு சிறு விஷயங்களை நம்மிடம் தற்போது வெளியிட்டுள்ளனர். வாருங்கள் அது என்னவென்று தெரிந்து கொள்வோம்

காட்டில் வாழ

காட்டில் வாழ

இந்த தம்பதிகள் காட்டில் நான்கு காலங்களை கழிக்க முடிவெடுத்தனர்:

பீட்டரும் அவர் மனைவி மிரியமும். ஒரு ஆண்டில் நாம் கடந்து வரும் நான்கு காலங்களையும், அதாவது, கோடை, மழை, குளிர் மற்றும் வசந்த காலங்களை காட்டில் கழிக்க விரும்பினர். அதற்கான ஏற்பாடுகளுடன் முதல் குளிர் காலத்தில் அவர்கள் காட்டை நோக்கி பயணித்தனர். பயணத்தின் போது மிரியம் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை எடுத்துச் செல்ல மறந்து விட்டதால் அவருடைய தலையில் பொடுகு பாதிப்பு ஏற்பட்டது.

MOST READ: அடிப்பாவி!... பணத்துக்காக தான் பயன்படுத்திய உள்ளாடைகளை ஆண்களிடம் விற்று காசாக்கிய பெண்

எஸ்கிமோ வழி

எஸ்கிமோ வழி

பொடுகைப் போக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார், மிரியம். இயற்கையான முறைகள் பற்றி விவாதிக்கும் நேரத்தில், பீட்டர், எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் வழியை அறிவுறுத்தினார். அதாவது, எஸ்கிமோக்கள் பொடுகைப் போக்க தங்கள் முதல் சிறுநீரைப் பயன்படுத்துவார்கள். அதே வழியைப் பின்பற்றி பொடுகைப் போக்க தன் மனைவியிடம் கூறினார் பீட்டர். கணவன் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள முடிவெடுத்தார் மிரியம்.

காலை சிறுநீர் சேகரிப்பு

காலை சிறுநீர் சேகரிப்பு

மிரியமுக்கு ஒரு சிறிய டப்பாவில் காலை சிறுநீரை சேகரிப்பது கடினமாக இருந்தது. ஆனாலும் தனது தலையில் உள்ள பொடுகை எப்படியாவது விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தினமும் சிறுநீரை சேகரித்து வந்தார். சிறுநீரை தலை முடி உறிஞ்சும் விதத்தில் முதலில் ஆற்று நீரில் தலையை ஈரம் செய்த பின், சிறுநீரைக் கொண்டு தலை முடியை அலசி வந்தார்.

MOST READ: 22 கிலோ பிளாஸ்டிக் கழிவை விழுங்கி பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி திமிங்கலம்... பார்க்கவே பாவம் இருக்கு

இதர இயற்கைப் பொருட்கள்

இதர இயற்கைப் பொருட்கள்

இந்த சிறுநீர் உத்தி தவிர, வேறு சில இயற்கைப் பொருட்களையும் அவர்கள் பயன்படுத்தி வருவதாகக் கூறினார். பல் துலக்க கரி மற்றும் சாம்பலை பயன்படுத்துகின்றனர். இது தவிர, மிரியம் தனது மாதவிடாய் காலங்களில் டாம்பூன் பயன்படுத்துவதற்கு மாற்றாக மூன் கப் என்னும் மாதவிடாய் கப் பயன்படுத்துகிறார். இது முற்றிலும் பாதுகாப்பான, சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற பாதுகாப்பான ஒரு பொருளாகும். இதனை அருகில் உள்ள ஆற்றில் சுத்தம் செய்து பயன்படுத்திக் கொள்வதால், எங்கு சென்றாலும் டாம்பூனை சுமந்து செல்லும் கஷ்டம் இல்லை என்று அவர் சிரிக்கிறார்.

இந்த ஜோடியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்கள் விமர்சனத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman Washes Hair With Urine To Get Rid Of Dandruff

Experiencing wild life can be a total different experience where you stay close to nature by giving up all the worldly things. One such couple who have been living off the grid in the wilderness of New Zealand for years now claim that they have been using natural products and even their own urine to wash their hair.