For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த திசையில் நின்று தானம் கொடுப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா?

தானம் கொடுப்பது என்பது நியூட்டனின் மூன்றாம் விதி போன்றது. ஏனெனில் நாம் பிறருக்கு செய்யும் நன்மைகள் நம்மை மீண்டும் வேறு வழியில் வந்தடையும்.

|

இந்த பூமி எப்பொழுதும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்படி படைக்கப்பட்டது. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டால் மனிதர்களுக்கு மற்றவர்களின் தேவையும், அருமையும் புரியாமல் போய்விடும் என்பதற்காகத்தான் ஒவ்வொருவரும் எதாவது ஒரு குறையுடன் படைக்கப்படுகின்றனர். ஒருவரின் குறையை மற்றொருவர் போக்க வேண்டும் என்பதற்காகத்தான் தானம் கொடுக்கும் முறை உருவாக்கப்பட்டது.

Things to remember while doing Daan

தானம் கொடுப்பது என்பது நியூட்டனின் மூன்றாம் விதி போன்றது. ஏனெனில் நாம் பிறருக்கு செய்யும் நன்மைகள் நம்மை மீண்டும் வேறு வழியில் வந்தடையும். நீங்கள் எவ்வளவு தானம் செய்கிறீர்களோ அதற்கான பலன் அதைவிட அதிகமாக உங்களை தேடிவரும். தானம் செய்வதற்கு முன் நீங்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிர்ஷ்டமான தானங்கள்

அதிர்ஷ்டமான தானங்கள்

புராண குறிப்புகளின் படி தானியங்கள், தண்ணீர், துணி, உட்காரும் ஆசனங்கள் மற்றும் பசு அல்லது குதிரைக்கு உணவளிப்பது போன்ற தானங்கள் உங்களின் எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றக்கூடும். இந்த தானங்கள் மரணத்திற்கு பிறகான உங்கள் வாழ்க்கையை அமைதியானதாக மாற்றும்.

குடும்பம்

குடும்பம்

ஒருவர் தன் மனைவி, மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கஷ்டப்படுத்திவிட்டு தானம் செய்வதால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. சொல்லப்போனால் இதனால் அவர்களுக்கு எதிர்மறை விளைவுகளே ஏற்படும்.

வீட்டிற்கு செல்ல வேண்டும்

வீட்டிற்கு செல்ல வேண்டும்

பொதுவாக வீட்டிற்கு அழைத்து தானம் செய்வதுதான் பழக்கமாக உள்ளது. ஆனால் இது தவறான ஒன்றாகும். உண்மையில் தேவை இருப்பவர்களை வீட்டிற்கு அழைத்து உதவி செய்யாமல் அவர்களின் வீட்டிற்கே சென்று உதவி செய்யும்போது அது உங்களுக்கு அதிக நன்மையை ஏற்படுத்தும்.

MOST READ: ஆண்களே! இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் காதலில் விட்டுக்கொடுத்து போவார்களாம் பாத்துக்கோங்க

 கையால் செய்ய வேண்டும்

கையால் செய்ய வேண்டும்

எள், தண்ணீர் மற்றும் அரிசி போன்றவற்றை தானம் செய்யும்போது கையால் மட்டுமே பண்ண வேண்டும் மாறாக டப்பாவில் வழங்கக்கூடாது.

திசைகள்

திசைகள்

தானம் செய்பவர்கள் எப்பொழுதும் கிழக்கு திசை பார்த்துதான் இருக்க வேண்டும் அதேசமயம் தானத்தை பெற்றுக்கொள்பவர்கள் வடக்கு திசை நோக்கித்தான் இருக்க வேண்டும். இவ்வாறு தானம் கொடுத்து, பெறுவது இருவரின் ஆயுளையும் அதிகரிக்கும்.

அரிசி தானம்

அரிசி தானம்

அரிசி தானம் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அரிசி தானம் செய்யும்போது அதனுடன் சிறிது எள்ளையும் சேர்த்து தானம் செய்யுங்கள். இது தானத்தால் கிடைக்கும் பலனை இருமடங்காக்கும்.

MOST READ: இந்த குணங்களை வளர்த்து கொள்ளாமல் திருமணம் செய்தால் உங்கள் திருமண வாழக்கை நிச்சயம் நரகம்தான்...!

ஒருவருக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும்

ஒருவருக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும்

ஒரு சமயத்தில் ஒருவருக்கு மட்டுமே உடைகள், உணவு போன்றவற்றை தானமாக கொடுக்க வேண்டும். அவரின் முறை முடிந்த பிறகே அடுத்த நபருக்கு தானம் வழங்க வேண்டும்.

பசு

பசு

தானங்களிலேயே மிகவும் பெரிய தானமாக கருதப்படுவது பசுமாட்டிற்கு உணவளிப்பதாகும். இது உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றக்கூடும்.

மஹாதானம்

மஹாதானம்

ஏழைகள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் போன்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் சிறிய தானம் கூட மஹாதானமாக கருதப்படும் என்று புராணங்கள் கூறுகிறது.

கடலும், தானமும்

கடலும், தானமும்

கடல் தனக்கு கொடுக்கப்படும் எந்த பொருளையும் தானே வைத்துக்கொள்ளாது, திரும்ப கரைக்கே கொடுத்துவிடும். அதேபோல்தான் தானமும். நீங்கள் வழங்கும் எந்த தானமும் இந்த பிரபஞ்சத்தால் கவனிக்கப்படாமல் இருப்பதில்லை. நீங்கள் பிறருக்கு வழங்கும் தானத்தின் பலன் இந்த பிரபஞ்சத்தால் உங்களுக்கு மீண்டும் வழங்கப்படும்.

MOST READ: எச்சரிக்கை! உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...!

மன அமைதி

மன அமைதி

தானம் கொடுப்பது உங்களுக்கான பலனை பொறுமையாக கொடுத்தாலும் அது உங்களுக்கு உடனடியாக கொடுக்கும் ஒரு பலன் மனஅமைதியாகும். நீங்கள் வழங்கும் தானம் உங்களின் மனதை தூய்மைப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things to remember while doing Daan

Before you do any kind of daan, keep these things in mind.
Story first published: Monday, June 10, 2019, 12:02 [IST]
Desktop Bottom Promotion