For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நட்சத்திரத்துக்கு எந்த கடவுளை வணங்கினால் எல்லா செல்வங்களும் சேரும்?

நம்முடைய ராசிகளுக்கு உரிய நட்சத்திங்களை அடிப்படையாக வைத்து எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளோம்.

By Mahibala
|

நம்முடைய ராசிக்கு அதிபதியும் நாம் பிறந்த நட்சத்திரங்களும் தான் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் காரணமாக அமையும் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அப்படி இருக்கும்போது, ஒவ்வொரு ராசி, நட்சத்திரங்களுக்கும் சில தெய்வங்களை வழிபட்டால் துன்பங்கள் தீர்ந்து சகல செல்வங்களும் கிடைப்பதற்கு வழிவகுக்கும் என்று சொல்வார்கள்.

Birth Star

அப்படி என்ன தெய்வத்தை எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வழிபட வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி, வழிபட்டு, உங்களுடைய வாழ்க்கையில் பெற வேண்டிய அத்தனை செல்வங்களையும் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயில்ய நட்சத்திரம்

ஆயில்ய நட்சத்திரம்

ஆயில்ய நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதிசேஷனும் நாகமும் தான் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய தெய்வமாக இருக்கும். இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மரகதப் பச்சை கற்கள் கொண்ட மோதிரத்தை அணிவது நல்லது. நீங்கள் திருவெண்காடு, நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. அதேபோல் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் புன்னை மரத்தை வழிபடலாம்.

MOST READ: கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

மக நட்சத்திரம்

மக நட்சத்திரம்

மகம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு பித்ரு தேவதைகள் அதிர்ஷ்டம் தருபவர்களாக இருப்பார்கள். நீங்கள் விநாயகப் பெருமான் மற்றும் சூரிய பகவானை வழிபட்டு வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து சகல செல்வங்களும் உண்டாகும். மக நட்சத்திரக்காரர்களுக்கு புஷ்பராகக் கல் அணிவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். நீங்கள் பிள்ளையார்ப்பட்டி விநாயகரையும் சூரிய பகவானையும் வழிபடுங்கள். ஆல விருட்சத்தை வழிபட்டு வாருங்கள்.

உத்திர நட்சத்திரம்

உத்திர நட்சத்திரம்

உத்திர நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு சூரிய பகவான் தான் சகல செல்வங்களையும் கொடுப்பவராக இருப்பார். நீங்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீமகாலட்சுமியையும் வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக சூரியனார்கோவில் சூரியபகவனையும் திருச்சானூரில் உள்ள மகாலட்சுமியையும் வழிபட்டு வந்தால் நன்மை உண்டாகும். அலரி மரம் உங்களுடைய நட்சத்திரத்துக்கு உரிய மரமாக அமையும்.

கேட்டை நட்சத்திரம்

கேட்டை நட்சத்திரம்

கேட்டை நட்சத்திரத்தை கொண்டவர்களுக்கு இந்திரன் எப்போதும் துணையாக இருப்பார். நீங்கள் முருகனையும் லட்சுமி வராகப் பெருமானையும் வழிபடுங்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மரகதப் பச்சை கல் பதித்த மோதிரம் அணிவது சிறப்பு. நீங்கள் ஸ்ரீமூஷ்ணம் மற்றும் குன்றக்குடி முருகளை வழிபடுவது உங்களுடைய துன்பங்களுக்குத் தீர்வாக அமையும். பிராய் மரத்தை தல மரமாக கொண்ட கோவிலில் சென்று வழிபடுங்கள்.

பூசம்

பூசம்

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குரு பகவானை வழிபட்டு வந்தால் சகல செல்வங்களுக்கு உங்களுக்குக் கூடி வரும். நீங்கள் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது. பூச நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் முத்து பதித்த மோதிரத்தை அணிவது நன்மை தரும். நீங்கள் திருவெண்காடு சென்றும் திருநள்ளாறிலும் சென்று அங்குள்ள குருவை வழிபடுங்கள். அதோடு அரச மரத்தை வழிபடுவது நல்லது.

MOST READ: இந்த ஆறு மசாலா வீட்ல இருந்தா போதும்... வாழ்நாள் முழுக்க டாக்டர்கிட்டயே போக வேண்டாம்...

திருவோணம்

திருவோணம்

திருவோண நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பவர் கடவுள் ஸ்ரீவிஷ்ணு. அதோடு நீங்கள் சேர்த்து வழிபட வேண்டிய தெய்வங்களாக அம்பிகை மற்றும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஆகியோரை வழிபட்டு வருவது நன்மை உண்டாக்கும். நீங்களும் பூச நட்சத்திரக்காரர்களைப் போன்று முத்து பதித்த மோதிரத்தை அணிவது நல்லது. குறிப்பாக திருப்பதி மற்றும் திங்களூரில் உள்ள தெய்வத்தை வழிபட்டு வாருங்கள். எருக்கஞ்செடியை வழிபடுவது நல்லது.

