இந்த சின்னங்கள் கையிலிருப்பவர்கள் சிவனின் ஆசீர்வாதத்தால் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்!உங்க கையில இருக்கா.

நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு அடையாளத்திற்கும் சாஸ்திரங்களின் படி ஒரு அர்த்தம் இருக்கும்.

நம் அனைவருக்குமே உடலில் பிறக்கும்போதே சில அடையாளங்கள் இருக்கும். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு அடையாளத்திற்கும் சாஸ்திரங்களின் படி ஒரு அர்த்தம் இருக்கும். குறிப்பாக நமது கையில் இருக்கும் சில அடையாளங்கள் சிவன் மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

These markings on the palm are said to be blessings from Shiva and Vishnu

இந்த அடையாளங்கள் எளிதில் பார்க்கக் கூடியதாகவும் இருக்கலாம் சிலசமயம் பார்க்க முடியாததாகவும் இருக்கலாம். ஆனால் அந்த அடையாளத்திற்கான பலனை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள். இந்த பதிவில் உங்கள் கையிலிருக்கும் எந்தெந்த அடையாளங்கள் சிவன் மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதம் எனவும் அதனால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்றும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முக்கோணம்

முக்கோணம்

உங்கள் கையில் முக்கோணம் அடையாளம் இருந்தால் அது உங்களுடைய சிறப்பு திறமையின் அடையாளமாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் கையில் முக்கோண சின்னம் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றியையும், புகழையும் குவிப்பீர்கள்.

திரிசூலம்

திரிசூலம்

இந்த அடையாளம் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் சிவனால் நேரடியாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சிவபெருமானின் திரிசூலம் எப்படி உலகை தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கிறதோ அதேபோல உங்கள் கையில் இருக்கும் திரிசூலம் உங்களை அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும். அணைத்து சவால்களையும் சந்திக்கும் சக்தி உங்களிடம் இருக்கும்.

நட்சத்திரம்

நட்சத்திரம்

கையில் நட்சத்திர சின்னம் இருப்பவர்களுக்கு சில தனிப்பட்ட வித்தியாசமான திறமைகள் இருக்கும். உதாரணத்திற்கு வேதங்களை இவர்களால் எளிதாக படிக்க முடியும். இவர்கள் துறைசார்ந்த வாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி வெற்றியை ஈட்டுவார்கள்.

வைரம்

வைரம்

உங்கள் கையில் வைரத்தின் சின்னம் இருந்தால் நீங்கள் நீங்கள் பல்வேறு வித்தியாசமான வழிகளில் வாழ விரும்புவீர்கள் பல பரிசோதனை முயற்சிகளை செய்வீர்கள். உங்க வாழ்க்கையில் எப்பொழுதும் சாகசத்திற்கான தேடுதல் இருக்கும்.

பிறை வடிவம்

பிறை வடிவம்

உங்கள் கையில் பிறை வடிவம் இருந்தால் உங்களுக்கு உள்ளுணர்வு மிகவும் அதிகமாக இருக்கும். உங்களால் வருங்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கணிக்க இயலும், மற்றவர்கள் சரியாக எடைபோடுவதில் வல்லவர்களாக இருப்பீர்கள்.

வர்கம்

வர்கம்

இந்த சின்னம் உங்கள் கையில் இருந்தால் உங்களால் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடங்கல்களையும் கடந்து விடுவீர்கள். இந்த சின்னத்தால் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் பெரிய பிரச்சினைகள் எதுவும் வராது.

கூட்டல் குறி

கூட்டல் குறி

உங்கள் கையில் இந்த சின்னம் இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தின் மீதும் மதத்தின் மீதும் அதிக நாட்டம் இருக்கும். உங்களுக்கு உங்களுடைய மதத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கும் அதேசமயம் மற்றவர்களை எப்பொழுதும் நேர்மறையாக அணுகுவீர்கள்.

மீன்

மீன்

இந்த சின்னம் உங்கள் கையில் இருப்பது உங்களுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டமாகும். இந்த சின்னம் கையில் இருப்பவர்கள் வாழ்க்கையில் நல்லதை மட்டுமே செய்வார்கள். ஆன்மீகத்திலும் உங்களுக்கு அதிக நாட்டம் இருக்கும்.

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி சின்னம் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் சிறந்த தலைவராக இருப்பீர்கள், அதேசமயம் மற்றவர்களுடன் சேர்ந்து சிறப்பாக வேலை செய்ய கூடியவராக இருப்பீர்கள். மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவுவீர்கள். உங்கள் உடலில் வெவ்வேறு பாகத்தில் இருக்கும் பிறப்பு அடையாளங்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

அடிவயிறு

அடிவயிறு

உங்கள் அடிவயிற்றில் பிறப்பு அடையாளங்கள் இருந்தால் நீங்கள் மிகவும் பேராசைக்காரராக இருப்பீர்கள். பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடாதென நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

வாய்க்கு அருகில்

வாய்க்கு அருகில்

ஆண்களுக்கு வாய்க்கு அருகில் பிறப்பு அடையாளங்கள் இருந்தால் அவர்கள் பணக்காரராக ஆவார்கள். அதேசமயம் பெண்களுக்கு இருந்தால் அவர்கள் மிகவும் மென்மையனவராகவும், அதிகம் பேசக்கூடியவராகவும் இருப்பார்கள்.

வலது கன்னம்

வலது கன்னம்

ஆண்களின் வலது கன்னத்தில் பிறப்பு அடையாளங்கள் இருந்தால் அவர்கள் மிகவும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள். அதுவே பெண்களுக்கு இருந்தால் அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.

இடது கன்னம்

இடது கன்னம்

ஆண்களுக்கு இடது கன்னத்தில் பிறப்பு சின்னங்கள் இருந்தால் அவர்கள் அதிக பணக்கஷ்டத்திற்கு ஆளாவார்கள். அதே பெண்களுக்கு இருந்தால் அவர்கள் எப்பொழுதும் மனஅழுத்ததில் இருப்பார்கள்.

மார்பு

மார்பு

ஆண்கள், பெண்கள் இருவருக்குமே மார்பு பகுதியில் பிரபு அடையாளங்கள் இருந்தால் அவர்களுக்கு அதிக பணக்கஷ்டம் ஏற்படும். மேலும் துரதிஷ்டம் அவர்களை துரத்தி கொண்டே இருக்கும்.

நெற்றியின் வலதுபுறம்

நெற்றியின் வலதுபுறம்

உங்கள் நெற்றியின் வலது புறத்தில் பிறப்பு அடையாளங்கள் இருந்தால் நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பீர்கள், அதேசமயம் சிறந்த மனஆற்றலுடன் விளங்குவீர்கள்.

நெற்றியின் இடதுபுறம்

நெற்றியின் இடதுபுறம்

நெற்றியின் இடதுபுறத்தில் அடையாளங்கள் இருப்பது துரதிஷ்டத்தின் அடையாளமாகும். ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த இடத்தில் பிறப்பு அடையாளங்கள் இருப்பவர்கள் அதிக செலவழிப்பவராக இருப்பார்கள். இவர்களுக்கு பணத்தை எப்படி சேமிப்பது என்பதே தெரியாது அதனாலேயே இவர்கள் பல பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion