For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எமன் இறந்த ஆன்மாக்களுக்கு தண்டனை வழங்கும் நீதிசபை இந்தியாவில்தான் இருக்கு... எங்க இருக்கு தெரியுமா?

|

உலகில் பிறந்த அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பயம் மரணத்தை பற்றியதாகும். மரணத்தின் கடவுளான எமனை பற்றி அனைவருமே நன்கு அறிவோம். மரணத்தை ஏற்படுத்தும் எமன் தர்மம் தவறாமல் இருப்பதால்தான் அவரை எமதர்மராஜா என்று நாம் அழைக்கிறோம்.

எமனுக்கு இறந்தவர்களின் பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கும் பணியை வழங்கியது பரம்பொருள் சிவபெருமான்தான். ஆனால் சிவபெருமானே எமதர்மன் மீது கோபப்பட்ட வரலாறும் உள்ளது. இந்த பதிவில் நீதி தவறாத எமதர்மன் மீது ஈசன் கோபம் கொள்ள காரணம் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எமன்

எமன்

மரணத்தின் கடவுளான காலன் முன்பு நாம் அனைவருமே சமம்தான். வாழும்வரை ராஜாவாக வாழ்ந்தாலும் சரி, ஏழையாக வாழ்ந்தாலும் சரி இறந்து மேலே சென்றுவிட்டால் நாம் அனைவருமே எமனுக்கு நரன்கள் மட்டும்தான். நாம் செய்த பாவபுண்ணியங்கள் மட்டுமே எமனின் நீதிசபையில் பேசும். அதற்கேற்ற தண்டனைகள் எந்தவித பாரபட்சமும் இன்றி எமனால் வழங்கப்படும்.

மரணத்தின் கடவுள்

மரணத்தின் கடவுள்

எமபுராணத்தின்படி மரணத்தின் கடவுளான எமன்தான் பூமியில் பிறந்து இறந்த முதல் மனிதனாவார். அதனால் அவரின் சிறப்பு மற்றும் முன்னுரிமை கருதி அவர் சிவபெருமான், மஹாவிஷ்ணு மற்றும் பிரம்மாவால் மரணத்தின் கடவுளாக நியமிக்கப்பட்டார்.

மரணபயம்

மரணபயம்

மனிதனை இன்னும் மனிதனாக வைத்திருக்கும் ஒரே விஷயம் மரணம் மீது அவர்களுக்கு இருக்கும் பயம்தான். மரணம் என்பது பயத்தை அதிகரிப்பதாக இருந்தாலும் அதேசமயம் மரணம் எப்படி நிகழும், மரணத்திற்கு பிறகான வாழ்க்கை எப்படியிருக்கும் போன்றவை நமது ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. மரணம் பற்றிய முழு உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மிடம் இயற்கையாகவே இருக்கும்.

எமதர்மனும், நசிகேதனும்

எமதர்மனும், நசிகேதனும்

வேதங்களின் படி எமதர்மன் மரணம் பற்றிய ரகசியங்களை நசிகேதன் என்னும் இளைஞனின் ஞானத்தாலும், தவத்தாலும் ஈர்க்கப்பட்டு அவனிடம் கூறினார். இதனால் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானார்.

MOST READ: கிரேக்க ஜோதிடத்தின் படி உங்கள் ராசிக்கு எந்த கிரேக்க கடவுளின் குணமும், சக்தியும் இருக்கிறது தெரியுமா?

மூன்று வரங்கள்

மூன்று வரங்கள்

நசிகேதன் எமதர்மனை சந்தித்த போது தனது மூன்று ஆசைகளை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார். எமனும் அதற்கு ஒப்புக்கொண்டார். நசிகேதனின் முதல் விருப்பம் அவரது தந்தையின் நிபந்தனையற்ற அன்பாகும், இரண்டாவது ஆசையாக அக்னி வித்தை பற்றிய அனைத்து ஞானமும் தனக்கு வேண்டுமென கேட்டார். இறுதியாக தனக்கு மரணம் மற்றும் ஆன்மா பற்றிய அனைத்து ரகசியங்களும் தெரிய வேண்டுமென்று கேட்டார்.

எமனின் தயக்கம்

எமனின் தயக்கம்

எமதர்மன் நசிகேதனின் மூன்றாவது விருப்பத்தை தவிர்க்க எவ்வளவோ முயன்றார் ஆனால் நசிகேதன் விடுவதாக இல்லை. இறுதியில் நசிகேதனின் வேண்டுகோளுக்கிணங்க மரணம் மற்றும் ஆன்மா பற்றிய ரகசியங்களை அவரிடம் கூறிவிட்டார்.

சிவபெருமானின் கோபம்

சிவபெருமானின் கோபம்

மரண ரகசியங்களை கூறியதால் சிவபெருமான் எமதர்மன் மீது கடுமையான கோபம் கொண்டார். மரணத்தின் கடவுள் என்னும் ஸ்தானத்தை அவரிடம் இருந்து பறிக்க எண்ணினார். இறுதியில் எமதர்மன் வேண்டிக்கொண்டதன் பேரில் அவரை மன்னித்த ஈசன் அவரின் தலைக்கு மேல் ஒரு கத்தியை தொங்கவிட்டார். எமதர்மன் ரகசியங்களை கூறினாலோ அல்லது நீதி தவறினாலோ அவரின் உயிர் அந்த கத்தியால் பறிபோகும் என்று கூறி ஆன்மாக்களை நிர்வகிக்கும் பொறுப்பை எமனிடம் வழங்கினார்.

எமலோகம்

எமலோகம்

மனிதர்கள் இரந்த பிறகு அவர்கள் எமலோகத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கும் அவர்களுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பது தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த எமசபை பூமியில் இமாச்சலில் இருக்கும் தர்மேஸ்வர மஹாதேவர் கோவில்தான் என்று கூறப்படுகிறது.

MOST READ: இந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் காதலன்/காதலிக்கு உண்மையாக இருப்பார்களாம்.

தர்மேஸ்வர மஹாதேவர் கோவில்

தர்மேஸ்வர மஹாதேவர் கோவில்

இந்து புராணங்களின் படி பூமியில் இறக்கும் அனைத்து அனைத்து ஆன்மாக்களும் நீதிக்காக இந்த கோவிலுக்குத்தான் அழைத்து வரப்படுமாம். இந்த கோவிலில் எமதர்மன் தன் உதவியாளரான சித்திர குப்தனுடனும், நான்கு கண்களை உடைய இரண்டு நாய்களுடனும் இருக்கிறார் என்றும் இங்குதான் ஆண்மக்களுக்கான தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

When Lord Shiva lost his faith on Yama

Lord Yama reveal the secrets of death to his devotee. So Lord Shiva lost his faith on Yama.