திருவாதிரை

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் அம்சமான ருத்ர பகவானை வழிபடுங்கள். துர்க்கை மற்றும் மகாவிஷ்ணுவை வழிபடுவது உங்களுடைய வாழ்க்கையை உயர்த்தும். கோமேதகக் கல் பதித்த மோதிரத்தை அணிவது நல்லது. சிதம்பரம் மற்றும் பட்டீஸ்வரத்தில் உள்ள தெய்வத்தை வழிபடுங்கள். செங்கருங்காலி மரத்தை வழிபட்டு வருவது உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்.

புனர்பூசம்

புனர்பூசம்

அதிதி என்றும் லட்சுமிதேவியின் அம்சம் தான் புனர்பூச நட்சத்திரத்தினருக்கு அதி தேவதையாக இருக்கும். ஸ்ரீராமர் மற்றும் வெங்கடேச பெருமாளை வழிபட்டு வாருங்கள். கனக புஷ்பராகம் பதித்த மோதிரத்தை அணியுங்கள். ஆலங்குடிக்கும் திருப்பதிக்கும் சென்று ஒருமுறை வழிபட்டு வாருங்கள். மூங்கில் என்பது செல்வத்தின் அறிகுறியாகக் குறிப்பிடப்படும் மரம். அதனால் மூங்கிலை வழிபாடு செய்யுங்கள்.

சித்திரை நட்சத்திரம்

சித்திரை நட்சத்திரம்

விஷ்ணுவின் அம்சங்களில் ஒன்றான துவஷ்டா தான் சித்திரை நட்சத்திரத்திற்கு உரிய அதிதேவதையாக விளங்குவார். அதனால் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகா விஷ்ணுவை வழிபட்டு பவளம் பதித்த கல் மோதிரத்தை அணிந்து கொள்ளுங்கள். திருவெண்காட்டுக்கும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் சென்று வழிபாடு செய்யுங்கள். வில்வ மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்யுங்கள்.

அனுஷம்

அனுஷம்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகா விஷ்ணுவையும் முருகப் பெருமானையும் வழிபடுவது நல்லது. நீல நிறக்கல் பதித்த மோதிரத்தை அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நவ திருப்பதிகளில் ஒன்றான வரகுணமங்கையிலும் அதேபோல் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்திலும் சென்று வழிபாடு செய்யுங்கள். மகிழம்பூ மரத்தை வழிபட்டு வாருங்கள்.

MOST READ: இந்த எடத்துல வலிக்குதா? நீங்க பண்ற இந்த 7 விஷயந்தான் அதுக்கு காரணம்... இனிமே செய்யாதீங்க

சுவாதி நட்சத்திரம்

சுவாதி நட்சத்திரம்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிதேவதையாக இருப்பவர் வாயுதேவன் தான். இந்த சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுவது உங்களுக்குப் பெரும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். நீங்கள் கோமேதகக் கல் அல்லது நீலக்கல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பதித்த மோதிரத்தை அணியுங்கள். சோளிங்கரில் உள்ள தெய்வத்தை வழிபடுங்கள். நீங்கள் மருத மரத்தை வழிபட்டு வந்தால் சகல செல்வங்களையும் பெறுவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரம்

பூரட்டாதி நட்சத்திரம்

பூரட்டாதியில் பிறந்தவர்களுக்கு குபேரன் தான் அதிதேவதையான தெய்வமாக விளங்குவார். அவரை மனதில் நிறுத்தினாலே போதும். குறையாத செல்வத்தைப் பெற்றுவிடுவீர்கள். அதோடு நீங்கள் தட்சிணாமூர்த்தியையும் மகாலட்சுமியையும் வழிபட வேண்டும். கனக புஷ்பராகக் கல்லை அணிந்து கொள்வது நல்லது. திருப்புவனம் சென்று வழிபடுங்கள். தேவாரமரத்தை வழிபவது நல்லது.

மிருகசிரீஷம்

மிருகசிரீஷம்

மிருகசிரீஷ நட்சத்திரத்தின் அதிதேவதையாகச் செயல்படுவது சந்திரன் தான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகப் பெருமானையும் மகா விஷ்ணுவையும் வழிபட வேண்டும். பவளத்தைப் பதித்த மோதிரத்தை அணியலாம். பழநி மற்றும் திருக்கண்ணபுரம் தலங்கள் நீங்கள் கட்டாயம் சென்று வழிபட வேண்டிய தலங்களாக இருக்கின்றன. கருங்காலி மரத்தை வழிபட செல்வம் பெருகும்.

