For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவென்று நினைத்து தன் குழந்தைக்கு சிகரெட்டை ஊட்டிவிடும் தாய்ப்பறவை... நெஞ்சை உலுக்கும் படம்...

இன்றைய நிலவரத்தில் சுற்றுப்புறம் என்பது சேதங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது அச்சமூட்டும் ஒரு உண்மை.

|

நமது சுற்றுப்புறம் நாளுக்குள் நாள் மோசமடைந்து கொண்டிருக்கிறது. சுற்றுப்புறத்தை பாதுகாக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், அது ஒரு சிறு சதவிகித பாதிப்பை மட்டுமே போக்கக் கூடிய அளவிற்கு உள்ளது. இன்றைய நிலவரத்தில் சுற்றுப்புறம் என்பது சேதங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது அச்சமூட்டும் ஒரு உண்மை.

Bird Feeding Cigarette

கடற்பறவை, திமிங்கலம், மீன்கள் மற்றும் இதர அப்பாவி உயிரினங்கள் ஆகியவை உண்மையான உணவிற்கும் கழிவிற்கும் வேறுபாடு தெரியாமல் பிளாஸ்டிக் கழிவு, நாணயம், பாட்டில் மூடி, போன்றவற்றை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெஞ்சை உலுக்குது...

நெஞ்சை உலுக்குது...

ஒரு பறவை தன்னுடைய குழந்தை பறவைக்கு உணவென்று நினைத்து ஒரு சிகரெட் துண்டை வாயில் ஊட்டும் ஒரு புகைப்படம் பார்க்கவே நெஞ்சை உலுக்கும் ஒரு படமாக அமைந்துள்ளது. கரேன் மேசன் என்னும் ஒரு புகைப்படக் கலைஞர் இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார். இது ஒரு அசாதாரண புகைப்படம் ஆகும். மேலும் இதனைப் பார்க்கும்போது நெஞ்சே கனத்துப் போகிறது.

இந்த புகைப்படத்தில் ஒரு தாய்ப்பறவை தன்னுடைய குழந்தைக்கு உணவாக ஒரு சிகரெட் துண்டை ஊட்டி விடுகிறது. செயின்ட்.பீட்ஸ் பீச்சில் கரேன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு நடைபெறும்போது கரேன் இந்த படத்தை தன்னுடைய கேமராவில் பதிவு செய்திருக்கிறார்.

MOST READ: தங்கம் எவ்ளோ விலை ஏறினாலும் இந்த 2 ராசிக்காரங்க மட்டும் தங்கம் வாங்கிகிட்டே இருப்பாங்க...

தாய்ப்பறவையும் குஞ்சும்

தாய்ப்பறவையும் குஞ்சும்

ஒரு கருப்பு பறவை தன்னுடைய குழந்தை பறவைக்கு ஒரு அசாதரணமான பொருளை ஊட்டி விடுவதை அவர் கண்டிருக்கிறார். அது மீன் இல்லை என்பது மட்டும் அவருக்கு புரிந்திருக்கிறது. இந்த நிகழ்வை அவர் தன்னுடைய கேமராவில் பதிவு செய்தார். அவர் எடுத்த புகைப்படம் பற்றி மேலும் அவர் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை. புகைப்படங்களை எடுத்தபின் அவர் வீட்டிற்கு சென்று விட்டார்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

வீட்டிற்கு வந்து தான் எடுத்த புகைப்படங்களை ஜூம் செய்து பார்க்கும்போது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். அதாவது, அவர் எடுத்த புகைப்படத்தில் அந்தத் தாய்ப்பறவை தைபரவை தன்னுடைய குழந்தைக்கு ஒரு சிகரெட் துண்டை ஊட்டுவது கண்டு அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இந்த புகைப்படத்தை அவர் வன விலங்கு பாதுகாப்பு சார்ந்த குழுவிற்கு பகிர முடிவெடுத்தார். மேலும் அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.

MOST READ: இன்ஸ்டாவில் பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன்...

பெரும் ஆபத்து

பெரும் ஆபத்து

படங்கள் வைரலாகியதும், சான் டியாகோ மாநில பல்கலைக்கழக பொது சுகாதாரப் பட்டதாரி பள்ளியின் பிரச்சாரம் தொடங்கப்பட்டது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் ஒவ்வொரு ஆண்டும் 5.5 டிரில்லியன் பில்டர் சிகரெட்டுகளில் பெரும் சதவீதம் சுற்றுச்சூழலில் வீசப்படுகிறது என்பது தெரிய வந்தது.

கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை விட அதிக அபாயத்தைத் தரக்கூடிய ஒரு தன்மை சிகரெட் துண்டுகளுக்கு உண்டு என்ற தகவலும் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு விலங்குகளுக்கு மட்டும் அல்ல, கடற்கரைக்கு செல்லும் சிறு குழந்தைகள் கூட சிகரெட் துண்டுகளை கையில் எடுத்து விளையாடுவதை நாம் கண்டிருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Pic of Bird Feeding Cigarette Butt to Its Baby Will Break Your Heart

There are several cases of plastic waste, coins, bottle caps etc. being found inside the stomach of seagulls, whales, fishes and other innocent animals as they cannot differentiate between the waste and real food! This picture of a bird feeding its baby with a cigarette butt will simply break your heart.
Story first published: Wednesday, July 10, 2019, 11:28 [IST]
Desktop Bottom Promotion