Just In
- 2 hrs ago
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
- 2 hrs ago
ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்…!
- 5 hrs ago
மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்… நீங்களே ஆச்சிரியப்படுவீங்க…
- 5 hrs ago
எகிறும் வெங்காய விலையால் அதை வாங்கவே பயமா இருக்கா? அப்ப இனிமேல் இத வாங்குங்க...
Don't Miss
- Movies
கிக்கேற்றும் மாளவிகா மோகனன்.. கவர்ச்சி புகைப்படம்.. விழுந்தடித்து குவியும் லைக்குகள்!
- News
இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை.. ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளோம்.. அமித் ஷா விளக்கம்
- Sports
2 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.. உள்ளே வந்த ஷமி, குல்தீப்.. அதிர வைத்த கேப்டன் கோலி! #INDvsWI
- Finance
நிசானின் அதிரடி திட்டம்.. ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க ஆயத்தம்..!
- Automobiles
டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்
- Education
12-வது தேர்ச்சியா? தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க ராசிக்கு பக்கவா பொருந்துற தலயோட பஞ்ச் டயலாக் எது தெரியுமா? ஒருமுறை ட்ரை பண்ணிப்பாருங்க
தல அஜித்தை நமக்கு பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா. அப்படி தன்னுடைய நடிப்புத் திறனால் மட்டுமில்லாமல் தன்னுடைய அழகு, பொறுமை, புத்திசாலித்தனம், மற்றவர்களுக்கு உதவும் என தன்னோட ரியல் வாழ்க்கையிலும் அஜித் ஒரு ஹீரோ.
நிறைய இளைஞர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கூட ரோல்மாடலாகவே இருக்கிறார்.
அப்படி அஜித் பேசிய பஞ்ச் டயலாக்குகள் உங்களுடைய ராசிக்கு எது பொருந்தும் என ஜாலியா ஒரு விசிட் அடிக்கலாம். வாங்க பார்க்கலாம். இதை ஜாலியா எடுத்துகிட்டாலும் சரி. சீரியஸா எடுத்துக்கிட்டாலும் நிச்சயம் இந்த தொகுப்பு உங்களை மகிழ்விக்கும்.

மேஷம்
எப்போதும் தான் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் மேஷ ராசிக்காார்கள் தலைமைப் பொறுப்பை விரும்புவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய வாழ்க்கையில் புதிய விஷயங்களைத் தேடிச் செல்பவர்குளாக இருப்பதால் உங்களுக்கு
என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நானா செதுப்பினதுடா - பில்லா 2
என்கிற பஞ்ச் டயலாக் உங்களுக்கு மிகப்பொருத்தமானதாக இருக்கும்.
MOST READ: லவங்கப்பட்டை இருக்கும்போது சர்க்கரை வியாதி பத்தி கவலைப்படலாமா? எப்படி சாப்பிடணும்?

ரிஷபம்
மிகவும் பொறுமையும் அடக்கமும் நிறைந்த ரிஷப ராசிக்காரர்கள் மன உறுதி கொண்டவர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள். மற்றவர்களை மதித்து நடப்பவராகவும் தன்னுடைய வேலையில் சிறந்து விளங்குபவராகவும் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு
எதிரிங்க எத்தன பேர் வந்தாலும் சமாளிச்சிருக்கேன். ஆனா துரோகிங்கள சமாளிக்க இப்ப தான் கத்துக்கிறேன்.
எவ்வளவு தூக்குறோம்ங்கிறது முக்கியமில்ல எதை தூக்குறோம்ங்கிறது தான் முக்கியம்
என்கிற தல அஜித்தின் இரண்டு வசனங்களும் உங்களுக்குப் பளிச்சென பொருந்தும்.

மிதுனம்
மற்ற ராசிக்காரர்களுக்கு இணக்கம் காட்டுபவராக இருப்பவர் மிதுன ராசிக்காரர். இவர்களுடைய பேச்சு ஜாலம் எல்லோரையும் மயக்கிவிடும். எதையும் ஆற்றலோடும் ஆர்வத்தோடும் செய்து முடிக்கக்கூடியவராக இருப்பார்கள். மிகவும் சுவாரஸ்யமான நபரான உங்களுக்கு, நம்ம தலயோட
ஒருத்தனுக்கு ஆடத் தெரியலன்னா ஆடிக் காண்பிச்சரலாம், பாடத் தெரியலன்னா பாடிக் காண்பிச்சிரலாம்
என்கிற வசனம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் எளிமையானவர்கள். ஆடம்பரத்தை வெறுப்பார்கள். ஆனால் என்ன வாற்கினாலும் ஆராய்ந்து உயர்ந்ததாகவே வாங்குவார்கள். பிறரிடம் எளிமையாகப் பழகக்கூடியவர்கள். ஆனால் அவர்களைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமான விஷயமாகவே இருக்கும். இப்படி இருக்கும் உங்களுக்கு, தலயோட
என்ன அழிக்கலாம் நிநைச்சா முடியாது. நான் ஜெயிச்சிக்கிட்டே இருப்பேன். என்ன எதுக்கிறவன் பலத்தையும் சேர்த்து எடுத்துகிட்டு வளருவேன். என் ஜாதகம் அப்படி
என்னும் அட்டகாசம் பட பஞ்ச் உங்களுக்கு மிகப் பொருந்தும்.

சிம்மம்
சிங்கம் எப்படி காட்டுக்கு ராஜாவோ அதுபோலத்தான் ராசிகளுக்கெல்லாம் ராஜா போல கம்பீரம் கொண்டவர்களாக சிம்ம ராசிக்காரர்கள் இருப்பார்கள். இயல்பில் கொஞ்சம் கோப சுபாவம் கொண்டவராக இருப்பார்கள். நட்பை மதிக்கும் இவர்கள் மற்றவர்களுக்குக் கைக்கொடுத்து தக்க சமயத்தில் தூக்கியும் விடுவார்கள். இவர்களுடைய குணத்துக்கு
நான் பார்த்து பார்த்து தண்ணி ஊத்தி வளர்த்த காட்டு மரம் இல்லடா... தானா வளர்ந்த காட்டு மரம். வெட்ட நினைச்சே கோடாலி கூட உடைஞ்சிடும்.
என்கிற தல அஜித்தின் வசனம் பொருத்தமாக இருக்கும்.

கன்னி
எதையும் ஆராய்ந்து செய்யாத அவசர புத்திக்காரர்களான கன்னி ராசிக்காரர்கள் எதிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். செய்த தவறை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்தவொரு விஷயத்தையும் தவறாகவே இருந்தாலும் கடைசி வரை நின்று போராடிப் பார்க்கலாம் என்று நினைக்கும் உங்களுக்கு, அஜித்தோட எந்த டயலாக் பொருந்தும் தெரியுமா?
சரித்திரத்த நல்லா பாருங்க. அது நமக்கு கத்துக் குடுத்தது ஒன்னு தான். நாம வாழணும்னா யார வேணாலும் எத்தன பேர வேணாலும் கொல்லலாம்.
இந்த டயலாக் தான்.

துலாம்
பொறுமைசாலியான துலாம் ராசிக்காரர்கள் அமைதியை நாடிச் செல்வார்களே ஒழிய ஆர்ப்பாட்டத்தை விரும்ப மாட்டார்கள். மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் இவர்கள் கட்டாயம் இருப்பார்கள். இயற்கையிலேயே புத்திக்கூர்மை கொண்ட இவர்கள் தவறான விஷயங்களுக்கு ஒருபோதும் தன் அறிவை பயன்படுத்த மாட்டார்கள். இப்படிப்பட்ட குணமுடைய இவர்களுக்கு,
மரபுகளை மாத்த முடியாது. முயற்சி பண்ணினா மனிதர்களை மாத்த முடியும். தலைவர்களை மாத்த முடியாது. முயற்சி பண்ணினா மக்களோட தலையெழுத்த மாத்த முடியும்.
இந்த தலயோட டயலாக் தான் பொருத்தமா இருக்கும்.
MOST READ: கணவனை கட்டிவைத்து அடித்தே கொன்ற மனைவி - மகளும் தற்கொலை - சோகத்தின் உச்சம்