விசாகம்

விசாகம்

விசாக நட்சத்திரம் இந்திராக்னியின் அடையாளம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட வேண்டும். அதோடு கனக புஷ்பராகக் கல் பதிக்கப்பட்ட மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டியது அவசியம். திருச்செந்தூர் சென்று முருகளை வழிபட்டு வாருங்கள். கஷ்டங்கள் அனைத்தும் பனியாகக் கரைந்து விடும். விளா மரத்தைக் கண்டால் வழிபடத் தவறாதீர்கள்.

பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காளியின் அம்சமாக இருப்பார்கள். இவர்கள் முருகளையும் மகாலட்சுமியையும் வழிபட வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்கள் தீர்ந்து சுபிட்சம் உண்டாகும். வைரக்கற்கள் பதிக்கப்பட்ட மோதிரத்தை அணிவது சிறப்பு. நெல்லி மரம் இவர்கள் வணங்க வேண்டிய மரமாக இருக்கிறது.

MOST READ: உடனடியாக கருத்தரிக்க எந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்?

அஸ்வினி நட்சத்திரம்

அஸ்வினி நட்சத்திரம்

இஸ்வினி நட்சத்திரத்துக்கு தேவதைகளாக விளங்குபவர்கள் அஸ்வினி தேவர்கள் தான். இதனால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்களை வழிபடுவதோடு, முருகனையும் விநாயகர் மற்றும் மகா விஷ்ணுவையும் வழிபடுவது நல்லது. பவளம் இவர்களுக்குப் பேரதிஷ்டத்தைக் கொடுக்கும். எட்டி மரம் உங்களுடைய வழிபாட்டுக்கு உரிய மரமாகத் திகழும். வைத்தீஸ்வரன் கோவிலில் சென்று ஒருமுறை வழிபட்டு வாருங்கள். மனக்கவலைகள் தீரும்.

அவிட்ட நட்சத்திரம்

அவிட்ட நட்சத்திரம்

அவிட்ட நட்சத்திரக்காரர்களுடைய அதிதேவதைகளாக அஷ்டவசுக்கள் திகழ்வார்கள். அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனந்த பத்மநாபரையும் முருகனையும் வழிபட, வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெறுவார்கள். இவர்கள் நீலக்கல் மற்றும் பவளம் பதித்த மோதிரத்தை அணிவது நல்லது. வன்னி மரத்தை வழிபடுங்கள். ஒருமுறையாவது திருவனந்தபுரம் அனந்த பத்மநாபரை சென்று வழிபட்டு வாருங்கள்.

சதய நட்சத்திரம்

சதய நட்சத்திரம்

சதயத்துக்கு எமதருமர் அதிதேவதையாக விளங்குகிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியசாலிகளான ஆஞ்சநேயரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது. கோமேதகக் கல் பதித்த மோதிரத்தை அணியுங்கள். கடம்ப மரத்தை வழிபடுங்கள்.

ரோகிணி நட்சத்திரம்

ரோகிணி நட்சத்திரம்

பிரம்மர் தான் ரோகிணி நட்சத்திரத்துக்கு உரிய அதிதேவதை கடவுள். இந்த நட்சத்திரத்தில் பிற்நதவர்களின் அதிர்ஷ்டம் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடமும் வெங்கடேச பெருமாளிடமும் இருப்பதாகச் சொல்வார்கள். திருப்பதி வெங்கடாஜலபதியை வருடத்துக்கு ஒருமுறையாவது சென்று வழிபடுங்கள். நாவல் மரத்தை வழிபட்டு வருவது நல்லது.

அஸ்த நட்சத்திரம்

அஸ்த நட்சத்திரம்

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காயத்ரி தேவியையும் வெங்கடேசப் பெருமாளையும் வழிபட்டு வாருங்கள். நீங்கள் மரகத கல் பதித்த நகையை அணிந்து கொள்ளுங்கள். திருப்பதி சென்று வருடத்திற்கு ஒருமுறையாவது வெங்கடேச பெருமானை வழிபடுங்கள்.. அத்தி மரத்தை வழிபடுவது நல்லது.

கிருத்திகை

கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரம் மிகவும் அருள் பொருந்திய நட்சத்திரம் ஆகும். முருகப் பெருமானின் வடிவமான கார்த்திகேயன் பிறந்த நட்சத்திரம் தான் இந்த கிருத்திகை. அதனால் நீங்கள் வழிபடக் கூடிய தெய்வமும் முருகப் பெருமான் தான். சிவப்பு நிற மாணிக்கக் கற்கள் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் அத்தி மரத்தை வழிபட்டு வருவது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும்.

