For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவன் ருத்ர தாண்டவம் ஆடும்போது என்ன சொல்லிக்கிட்டு ஆடுவார்னு தெரியுமா?

சிவபெருமானின் சக்தியையும் நடனத்தையும் பற்றி விவரிக்கும் சிவதாண்டவ ஸ்தோத்திரம் பற்றிய விளக்கங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். அந்த ஸ்தோத்திரங்களின் தொகுப்பு தான் இது.

|

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் என்ற பாடல், சிவபெருமான் தாண்டவ நடனம் புரியும்போது அவருடைய தலைமுடி எவ்வாறு அசைகிறது, அவர் தலையில் இருக்கும் கங்கை நீர் எப்படி தெறிக்கிறது.

Shiva Tandava

அவர் நடனத்திற்கு ஏற்றபடி அவர் கையில் இருக்கும் உடுக்கை எவ்வாறு ஓசை எழுப்புகிறது மற்றும் அவர் அசைவிற்கு ஏற்றவாறு அவருடைய ஆபரணங்கள் எவ்வாறு அசைகிறது மற்றும் இன்னும் பல விஷயங்களை விவரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவ தாண்டவ கதை

சிவ தாண்டவ கதை

சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் கதையைக் குறித்து இப்போது காண்போம்.

ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத்து வரச் சொல்லி நாரதர் ராவணனுக்கு அறிவுறுத்தினார். ராவணனுக்கு கர்வம் அதிகம் என்பதால் ஒட்டுமொத்த கைலாய மலையை வேரோடு எடுத்து வர எண்ணி, மலையைத் தூக்கினான். மலையைத் தூக்க விடாமல் தடுக்க, சிவபெருமான் தனது காலில் பெருவிரலால் நிலத்தை அழுத்தினார்.

MOST READ: உங்களுக்கு கண் அடிக்கடி துடிக்குதா?... எதற்காக துடிக்கிறது? அதை எப்படி நிறுத்தலாம்?

ராவணன்

ராவணன்

இதனால் பாரம் தாங்க முடியாத ராவணன் பாதாளத்திற்கு சென்றான். சிவபெருமானின் பெருவிரல் சுமையால் நசுக்கப்பட்ட ராவணன் வலியால் துடித்து ஒரு துதி பாடினான். அந்தத் துதியால் மூவுலகும் நடுங்கியது. பின்னர், இந்த துதி பாடியதால் சிவபெருமான் ராவணன் என்ற பெயரை வழங்கினார். இந்த பெயர் சிவபெருமானால் கொடுக்கப்பட்டது என்பதால் ராவணனுக்கு அவனுடைய இந்தப் பெயர் மிகவும் இஷ்டம்.

தீவிர பக்தன்

தீவிர பக்தன்

தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்த பின்னரும், ராவணனால் அந்த மலையைத் தூக்க முடியவில்லை. அதன்பின்னர், தொடர்ந்து 14 நாட்கள் சிவ மந்திரத்தை ஜெபித்து வந்தான். ஒரு பிரதோஷ தினத்தன்று மாலை வேளையில் சிவபெருமானை மகிழ்விக்க ராவணன் இந்த சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தைப் பாடினான். சரியான தாளத்தில் மிகுந்த பக்தியுடன் பிரதோஷ காலத்தில் இந்த பாடலைப் பாடினான் ராவணன்.

MOST READ: நம்ம பூசற விபூதிக்கும் சிவபெருமானுக்கும் நிஜமா ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஏன் பூசறோம்?

பார்வதி சிபாரிசு

பார்வதி சிபாரிசு

ராவணனின் பக்தியைக் கண்டு, இந்த சக்தி மிகுந்த மந்திரத்தைக் கேட்டு, சிவபெருமான் புன்முறுவல் புரிந்தார். பார்வதி தேவி ராவணன் மீது பரிதாபம் கொண்டு, அவனை விடுவிக்கச் சொல்லி சிவபெருமானிடம் சிபாரிசு செய்தார். அதனால் சிவபெருமான் ராவணனை விடுவித்து, அவனுக்கு பல வரங்கள் கொடுத்து சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடிய ராவணனுக்கு ஆசிகள் வழங்கினார்.

MOST READ: காவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு? ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...

