Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
இதுல உங்க காது எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
11,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதலில் தோன்றிய பழம் எது தெரியுமா? இப்பவும் நாம இந்த பழத்தை சாப்பிடுறோமாம் -
திருமணத்திற்கு முந்தைய உறவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு உங்கள் உரிமையை மாற்றும்! -
சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - உடம்பு இரும்பு மாதிரி மாறிடும் -
பரோட்டா கடை வெஜ் சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
திருமண சீசனில் தங்கம் விலை திடீர் உயர்வு: பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறும் குடும்பங்கள்! -
ஜூன் 15-ல் உருவாகும் அரிய புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
உங்கள் வீட்டு கதவில் இருக்கும் இந்த பிரச்சினைகள் உங்கள் வாழ்க்கையில் பல தடங்கல்களை உண்டாக்கும்...!
ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டில் அதிர்ஷ்டத்தை தரும் ஏதாவது ஒரு குறியீட்டை மாட்டி வைத்திருப்பார்கள். இந்த ஒவ்வொரு குறியீட்டிற்கும் பின்னால் ஒரு அர்த்தம் உள்ளது.
அனைவருக்குமே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை கனவாக இருக்கும். நமது மகிழ்ச்சி என்பது பெரும்பாலும் நமது வீட்டை சார்ந்துதான் இருக்கிறது. நம் வீட்டின் மகிழ்ச்சி என்பது நமது குடும்பத்தினரை நம்பி மட்டும் இல்லை. நமது வீட்டில் இருக்கும் பொருட்கள், வாஸ்து போன்றவற்றை பொறுத்தும் உள்ளது.

ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டில் அதிர்ஷ்டத்தை தரும் ஏதாவது ஒரு குறியீட்டை மாட்டி வைத்திருப்பார்கள். இந்த ஒவ்வொரு குறியீட்டிற்கும் பின்னால் ஒரு அர்த்தம் உள்ளது. இந்த பதிவில் உங்கள் வீட்டு வாசலில் வைக்கும் பொருட்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

ஸ்வஸ்திக் குறியீடு
மஸ்கிருத மொழியில், ஸ்வஸ்தி என்றால் "ஆசீர்வாதம்" அல்லது "அதிர்ஷ்டம்" அல்லது "புனிதத்தன்மை" என்று பொருள். இது உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும். விஷ்ணுவுடன் தொடர்புடைய 108 சின்னங்களில் ஸ்வஸ்திக் சின்னமும் உள்ளது. சூரியனை பிரதிபலிக்கும் இது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.

குபேரன்
குபேர சின்னம் நல்ல ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் ஒன்றாகக் கருதப்படுகிறது. வீட்டு வாசலில் குபேரன் படத்தை மாட்டிவைப்பது செல்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

விநாயகர் மற்றும் லக்ஷ்மி
எந்தவொரு நல்ல துவக்கமும் விநாயகர் மற்றும் லக்ஷ்மியை வழிபட்ட பிறகுதான் தொடங்கப்படுகிறது. ங்கள் வீட்டின் கதவில் லக்ஷ்மி மற்றும் விநாயகர் படத்தை மாட்டுவது உங்கள் புதிய வீட்டில் உங்களின் பயணத்திற்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தும். இவை மட்டுமின்றி உங்கள் வாசல் கதவில் வாஸ்துவின் படி நீங்கள் செய்யும் சில மாற்றங்களும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ஒரே நிலை
உங்கள் வீட்டின் வாசல் எப்பொழுதும் சாலைக்கு சமமாகவோ அல்லது அதற்கு மேல்தான் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கதவு தெருவின் மட்டத்திற்கு கீழே இருக்கக்கூடாது. இது வாஸ்துவின் படி தவறான ஒன்றாகும்.

படிகள்
வாசற்படியில் படிக்கட்டுகள் இருந்தால் அவை கண்டிப்பாக ஒற்றைப்படை எண்ணில்தான் இருக்க வேண்டும். இரட்டைப்படை எண் வாஸ்துவின் படி தவறான ஒன்றாகும்.

இடிந்த கட்டிடம்
உங்கள் வீட்டின் வாசற்கதவு ஒருபோதும் இடிக்கப்பட்ட கட்டிடம் அல்லது பாழடைந்த கட்டிடத்திற்கு முன்னால் இருக்கக்கூடாது. அதேசமயம் சுடுகாடு மற்றும் கசாப்பு கடைக்கு எதிர்புறம் இருக்கக்கூடாது.

இரண்டு கதவுகள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு வீட்டிற்கு எப்போதும் இரண்டு கதவுகள் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. வீட்டின் முன்பக்க கதவு எப்பொழுதும் பின்பக்க கதவை விட பெரியதாக இருக்க வேண்டும்.

நிழல்
உங்கள் வீட்டின் முன்வாசல் மீது எப்பொழுதும் நிழல் விழாதபடி இருக்க வேண்டும். அது மரத்தின் நிழலாக இருந்தாலும் சரி, வேறு கட்டிடத்தின் நிழலாக இருந்தாலும் சரி, பிரதான கதவின் மீது விழக்கூடாது.

விரிசல் கூடாது
உங்கள் வீட்டின் கதவு எப்பொழுதும் மரத்தால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. மேலும் கதவில் விரிசல் விழாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

உள்பக்க கதவு
உங்கள் வீட்டின் கதவு திறக்கும் போது உள்பக்கமாக செல்ல வேண்டுமே தவிர வெளிப்பக்கமாக செல்லக்கூடாது. மேலும் கதவு எப்பொழுதும் கருப்பு நிறத்தில் இருக்கக்கூடாது. இதனால் உங்கள் வாழ்க்கையில் பல தடங்கல்களை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications