For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்ஸ்டகிராம்ல சாவுனு கமெண்ட் போட்டதுக்காக தற்கொலை செய்துகொண்ட பெண்... என்னதான் ஆச்சு?

இன்ஸ்டாவில் கமெண்ட் போட்டதற்காக தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் பற்றி தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம். எதற்காக இப்படி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க

|

இந்த நவீன காலத்தில் சோஷியல் மீடியாவை பயன்படுத்தாத நபர்களை பார்க்க முடியாது. அந்தளவுக்கு அதன் மீது மோகம் கூடிக் கொண்டு தான் வருகிறது. நிறைய லைக்ஸ்களை வாங்கி விட வேண்டும் மக்களின் பார்வையை நம் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எதை எதையோ செய்து போஸ்ட் செய்து வருகிறார்கள்.

Image Courtesy

Committed Suicide

இவர்கள் பண்ற சில்லி திங்க்ஸூம் எல்லோராலும் பேசப்படுவது தான் வேதனைக்குரியது. இன்ஸ்ட்டாகிராம் போன்ற சோஷியல் மீடியா மக்களின் பயன்பாட்டிற்கு என்று இல்லாமல் மக்களை பைத்தியாக்கும் அளவுக்கு அதன் பிடியில் வைத்துள்ளது. அப்படித்தான் ஒரு பெண் செய்ஞ்ச பைத்தியக்காரத்தனத்த பாருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தற்கொலைக்கு வாக்கெடுத்த ட்வீட்

தற்கொலைக்கு வாக்கெடுத்த ட்வீட்

அந்த பெண் தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தான் தற்கொலை செய்யலாமா வேண்டாமா என்பது போன்ற கருத்தை மக்களிடம் கேட்டு ஒரு ட்வீட்டை பதிவிட்டு உள்ளார். மக்களின் வாக்கெடுப்பில் கிடைத்த பரிசு அந்த பெண் கொஞ்சம் கூட யோசிக்காமல் மலேசியாவில் உள்ள பெரிய அடுக்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

சோகமான செய்தி

சோகமான செய்தி

இன்ஸ்ட்டாகிராமில் அந்த பெண் பதிவிட்ட செய்தி இது தான்.

முக்கியமான பதிவு : எனக்கு உதவுங்களே, தேர்ந்தெடுங்கள் : D( இறப்பு), L (வாழ்வு ). என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

" நீங்கள் சொல்வதை பொருத்து நான் என் வாழ்க்கையை முடித்து கொள்ளப் போகிறேன்" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த போஸ்ட்டை பார்த்த மக்கள் இதை ஒரு பொய் வதந்தியாக இருக்கும் என்று நினைத்துள்ளனர். இதனால் அவர்கள் அதை ஜோக்காகவும், விளையாட்டுத்தனமாகவும் நினைத்து பதில் அளித்துள்ளனர்.அவர்கள் அளித்த பதிலே அந்த பெண்ணின் வாழ்க்கையை முடித்து விட்டது. 69% மக்கள் இறப்பு என்று பதிவிட்டதால் அதை சீரியஸாக எடுத்து தற்கொலை செய்து கொண்டாள்.

MOST READ:இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்?

தற்கொலை செய்ய காரணம்

தற்கொலை செய்ய காரணம்

அவருடைய வளர்ப்பு தந்தை சிங்கப்பூரில் ஒரு வியட்நாம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக மனம் நொந்த நிலையில் இருந்ததால் இந்த போஸ்ட்டை போட்டுள்ளார். ஆனால் இதை அறியாத மக்களின் கருத்தால் பாவம் அவர் உயிர் போய் விட்டது. அந்த பெண்ணும் இதற்காக தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

 விழிப்புணர்வு

விழிப்புணர்வு

சோஷியல் மீடியா என்பதை மக்கள் நல்ல பயன்பாட்டிற்கு பயன்படுத்துங்கள். அதை விடுத்து மற்றவர்களை ஈர்க்கும் நோக்கத்திலயே லைக்ஸ்களை அள்ள வேண்ட எண்ணியோ பயன்படுத்தினால் இந்த மாதிரியான விபரீத முடிவு தான் எழும். உங்களுடைய பெர்சனல் பிரச்சினைகளை எல்லோரும் பார்க்கும் வண்ணம் கொண்டு செல்வது முற்றிலும் தவறான செயலும் கூட.

பொய்யோ மெய்யோ இந்த மாதிரியான கிறுக்குத்தனமான பதிவிட்டுக்கு மக்களும் நேர்மறை பதில்களை கூறுவதே சிறந்தது. நீங்கள் L (வாழ்வு ) என்று பதிவிட்டு இருந்தால் தற்போது எங்கயோ இருக்கும் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஒன்னு பாசிடிவ் பதிவிடுங்கள். இல்லையென்றால் எல்லோரும் அதை தவிர்த்திடுங்கள். அந்த பெண் மாதிரி முட்டாள்தனமான முடிவை எடுப்பதற்கு முன் எல்லோரும் யோசியுங்கள்.

இப்படி கேட்பதற்கு அந்த பெண் தனக்குரிய பிரச்சினைகளை சொல்லியே தீர்வு கேட்டு இருக்கலாம். சோஷியல் மீடியா என்பது ஒரு பொழுது போக்கு அம்சம் அவ்வளவு தான்

MOST READ:புராணங்களில் வரும் அரக்கர்களில் அதிக பலம்வாய்ந்த அரக்கர் யார் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Teen Committed Suicide After 69% of People Voted For Her To Die in Instagram Poll

Social media plays a vital role in the lives of people and people tend to do anything for the sake of getting attention on social sites. There are times when people do silly stuff just to gain attention, while there are those who even share stuff about how they are helpless and feeling depressed.
Story first published: Friday, May 24, 2019, 11:42 [IST]
Desktop Bottom Promotion