For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ணனோட கவசத்தை ஏமாத்தி வாங்குனது அர்ஜுனனை காப்பாத்த இல்ல.. அதுக்கு பின்னாடி வேற தேவரகசியம் இருக்கு.

|

மகாபாரதத்தில் அனைவரின் மதிப்பிற்கும், இரக்கத்திற்கும் உரிய கதாபாத்திரம் என்றால் அது கர்ணன்தான். வீரம், விவேகம், நட்பு, தாய்ப்பாசம் அனைத்திற்கும் மேலாக கேட்ததையெல்லாம் தானம் கொடுக்கும் ஈடு இணையற்ற ஈகை குணம் என அனைத்து நற்பண்புகளும் நிறைந்த ஒரே ஆளாக கர்ணன் இருந்ததுதான் அவரின் அழியாப்புகழுக்கு காரணமாக உள்ளது.

secret behind why Indra took Karnas armour

வாழ்க்கை முழுவதும் தனக்கான அங்கீகாரத்திற்காக போராடிய கர்ணனுக்கு அவரின் இறப்பிற்கு பின்னரே அது கிடைத்தது. தன்னை சுற்றியிருந்த அனைவராலும் வஞ்சிக்கப்பட்டவர் கர்ணன் ஆவார். பல தனித்துவங்கள் இருந்தாலும் கர்ணனின் அடையாளமாக விளங்கியது அவரின் கவசமும், குண்டலங்களும். ஆனால் அதுவும் போருக்கு முன் இந்திரனால் சூழ்ச்சி மூலம் பறிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்னால் பலரும் அறியாத ஒரு தேவரகசியம் உள்ளது. அது என்ன என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ணனின் பிறப்பு

கர்ணனின் பிறப்பு

மகாபாரதத்தில் இருந்த பாண்டவர்கள், கௌரவர்கள்அனைவருமே இயற்கையான முறையில் பிறந்தவர்கள் இல்லை. அதற்கு ஆரம்பமாக இருந்தது கர்ணனின் பிறப்புதான். மகரிஷி துருவாசர் தனக்கு அருளிய வரத்தை குந்தி விளையாட்டாய் சோதனை செய்ய சூரியபகவானின் ஆசீர்வாதத்தால் அவரின் பிரசாதமாக பிறந்தார் கர்ணன். அவரின் கவசமும், குண்டலங்களும் அவர் பிறந்தபோதே அவருடன் இருந்தது.

கர்ணனின் வளர்ப்பு

கர்ணனின் வளர்ப்பு

கர்ணன் பிறந்த போது குந்திக்கு திருமணம் ஆகாததால் அவரை குந்தியால் ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.எனவே அவரை பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டார். அவ்வாறு ஆற்றில் சென்ற கர்ணன் தேரோட்டி அதிரதன் கையில் கிடைக்கவே அவர் தேரோட்டியின் மகனாக வளர்ந்தார். அதனாலேயே அவரின் ஆற்றலுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போனது.

சமூக புறக்கணிப்பு

சமூக புறக்கணிப்பு

தேரோட்டியின் மகனாக பிறந்தததால் அவருக்கு போர்க்கலைகளை கற்றுக்கொடுக்க யாரும் முன்வரவில்லை. துரோணாச்சாரியார் முதல் கொண்டு அனைவரும் கர்ணனை புறக்கணிக்க அவர் தன்னை பிராமணன் என பொய்க்கூறி பரசுராமரிடம் வித்தைகளை பயின்றார். இறுதியில் பரசுராமருக்கு உண்மை தெரியவர குருவின் சாபத்திற்கு ஆளானார்.

துரியோதனனுடன் நட்பு

துரியோதனனுடன் நட்பு

கர்ணன் அவரின் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு துரியோதனனுடன் நட்பை வளர்த்துக்கொண்டதுதான். தர்மத்தின் பாதையில் இருந்து விலகாத கர்ணன் தனக்கு அங்கீகாரம் கொடுத்தான் என்ற ஒரே காரணத்திற்காக அதர்மமே உருவான துரியோதனனுடன் நட்பு பாராட்டியது அவரை தன் சகோதரர்களுக்கு எதிராக வில்லேந்தி நிற்கும் நிலையை உருவாக்கியது.

MOST READ: இந்த ரேகை கையில் இருக்கறவங்கள விட சிறந்த அதிர்ஷ்டசாலி வேறு யாருமில்லை..உங்க கையில இருக்கா அந்த ரேகை.

குருஷேத்திர போர்

குருஷேத்திர போர்

பாண்டவர்களின் வனவாசம் முடிந்த பிறகு துரியோதனன் தானே கொடுத்த வாக்கை நிறைவேற்றாததால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. கர்ணனும், அர்ஜுனனை போரில் எதிர்கொள்ள ஆயத்தமானான். எந்தவொரு ஆயுதத்தாலும் கர்ணனின் கவசத்தை உடைக்க முடியாது என்று தெரிந்து வைத்திருந்த துரியோதனன் போரில் அர்ஜுனனை எப்படியும் கர்ணன் கொன்று விடுவார் என்று நம்பினான். அர்ஜுனன் மட்டும் இல்லையென்றால் பாண்டவர்களின் பலம் பாதி குறைந்துவிடும் போரில் எளிதில் வென்றுவிடலாம் என்று கணக்குப்போட்டான் துரியோதனன்.

