Just In
- 3 hrs ago
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- 14 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 16 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 18 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
Don't Miss
- Movies
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- News
இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் பயப்பட தேவையில்லை.. அமித்ஷா லோக்சபாவில் பேச்சு
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவபெருமான் புலித்தோல் உடுத்துவதற்கும் அவரின் பக்தர்கள் செய்த சதிக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா?
சிவபெருமானின் உருவம் எப்பொழுதுமே மற்ற கடவுள்களிடம் இருந்து மிகவும் வித்தியாசமானதாகும். ஏனெனில் மற்ற கடவுள்கள் எல்லாம் ஆபரணங்களில் ஜொலிக்க சிவபெருமான் கழுத்தில் பாம்பையும், இடுப்பில் புலித்தோல் ஆடையையும் உடுத்தி புலித்தோலின் மீது அமர்ந்திருப்பார்.
வீரம் மிகுந்த புலித்தோலானது சிவபெருமானின் கம்பீரத்திற்கான அடையாளமாக இருக்கிறது. சிவபெருமான் புலித்தோலின் அமர்ந்திருக்க காரணம் அவரின் கம்பீரம் மட்டுமல்ல மற்றொரு காரணமும் இருக்கிறது. இதற்கான உண்மையான காரணம் சிவபுரணாத்தில் கூறப்பட்டுள்ளது. பல விலங்குகள் இருக்க சிவபெருமான் ஏன் புலித்தோலை தேர்ந்தெடுத்தார் எனப்தற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிவபுராணம்
சிவபுராணத்தில் கூறியுள்ளபடி சிவபெருமான் உலகம் முழுவதையும் வெற்றுடம்புடன் முனிவர் வேடத்தில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவர் அடர்ந்த வனம் ஒன்றிற்குள் நுழைந்தார். அங்கு பல முனிவர்கள் அவர்களின் மனைவியுடன் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர்.

சிவபெருமானின் கவர்ச்சி
வனங்களில் வசித்த முனிவர்களுடைய மனைவிகளை சிவபெருமானின் வெற்றுடம்பு கவர்ந்தது, அவர்கள் தங்கள் கணவரின் இருப்பை மறந்தனர். தங்கள் மனைவிகளின் கவனம் சிதறியிருப்பதை அவர்கள் கூறாமலே முனிவர்கள் அறிந்தனர். இதனால் ஆசிரமங்கள் அமைதியை இழந்தது.

முனிவர்களின் திட்டம்
தங்கள் மனைவிகளின் கவனம் சிதற காரணம் அந்த இளைஞன்தான் என்பதை உணர்ந்த முனிவர்கள் அவருக்கு தக்க பாடம் புகட்ட எண்ணினார்கள். அதற்காக அவர்கள் சிவன் தினமும் வரம் வரும் வழியில் ஒரு குழியை தோண்டி அதற்குள் ஒரு புலியை அடைத்தனர். சிவபெருமான் அருகில் வந்தபோது முனிவர்கள் புலியை திறந்து விட்டனர்.

புலி வதம்
எந்தவிக பயமும், தயக்கமும் இன்றி தன்னை தாக்க வந்த புலியை எதிர்கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் புலியை கொன்று அதன் தோலை தனியாக எடுத்தார். தனது வெற்றியின் அடையாளமாக அந்த தோலை தன் மீது போட்டுக்கொண்டார்.

சாதாரண நபர் அல்ல
சிவபெருமானின் ஆற்றலையும், வீரத்தையும் கண்ட முனிவர்கள் அவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை புரிந்து கொண்டார்கள். சிவபெருமானின் உண்மையான ஆற்றலை தெரிந்து கொள்ள அவரின் கால்களில் சரணடைந்தனர். அப்போதிருந்த சிவபெருமான் புலித்தோல் அணிவதை வழக்கமாக்கி கொண்டார். அது ஆக்ரோஷ மிருகமாக புலி மட்டுமின்றி மூன்று உலகம் மீதான தனது வெற்றியின் சின்னமாக அதனை கருதினார்.

புலியின் அடையாளம்
புலிக்கும், சிவபெருமானுக்கும் மட்டும் தொடர்பில்லை, புளிக்கும் இந்து இதிகாசங்களுக்குமே நெருங்கிய தொடர்புள்ளது. மகிஷாசுரனை அழித்த மகிஷாசுரமர்த்தினி தனது வாகனமாக தேர்ந்தெடுத்தது புலியைத்தான். சீனர்களை பொறுத்தவரை புலியானது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.

புலி வேட்டை
பண்டைய காலத்து அரசர்களுக்கு புலி வேட்டை என்பது அவர்களின் கௌரவத்துடன் தொடர்பானதாக கருதப்பட்டது. ஓர் அரசர் தன் வாழ்நாளில் ஒரு புலியையாவது வேட்டையாட வேண்டும் இல்லையெனில் அவர் வீரமற்றவர் என்று அர்த்தமாகிவிடும். அதற்காகவே அனைத்து அரசர்களும் புலி வேட்டைக்கு செல்வார்கள். இப்பழக்கம் ஆங்கிலேயர் காலத்திலும் தொடர்ந்தது. இதனால்தான் இப்போது புலிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.

சிவபெருமானின் பலம்
அழிக்கும் தொழிலை கொண்ட சிவபெருமான் மூவுலகையும் அடக்கி ஆள்பவர் என்பது அனைவரும் அறிந்தது. புலித்தோல் மீது அமர்ந்திருப்பது அவருக்கு கீழ்தான் அனைத்தும் என்று அவர் உலகத்திற்க்கு கூறும் செய்தியாகும்.