For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூவுலகையும் ஆண்ட இராவணனின் நிறைவேறாத இயற்கைக்கு எதிரான ஆசைகள் என்னென்ன தெரியுமா?

|

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் அசுர வேந்தன் இரவாணனை மஹாவிஷ்ணு அவர்கள் எப்படி இராம அவதாரம் எடுத்து அழித்தார் என்பதை பற்றி கூறுவதாகும். இராமாயணத்தில் இராமர் எந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவராக இருந்தாரோ அவருக்கு இணையான சக்தியுடன் எதிர்த்து நின்றவர் இராவணன்.கர்வம் மற்றும் பெண்ணாசை மற்றும் இல்லாமல் இருந்தால் இராவணனை விட சிறந்தவர் யாரும் இருக்கு வாய்ப்பில்லை.

The Tasks That Ravana Could Not Complete in His Lifetime

இராவணன் அசுர வேந்தனாக இருந்தாலும் அவரின் ஆட்சியில் இலங்கை சொர்க்கம் போல இருந்தது. அவரின் ஆளுமையின் கீழ் மக்கள் செல்வா செழிப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தார்கள். இராவணனின் தீயகுணங்கள் மட்டுமே நமக்கு அதிகம் தெரியும், ஆனால் அவருக்குள் எண்ணற்ற நல்ல குணங்களும் இருந்தன. மூவுலகையும் கட்டி ஆண்ட சக்கரவர்த்தியாக இருந்தாலும் இராவணனால் தன் வாழ்நாளில் சில ஆசைகளை நிறைவேற்றவே இயலவில்லை. அவற்றில் பெரும்பாலானவை மக்கள் நலன் சார்ந்ததாகவே இருந்தது. இந்த பதிவில் இராவணனின் நிறைவேறாத ஆசைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடவுள் வழிபாட்டை நிறுத்துவது

கடவுள் வழிபாட்டை நிறுத்துவது

இராவணன் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் கடவுளை வழிபடுவதை நிறுத்து வேண்டும் என்று விரும்பினார். அதன் மூலம் தான் இந்த அண்டத்தின் கடவுளாக கிடைக்க வேண்டும் என்று இராவணன் விரும்பினார். கடவுளுக்கு பதிலாக தன்னை மக்கள் அனைவரும் வழிபட வேண்டும் என்று விரும்பினார்.

இரத்தத்தின் நிறம்

இரத்தத்தின் நிறம்

இராவணன் அனைத்து உலகங்களையும் கைப்பற்ற நினைக்கும் போது பல போர்களில் ஈடுபட்டார். அதனால் பல போரின்போது இரதம் சிந்தினார். இது கடவுள்களுக்கு இராவணன் மீதான கோபத்தை அதிகரித்தது. எனவே இரத்தத்தின் நிறத்தை யாரும் பார்க்க இயலாத வெள்ளை நிறமாக மாற்ற இராவணன் முயற்சி செய்தார்.

தங்கம்

தங்கம்

இராவணன் ஆண்ட இலங்கை பொன்னிலங்கை என கூறப்பட்டது. ஏனெனில் இலங்கை முழுவதும் தங்கத்தால் நிறைத்திருந்தது. ஆனால் இராவணனுக்கு அதுவும் போதவில்லை. எனவே அவர் தங்கத்திற்கு தனித்துவமான மணம் இருக்க வேண்டுமென விரும்பினார். அதன்மூலம் உலகத்தில் எந்த இடத்தில் தங்கம் இருந்தாலும் தான் கண்டுபிடித்து விடலாம் என்று இராவணன் நினைத்தார்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு காதலை விட எப்பொழுதும் சுயவெற்றியே முக்கியமாம்...பார்த்து பழகுங்கள்..

சொர்க்க பாதை

சொர்க்க பாதை

இராவணன் தன் கட்டுப்பாட்டில் தனக்கென ஒரு பாதை வேண்டும் அது நேரடியாக சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்மூலம் மக்கள் தன்னை வழிபடுவார்கள் என்று நினைத்தார்.

மது

மது

இராவணன் மதுவானது கெட்ட வாசனையும், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதன்மூலம் மக்கள் மதுவால் ஆபத்தின்றி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம் என்று விரும்பினார்.