இந்திரனின் சூழ்ச்சி

இந்திரனின் சூழ்ச்சி

சூரியபகவான் எப்படி கர்ணனின் தந்தையாக இருந்தாரோ அதேபோல அர்ஜுனனின் தந்தையாக இருந்தது தேவர்களின் அதிபதி இந்திரன் ஆவார். கர்ணனின் கவசம் இருக்கும்வரை அர்ஜுனனால் மட்டுமல்ல எவராலும் கர்ணனை வெல்ல முடியாது, கர்ணன் இருந்தால் போர் முடிவு துரியோதனனுக்கு சாதகமாக மாறிவிடும் என்பதை இந்திரன் அறிவார்.

கர்ணனின் கொடை

கர்ணனின் கொடை

இந்திரனின் சூழ்ச்சி பற்றியும், அவர் உன்னிடம் கவசத்தை தானமாக கேட்பார் என்று சூரியபகவான் கர்ணனை எச்சரித்தார். அவர் கூறியது போலவே இந்திரன் முனிவரின் வேடம் தரித்து கர்ணனிடம் வந்து கவசத்தை தானமாக கேட்டார். வந்திருப்பது இந்திரன்தான் என்பதை அறிந்த போதிலும் கர்ணன் சற்றும் தயங்காமல் தன்னுடன் பிறந்த கவசத்தை அறுத்து இந்திரனுக்கு கொடையாக கொடுத்தார்.

இந்திரனின் வரம்

இந்திரனின் வரம்

தான் யார் என்பது தெரிந்தும் தன்னுடைய நோக்கம் என்ன என்பது தெரிந்தும் கர்ணன் கவசத்தை அறுத்து கொடுத்தது இந்திரனை மெய்சிலிர்க்க வைத்தது. எனவே தன் சுயரூபத்தை காட்டிய இந்திரன் கர்ணனுக்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு கர்ணன் அர்ஜுனனை காப்பாற்றத்தானே எனது கவசத்தை தந்திரமாக பறித்தீர்கள், எனவே அர்ஜுனனை கொல்லும் ஆயுதம் ஒன்று தாருங்கள் என்று கேட்டார்.

MOST READ: உங்க நட்சத்திரத்த மட்டும் சொல்லுங்க... உங்களுக்கு வளமான எதிர்காலம் எதுல இருக்குனு நாங்க சொல்றோம்...!

சக்தி ஆயுதம்

சக்தி ஆயுதம்

கர்ணன் கேட்டபடியே அவருக்கு சக்தி ஆயுதத்தை வழங்கினார் இந்திரன். ஆனால் அந்த ஆயுதத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், அதை பயன்படுத்தும்போது எதிரி எதிரில் இருக்க வேண்டும் என்றும் கூறினார். இந்திரன் வழங்கிய ஆயுதத்தை பெற்றுக்கொண்ட கர்ணன் அதனை அர்ஜுனனை கொள்வதற்காக பாதுகாத்து வைத்திருந்தான், ஆனால் பீமனின் மகன் கடோத்கஜனை கொல்ல அந்த சக்தி ஆயுதத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. கவசம் இருந்திருந்தாலோ அல்லது சக்தி ஆயுதம் கர்ணனிடம் இருந்திருந்தாலோ போரின் முடிவே மாறியிருக்கும். ஆனால் கிருஷ்ணரின் மாயங்களால் அனைத்தும் பாண்டவர்களுக்கு சாதகமாக நடந்துவிட்டது.

தேவரகசியம்

தேவரகசியம்

கர்ணனின் கவசத்தை இந்திரன் தந்திரமாக பறிக்க உண்மையான காரணம் அர்ஜுனனை காப்பாற்ற வேண்டும் என்பதல்ல. கர்ணனின் கவசமானது சூரியபகவானின் பரிசு அல்ல, அது சூரியபகவானின் உடலில் ஒரு அங்கமாகும். நடந்த குருஷேத்திர போரானது தர்மத்தை மனிதர்களுக்கு இடையே நடந்த போராகும். அதில் தேவர்கள் பங்கேற்கக்கூடாது. அதனால்தான் பகவான் கிருஷ்ணரும் ஆயுதமேந்தவில்லை, ஆஞ்சநேயரும் அர்ஜுனன் கொடியில் மட்டுமிருந்தார். ஒருவேளை கர்ணன் கவசத்துடன் போர் புரிந்தால் அது சூரியபகவான் போரில் கலந்து கொண்டது போலாகும். இதனால் போர் நியதிகள் மீறப்படுவதுடன் இது தர்மத்தை மீறும் செயலாகும். அதனால்தான் கர்ணனின் கவசம் பறிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

secret behind why Indra took Karna's armour

Check out the real reason behind why Indra took Karna's armour.
Story first published: Friday, March 29, 2019, 14:42 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more