விருச்சிகம்
எதையுமே புத்திசாலித்தனமாக பார்க்கும் இவர்கள் பாசத்துக்கு அடிமையாகிவிடுவார்கள். யார் எதை சொன்னாலும் அதை காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டார்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார்கள். அதிக இரக்க குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு நம்ம தலயோட,
ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்த பக்கம் போயிட்டா நான் ரொம்ப கெட்டவன். இந்த பக்கமா இல்ல அந்த பக்கமான்னு முடிவு செய்ற நேரம் வந்துருச்சு
என்கிற பஞ்ச் டயலாக் அப்படியே இவர்களுக்கே எழுதியது மாதிரி பொருத்தமாக இருக்கிறது.

தனுசு
மற்றவர்களுடைய உணர்வுக்கு மதிப்பளிக்கக் கூடிய தனுசு ராசிக்காரர்கள் புதிய விஷயங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்க நினைப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்க மாட்டார்கள். அதேபோல் தன்னுடைய விஷயத்தில் யாராவது குறுக்கு வந்தால் செம காண்டாகிவிடுவார்கள். இவர்களுக்கு அஜித்தின்
நீ தோத்துட்ட... நீ தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறினாலும்... நீயா ஒத்துக்கிற வரைக்கும் எங்கேயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது...!
என்னும் பஞ்ச் பக்காவாக பொருந்திவரும்.

மகரம்
ஒரு விஷயத்துல இறங்கிட்டா அந்த விஷயத்த முடிக்காம ஓயவே மாட்டார்கள். கொஞ்சம் சுயநலம் மிக்கவர்களாகத் தான் இருப்பார்கள். வெளியில் பார்ப்பதற்கு மேறற்வர்களிடம் நுசம் காட்டுபவராகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் கர்வமும் சுயநலமும் இருக்கும். இவர்கள் தனக்கு எதிரிகளே இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இருந்தால் அழிக்க நினைப்பார்கள். அதனால் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். இவர்களுக்கு தலயின்
உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது...
பஞ்ச் டயலாக் தான் நூறு சதவீதம் பொருந்தும்.

கும்பம்
இவர்களை சிந்தனைக்கடல் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அள்ள அள்ள அறிவு ஊற்றெடுக்கும் நபர். அறிவாளிகளை மதிக்கிற அளவுக்கு முட்டாள்களை இழிவுபடுத்த தயங்க மாட்டார்கள். நட்புக்கு மரியாதை கொடுக்கும் இவர்கள் எப்போதும் தங்களுடைய திறமையை சந்தேகம் கொள்ளவே மாட்டார். எப்போதும் எல்லோர் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் இவர்கள் சுயமரியாதையை விட்டுத் தர யோசிப்பார்கள். இவர்களுக்கென்று எழுதியது போல் தல அஜித்தின் டயலாக் ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? இதோ
படிப்புக்கு காசு வேணும்னா நான் தர்றேன். ஆனால் அந்த படிப்பே காசுன்னா நான் தரவே மாட்டேன்
இதுதான் அந்த பஞ்ச்

மீனம்
துணிச்சல் மிக்கவர்களான மீன ராசிக்காரர்கள் பாசத்துக்கு அடிமை. மற்றவர்கள் மீது கருணை காட்டும் இவர்களுக்கு ஒருபோதும் சுய பச்சாதாபம் இருக்காது. தனக்கென ஒரு கோடு போட்டு அதன்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் யாருக்காகவும் எதற்காகவும் வளைந்து கொடுக்க மாட்டார்கள். இவர்களுக்குப் பொருத்தமானதென்றால் தல- யின்
சாவுக்கு பயந்தவனுக்கு தான் தினம் தினம் சாவு. பயப்படாதவனுக்கு ஒருமுறை தான் சாவு.
என்ற பஞ்ச்சை சொல்லலாம்.
ஒருவழியா உங்க ராசிக்குரிய தலயோட பஞ்ச் டயலாக்கை படிச்சு தெரிஞ்சிக்கிட்டீங்களா. சந்தோஷமா இருங்க.