MOST READ: மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்...

பூரம்

பூரம்

பூர நட்சத்திரம் என்பது ஆண்டாளும் பார்வதி தேவியும் பிறந்த நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மதுரை மீனாட்சி அம்மனையும் ஆண்டாள் கம்பீரமாக வீற்றிருக்கக்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூரிலும் சென்று அர்ச்சனை செய்யுங்கள். இந்த ராசிக்காரர்கள் புரசு மரத்தை வழிபடுவது நன்மையைத் தரும். அதேபோல் இவர்கள் வெண்மை மற்றும் வைரம் பதித்த மோதிரம் அணிவது அதிர்ஷ்டத்தைத் தரும்.

மூலம்

மூலம்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே உடல் வலிமை கொண்டவராக இருப்பார்கள். ஏனென்றால் அது அனுமனும் மாவீரன் ராவணனும் பிறந்த நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகள் தோறும் அனுமனை வழிபடுவதும் வெற்றிலை மாலை சூட்டுவதும் பெரும் பலத்தை கொடுக்கும். இந்த ராசிக்காரர்கள் கரும்பச்சை நிறக்கல் அல்லது வைடூரியம் பதித்த நகைகளை அணியுங்கள். மாமரம் இவர்களுடைய வழிபாட்டுக்கு உரிய மரமாகக் கருதப்படுகிறது.

பூராடம்

பூராடம்

பொதுவாக, இவர் என்ன பெரிய பிரகஸ்பதியா என்று கேட்பார்கள். ஆம் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரிய பிரகஸ்பதி தான். ஏனென்றால் அது பிகஸ்பதி பிறந்த நட்சத்திரம் தான். நீங்கள் சிவபெருமானை வழிபடுங்கள். குறிப்பாக, திருவானைக்காவலில் இருக்கிற ஜம்புகேஸ்வரரையும் அகிலாண்டேஸ்வரியையும் வணங்குங்கள். நீங்கள் வைரக் கல் பதித்த நகை அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வஞ்சி மரத்தையும் அதை தல மரமாகக் கொண்ட கோவிலுக்குச் செல்வதும் சிறப்பு.

உத்திராடம்

உத்திராடம்

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் நிறைய இன்னல்களைச் சசந்தித்தாலும் தனக்கென தனியே ஒரு சிறப்பாக வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் நிச்சயம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. பச்சை நிற மாணிக்கக் கல் பதித்த மோதிரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும். நீங்கள் பலா மரத்தை வழிபடுவது சிறப்புக்குரியது.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரம் என்பது அனைத்து செல்வங்களையும் அள்ளி அள்ளிக் கொடுக்கிற காமதேனு பிறந்த நட்சத்திரம் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கான அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய தெய்வமு எது தெரியுமா? ஈஸ்வரன் தான். அதனால் ஸ்ரீமகா ஈஸ்வரரை தினமும் வழிபடுங்கள். தினமும் 108 முறை நமசிவாய ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லுங்கள். கருநீலக் கல் பதித்த மோதிரத்தை அணியுங்கள். வேப்ப மரத்தை வழிபடுங்கள். துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும்.

MOST READ: இப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா? வாழைப்பழம் இருக்கே.. இனி அந்த கவலை எதுக்கு?

ரேவதி

ரேவதி

ரேவதி நட்சத்திரம் ஆற்றலும் அறிவும் புத்திசாலித்தனமும் அதே பலமும் கொண்ட நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் தான் அர்ஜூனனின் மகனான அபிமன்யுவும் நம்மையெல்லாம் ஆட்டி வைக்கிற சனிபகவானும் பிறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் ரங்கநாத பெருமாள் ஆவார். ஸ்ரீரங்கம் சென்று கிடந்த கோலத்தில் இருக்கிற ரங்கநாதரை வழிபட்டு வர துயரங்கள் எல்லாம் ஓடியே போகும். நீல நிறக்கல் பதித்த நகைகள் அணிவது சிறப்பு. அதேபோல் இலுப்பை மரத்தை வழிபட்டு வந்தால் இலுப்பை பூ போல உங்கள் வாழ்க்கையும் இனிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hindu Gods To Worship According To Your Birth Star

According to Hindu philosophy “God is one but His forms are many and behind every such form of God there’s a sanctity and a purpose”. So here is the detail about Gods that we should worship according to our birth star.
Story first published: Wednesday, May 29, 2019, 13:53 [IST]
Desktop Bottom Promotion