நிற வேறுபாடு

நிற வேறுபாடு

இராவணன் இயற்கையாகவே நிறம் குறைவானவராக இருந்தார், எனவே இராவணன் அனைத்து ஆண்களும் அழகான சரும நிறத்துடன் இருக்க வேண்டுமென்று விரும்பினார். அதன்மூலம் பெண்கள் முன்னிலையில் ஆண்கள் கேலிக்குள்ளாக மாட்டார்கள் என்று விரும்பினார்.

கடல் நீர்

கடல் நீர்

கடல்நீர் உப்பாக இருப்பதால் அதனை குடிக்க மக்களால் பயன்படுத்த முடியாமல் போனது. இராவணன் கடல் நீரை மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றபடி இனிப்பான சுவையுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இயற்கைக்கு மாறான இராவணனின் இந்த ஆசைகள் இறுதிவரை நிறைவேறவில்லை. இராவணன் பற்றி பலரம் சரியாக ரகசியங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ: இந்த மொக்க காரணத்துக்காகலாமா பொண்ணுங்க காதலிக்கிறாங்க... நீங்களே பாருங்க இந்த கொடுமைய...!

பிரம்மாவுடனான உறவு

பிரம்மாவுடனான உறவு

இராவணனின் நலன் மீது பிரம்மா எப்பொழுதும் அக்கறையாக இருந்தார் அதற்கு காரணம் பிரம்மாவிற்கும், இராவணனுக்கும் இடையில் இருந்த நெருங்கிய உறவாகும். இராவணனின் தந்தை ரிஷி விஸ்ரவசர், பிரஜாபதி புலத்சயரின் மகன் ஆவார். பிரம்மாவின் 10 மகன்களுள் இவரும் ஒருவராவார். பிரம்மாவின் கொள்ளுப்பேரன்தான் இராவணன்.

கிரக நிலைகள்

கிரக நிலைகள்

மூவுலகையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இராவணன் கிரக நிலைகளை கூட தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றும் சக்தி கொண்டவராக இருந்தார். புராண குறிப்புகளின் படி இராவணன் தன் ஆணையை ஏற்க மறுத்ததற்தாக ராகுவை தண்டித்தார்.

இலட்சுமணனனுக்கு அறிவுரை

இலட்சுமணனனுக்கு அறிவுரை

இராவணன் மரணிக்கும் போது அவரிடம் இருந்து சில பாடங்களை கற்றுக்கொள்ளும்படி இலட்சுமணனுக்கு அறிவுரை வழங்கினார் இராமன். தான் இறக்கும் தருவாயில் கூட வாழ்க்கை பற்றிய முக்கிய ரகசியங்களை இலட்சுமணனுக்கு போதித்து விட்டுத்தான் இறந்தார்.

எதிர்காலம்

எதிர்காலம்

கிரகங்களை கட்டுப்படுத்தியதன் மூலம் எதிர்காலத்தை அறியும் ஆற்றலை பெற்று இருந்தார் இராவணன். தனது வீழ்ச்சியை இராவணன் முன்கூட்டியே இருந்தார். இருப்பினும் தன் ஆற்றல் மீதிருந்த கர்வத்தால் இராவணன் அலட்சியமாக இருந்து விட்டார்.

MOST READ: பொறந்தா இந்த ராசியில பொறக்கணும்... நினைக்கறிதெல்லாம் டான் டான்னு நடக்குமாம்...

விஷ்ணுவின் பாதுகாவலன்

விஷ்ணுவின் பாதுகாவலன்

இராவணன் தன்னுடைய முன்ஜென்மத்தில் விஷ்ணுவின் பாதுகாவலனாக இருந்தார். இராவணனும், கும்பகர்ணனும் அவரை விஷ்ணுவை பாதுகாக்க முயற்சிக்கும் போது பல ரிஷிகளின் சாபங்களை பெற்றனர். அவர்கள் அளித்த சாபத்தின் விளைவாகத்தான் தங்களுடைய மறுஜென்மத்தில் இராவணனும், கும்பகர்ணனும் விஷ்ணுவை எதிர்ப்பவர்களாக பிறந்தார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: astrology spiritual
English summary

The Tasks That Ravana Could Not Complete in His Lifetime

Ravana was the great demon king who ruled the whole world. But some tasks that Ravana could not complete in his lifetime.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more