சிவதாண்டவ ஸ்தோத்திரம்

சிவதாண்டவ ஸ்தோத்திரம்

சிவதாண்டவ ஸ்தோத்திரம் மற்றும் அதன் பொருள் விளக்கம்

ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே

கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்

டமட் டமட் டமட் டமன் னிநா தவட் டமர் வயம்

சகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம்

அடர்த்தியான காடு போல் இருக்கும் சடையில் இருந்து சொட்டு சொட்டாக விழும் நீரால் சுத்தீகரிக்கபட்ட ராஜநாகத்தை கழுத்தில் மாலையாக அணிந்து, உடுக்கை ஒளியின் இசைக்கு ஏற்ப தாண்டவ நடனம் புரியும் சிவபெருமான் எங்களை ஆசிர்வதிக்கட்டும்.

ஜடா கடாஹ ஸம்ப்ரம ப்ரமண் ணிலிம்ப நிர்ஜரீ

விலோல வீச்சி வல்லரீ விராஜ மான மூர்த்தனி

தகத் தகத் தகஜ் ஜ்வலல் லலாட பட்ட பாவகே

கிஷோர சந்த்ர ஷேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம

கொடிபோல் அசையும் அலைகள் கொண்ட கங்கைக்கு நடுவில் தன் தலையை வைத்திருப்பவர், எரிந்து கொண்டிருக்கும் தீ போன்ற சுருள் சடையைக் கொண்டவர், தனது நெற்றியில் கனல் வீசும் தீயை கொண்டவர் மற்றும் இளம்பிறையை தனது நெற்றியில் கொண்டிருப்பவராகிய சிவபெருமானை நான் ஒவ்வொரு கணமும் போற்றுகிறேன்.

தரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர

ஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே

க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்த ராபதி

க்வசித் தீகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி

எல்லா உயிர்களையும் தன்னுள் கொண்ட பிரபஞ்சத்தை தன் உள்ளத்தில் கொண்டவர், மலை அரசனின் மகளின் இனிய துணையாக இருப்பவர், பல இன்னல்களை தீர்ப்பவர், திசைகளை ஆடையைக் கொண்டவராகிய சிவபெருமானைக் கண்டு என் உள்ளம் மகிழ்கிறது.

ஜடா புஜங்க பிங்கள ஸ்புரத் பணா மணி ப்ரபா

கடம்ப குங்கும த்ரவ ப்ரலிப்த திக்வதூ முகே

மதாந்த ஸிந்து ரஸ்புரத் வகுத்தரீ யமேதுரே

மனோ வினோத மத்புதம் பிபர்து பூத பர்தரி

ஒளிபொருந்திய மாணிக்கத்தை அணிகலனாகக் கொண்ட கொடி போன்ற நாகத்தை கொண்டவரும், திசைகளின் தெய்வங்கள் மீது வண்ணமயமான வண்ணங்களைப் பரப்பி மதயானையின் தோலை ஆடையாகப் போர்த்தி இருப்பவரும், பூதங்களின் கடவுளாக இருப்பவருமாகிய சிவபெருமானை என் உள்ளம் பற்றிக் கொள்கிறது.

லலாட சத்வர ஜ்வலத் தனஞ்ஜய ஸ்புலிங்க பா

நிபீத பஞ்ச ஸாயகம் நமன் னிலிம்ப நாயகம்

சுதா மயூக லேகயா விராஜமான சேகரம்

மஹா கபாலி ஸம்பதே ஸிரோ ஜடா லமஸ்துனஃ

ராஜ நாகத்தை மாலையாக அணிந்து தனது சடையை முடிந்திருப்பவரும், சகோரப் பறவையின் நண்பனான இளம் பிறையை தனது தலையில் சூடி இருப்பவரும், தேவர்களால் துதிக்கப்படுபவருமாகிய சிவபெருமானை பணிவதால் நாம் சகல சௌபாக்கியத்தையும் பெறுவோம்.

இவை மட்டுமல்ல. இதுபோன்று இன்னும் சில ஸ்தோத்திரங்கள் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shiva Tandava Stotram Describes The Power And Dance Of Lord Shiva

Shiva Tandava Stotram describes how Lord Shiva’s hair moves, how the water of river Ganga splashes when he performs a Tandava dance, how his drums sound as he dances, how his ornaments move along with him and more.
Story first published: Saturday, June 15, 2019, 11:35 [IST]
Desktop Bottom Promotion