Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது?
மொத்தமிருக்கும் 11 வகை கட்டைவிரல் ரேகையில் உங்கள் ரேகை என்ன அதோட சிறப்பு என்னனு தெரிஞ்சிக்கோங்க...!
ஒரே மாதிரியான கைரேகைகள் இருவருக்கு என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றாகும். இந்த சூழ்நிலையில் கைரேகையை வைத்து ஒருவரை பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.
இந்த உலகம் நல்லவர்களாலும், கெட்டவர்களாலும் நிறைந்தது. நாம் யாரிடம் பழகுகிறோம் என்பதில் எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் ஒருவரை பற்றி தெரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபன காரியமல்ல. ஆனால் ஒருவரின் கட்டைவிரலை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் மறைக்கும் குணங்கள் என்பதை கூட கண்டறிந்து விடலாம்.

கைரேகைகென்றே ஒரு தனித்துறை உள்ளது, அதன்படி நமது ரேகையில் இருக்கும் சின்னங்கள், அடையாளங்கள், சின்ன சின்ன கொடுகள் கூட நம்முடைய புத்திசாலித்தனம், திறமைகள் மற்றும் நடத்தை பண்புகள் போன்றவற்றை பற்றி கூற இயலும். இந்த பதிவில் உங்கள் கட்டை விரல் ரேகை உங்களை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

கைரேகை ஆய்வு
ஒரே மாதிரியான கைரேகைகள் இருவருக்கு என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றாகும். இந்த சூழ்நிலையில் கைரேகையை வைத்து ஒருவரை பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி மொத்தம் 11 வகையான பெருவிரல் ரேகைகள் உள்ளது. உங்கள் ரேகை எப்படிப்பட்டது என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

கூடார வளைவு
இந்த வகையான கைரேகைகள் இருப்பவர்கள் மிகவும் குழப்பமான ஆளுமையை கொண்டவர்களாகவும், எளிதில் கணிக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். ஒருநாள் இனிமையாக பழகும் இவர்கள் அடுத்த நாளே மிகவும் கோபமாக நடந்து கொள்வார்கள். இவர்கள் சவால்களை விரும்புபவர்களாக இருப்பார்கள் பலசமயம் இவர்கள் மற்றவர்களால் எளிதில் தூண்டப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.

கலவையான சுழல் ரேகை
இந்த வகையான கைரேகையை கொண்டவர்கள் இயற்கையாகவே அனைவருடன் இணக்கமாக போகிறவர்களாக இருப்பார்கள், மேலும் எளிதில் புரிந்து கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் கவனசிதறல்களுக்கு எளிதில் ஆளாகக்கூடியவர்கள். மற்றவர்களை எடை போடுவதும், விரைவாக முடிவெடுப்பதும் இவர்களுக்கு மிகவும் எளிதானதாகும்.

ஒரு மைய சுழல்
இந்த் வகையான ரேகை உள்ளவர்கள் சுய பெருமை பேசி கொள்பவராக இருப்பார்கள். இவர்கள் உலகத்திலேயே அதிகம் நேசிப்பது இவர்களைத்தான். இவர்கள் மற்றவர்களை கட்டுப்படுத்த விரும்புவார்கள் ஆனால் ஒருபோதும் மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படுவதை விரும்பமாட்டார்கள்.

சாதாரண வளைவு
இந்த வகையான ரேகை இருப்பவர்கள் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும், விசுவாசம் மற்றும் ஒப்பிடமுடியாத நேர்மை உள்ளவராகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வேர்களை உறுதிப்படுத்தி கொண்டு ஒவ்வொரு படியாக, நிலையான வேகத்துடன் முன்னோக்கி செல்வதில் அவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள். இவர்கள் ரிஸ்க் எடுக்க எப்பொழுதும் அஞ்சுவார்கள்.

மாற்றுரு அமைப்பு
இவர்களை பொறுத்தவரை இவர்களுக்கு அனைத்தும் கடினமானதாகவே இருக்கும். இவர்கள் மற்றவர்களை எளிதில் காயப்படுத்தி விடுவார்கள். இவர்கள் தங்கள் எதிரில் இருபவர்களின் நிலையை பற்றி சிந்திக்கவே மாட்டார்கள். முகத்திற்கு நேராகவே காயப்படுத்திவிட்டு இரக்கமே இல்லாமல் நடந்து செல்வார்கள்.

அல்நார் சூழல்கள்
இவர்கள் பொதுவாக மென்மையானவர்களாகவும், வன்முறையை விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனிக்கும் இவர்கள் யாரையும் காயப்படுத்தாத வகையில் யோசித்தே பேசுவார்கள்.

சுருள் வட்டம்
இந்த ரேகை கையில் இருப்பவர்கள் தனிமையை விரும்புபவராக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் தன்னை தானே உற்ச்சாகப்படுத்தி கொள்பவராக இருப்பார்கள். இவர்களின் மனப்போராட்டங்களை யாரும் உணரமாட்டார்கள்.

மயில் கண்
இந்த ரேகையில் பிறப்பது என்பது மிகவும் அபூர்வமான ஒன்று. இந்த ரேகை இருப்பவர்கள் உயர்ந்த நற்குணங்களும், தலைமைப்பண்பும் கொண்டவர்களாக இருப்பார்கள். அற்புதமான கலைத்திறமை உடையவர்களாய் இவர்கள் இருப்பார்கள்.

உள்நோக்கிய சுழல்
இந்த ரேகை இருப்பவர்கள் மிகவும் சுய உணர்வு உடையவராக இருப்பார்கள். பொது இடங்களிலும், சமூக நிகழ்ச்சிகளிலும் அதிக கூச்சசுபாவம் உடையவராக இருப்பார்கள்.வெளிப்படையன மனப்பான்மையும், பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடியவராகவும் இருப்பார்கள். இவர்களின் அடுத்த நடவடிக்கை என்பதை யாராலும் யூகிக்க முடியாது.

ஆர சுழல்
இவர்கள் தங்கள் சுதந்திரத்தை அதிகம் விரும்புவபவராக இருப்பார்கள் அது தடைபடும் போது மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள் அதிக ஈகோ உள்ளவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் கருத்துக்கு இவர்கள் எப்பொழுதும் எதிராகத்தான் பேசுவார்கள்.

அழுத்த சூழல்
இவர்கள் இயற்கையாகவே உற்சாகமானவர்களாகவும், நன்றாக திட்டம் தீட்டக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் குழப்பத்தில் சிக்கி கொள்வதை உங்களால் ஒருபோதும் பார்க்க இயலாது. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ஜாக்கிரதையாக, உபயோகமுள்ளதாக பயன்படுத்த தெரிந்தவர்கள்.



Click it and Unblock the Notifications