For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாவு வீட்டில் பறை வாசிக்கும் பழக்கம் எப்படி வந்துச்சுனு தெரியுமா? கேட்டா ஆச்சர்யப்படுவீங்க...

By Mahibala
|

இசைக்கு மயங்காதவர்கள் இந்த உலகில் யார் தான் இருக்க முடியும். இசையை வெளிக்கொண்டு வர பல்வேறு இசைக் கருவிகள் இருக்கின்றன. ஒவ்வொரு இசைக் கருவிக்கும் வேறுவேறு வித வாசிப்பு முறைகளும் அவற்றில் இருந்து வெளிவரும் இசைக் கோர்வைகளும் வேறாக இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட இசைக்கருவிகள் இணைந்து வாசிக்கப்படும் போது அதிலிருந்து வெளிவரும் இசை முற்றிலும் வேறானதாகவும் ஒரு முழுமையான நம்மை மெய் மறக்கச் செய்யும் இசைக் கோர்வையைக் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேறுபாடுகள்

வேறுபாடுகள்

பொதுவாக இசை என்பது ஒன்று தான். இசை நம்முடைய மனதுக்கும் உடலுக்கும் இதமளிக்கக் கூடிய ஒரு நிகழ்வு தான். ஒவ்வொரு இசையும் நம்முடைய மனநிலையை மாற்றக் கூடியதாகவும் நமக்கு ஒரு புதுவித மனநிலையை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அதனால் அது உருவாக்கும் மனநிலையின் தன்மைக்கு ஏற்ப அந்த இசையையும் இசைக்கருவியையும் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

MOST READ: இதுல எது உண்மை... எது பொய்னு கண்டுபிடிங்க... இன்டர்நெட்டில் வைரலான சில பொய் படங்கள் இதோ

மங்கல இசை

மங்கல இசை

இசையிலும் கூட மங்கல இசை, அமங்கல இசை என பாகுபடுத்தப்படுப்படுகிறது. அது இசைக்கருவியை மட்டும் அல்ல, உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அதை வாசிக்கும் நபர்களையும் அடிப்படையாக வைத்து பாகுபடுத்தப்படுத்தப் படுகிறது. பொதுவாக புல்லாங்குழல் என்பது அதீத எல்லை கடந்த சோகத்தையும் வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு. மற்ற இசைக்கருவிகளுக்கு புல்லாங்குழலை விட சோகத்தை வெளிப்படுத்தும் கருவி வேறு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அமங்கல இசை

அமங்கல இசை

பொதுவாக விசேங்களில் குழல் இசைக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக நாதஸ்வரம் போன்ற கருவிகள் இசைக்கப்படுகின்றன. குறிப்பாக இறப்பு வீடுகளில் அமங்கல இசை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பறை கருவுி தான் வாசிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் தான் என்ன? பார்க்கலாம் வாங்க.

மூச்சில்லாதவரை பிழைக்க வைக்க

மூச்சில்லாதவரை பிழைக்க வைக்க

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நம்முடைய நாட்டை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மருத்துவ வசதிகளும் நிறுவனம் மயப்பட்ட மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு. அதுபோன்ற சமயங்களில் யாரேனும் ஒருவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தால் அவர் இறந்து விட்டாரா இல்லை உயிர் இருக்கிறதா என்று ஒரு முடிவுக்கு வருவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. இந்த பிரச்சினையை சரிசெய்யவே ஆரம்ப காலத்தில் பறை பயன்படுத்தப்பட்டது.

MOST READ: யாருப்பா இந்த லிடியன்... ஏ.ஆர்.ரகுமானையே வாவ் என வாய்பிளக்க வைத்த சென்னை பையன்

மருத்துவ குணங்கள்

மருத்துவ குணங்கள்

ஒருவர் கூர்ச்சையாகிக் கிடக்கிறார். அவரைக் காப்பாற்றவோ அல்லது இறந்து போய்விட்டார் என்பதை உறுதி செய்யப் பயன்படுத்தப்பட்டதால் இந்த பறை இசைக்கருவிக்கு மருத்துவ குணங்கள் இருக்கிறதா என்றெல்லாம் கோக்கு மாக்காக யோசிக்க ஆரம்பிச்சுடாதீங்க.

ஆட்டம் போட வைக்கும்

ஆட்டம் போட வைக்கும்

பறை ஓசை என்று சொல்லப்படுகின்ற பறை இசைக் கருவியில் இருந்து வெளிவரும் இந்த அதிர்வுக்கும் இசைக்கும் ஓசைக்கும் ஆடாமல் ஏன் குறைந்த பட்சம் உடலையாவது அசைக்கும் தன்மையில்லாமல் எந்த மனிதர்களாலுமு் இருக்கவே முடியாதாம். அந்த இசை பிடிக்கிறதோ இல்லையோ நம்முடைய உடலை நம்மையும் மறந்து அசைவை ஏற்படுத்துமாம்.

உடல் அதிர்வுகள்

உடல் அதிர்வுகள்

மாட்டின் தோல் கொண்டு பதப்படுத்தப்பட்டு தயாரிக்கும் இந்த பறைக் கருவியில் இருந்து வருகின்ற சத்தத்தைக் கேட்டு நம்முடைய நாடி நரம்புகள் அனைத்தும் துள்ளிக் குதித்துக் கொண்டு ஒருவித அதிர்வை (வைபரேஷனை) நமக்குக் கொடுக்கும்.

MOST READ: ஆபாச படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது விந்து உற்பத்தி நடக்குமா? ஹார்மோன் அதிகரிக்குமா?

முன்னோர்கள் கணிப்பு

முன்னோர்கள் கணிப்பு

இப்படி மூர்ச்சையாகிக் கிடப்போர் இருக்கிற இடத்தில் பறை முழங்கப்படுகிறது. ஒரு இடத்தில் யார் ஒருவர் பறை இசைக்கும் சத்தத்திற்கு கொஞ்சமும் ஆடாமல் அசையாமல் பிணம் போல இருக்கிறாரோ அவருக்கு உயிர் இல்லை இறந்துவிட்டார் என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள் நம்முடைய முன்னோர்கள். இந்த பழக்கம் தொடர்ந்து இறந்து போனவர்கள் இருக்கும் இடத்தில் அடிக்கப்பட்ட பறை இசை அப்படியே மாற்றம் பெற்று இறந்தவர்களின் வீடுகளில் பறை இசை வாசிக்கப்படுவது கட்டாயமான சடங்காக மாற்றப்பட்டு விட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why play parai music in the home of dead

one of the oldest drums used in India, especially in the South Indian state of Tamil Nadu, and also in the northern and eastern parts of Sri Lanka. It is considered as one of the symbols of Tamil culture. In ancient days, this instrument was used as a communication mechanism to convey messages to people and alert against danger.
Story first published: Saturday, March 16, 2019, 15:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more