Just In
- 36 min ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 13 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 15 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 15 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு பல 'தொடர்புகள்' இருக்குமாம் தெரியுமா?
மனித உடலானது பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை நாம் நன்கு அறிவோம். நமது உடல் அழியக்கூடியதாக இருந்தாலும் அது நமது குணம், பண்புகள் மற்றும் எதிர்காலம் பற்றி கூறக்கூடும். நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு அடையாளத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதனை புரிந்து கொண்டால் நம்மை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பிறப்பிலேயே இருக்கும் அடையாளங்கள் என்னும் போது அதில் மச்சங்கள் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. சாமுத்திரிகா சாஸ்திரத்தின் படி உடலில் பல்வேறு பாகங்களில் இருக்கும் சில மச்சங்கள் ஒருவர் மீண்டும் மீண்டும் காதலில் விழுவார்கள் என்பதற்கான அடையாளம் ஆகும்.

நெற்றி
நெற்றியின் வலது புறத்தில் நடுவில் மச்சம் இருப்பவர்கள் வசீகரமும், காதல் உணர்வும் அதிகம் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில மச்சம் இருப்பவர்கள் அடிக்கடி காதலில் விழுந்துகொண்டே இருப்பார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

கண்
ஒருவேளை வலது கண்ணிற்கு பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல தொடர்புகள் இருக்கும், அதேபோல இடது கண்ணிற்கு பக்கத்தில் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

காது
ஒருவேளை காதுக்கு அருகே அல்லது காதில் மச்சம் இருந்தால் அவர்களின் காதல் வாழ்க்கை மிகவும் சுறுசுறுப்பானதாக இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்கள் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

முகம்
ஒருவரின் முகத்தில் ஒரு மச்சத்திற்கு மேல் இருந்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும், அதேசமயம் இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை காதலில் விழுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும்.

தாடை
கன்னத்தில் மச்சம் இருப்பது மிகவும் அதிர்ஷ்டமானதாகும். ஏனெனில் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக நபர்களை கவர்வார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதுமே அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவராக இருப்பார்கள்.

கன்னம்
வலது கன்னத்தில் மச்சம் இருப்பவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவராக இருப்பார்கள் பொருளாதாரரீதியாகவும் இவர்கள் சிறப்பாகவே இருப்பார்கள். அதுவே இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

உதடுகள்
மேல் உதட்டில் மச்சம் இருப்பவர்கள் இயற்கையாகவே காதல் உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பல தொடர்புகள் இருக்கும். கீழ் உதட்டில் மச்சம் இருப்பவர்கள் அதிக வறுமையில் இருப்பார்கள். உங்கள் கைரேகை உங்கள் காதல் வாழ்க்கை பற்றி என்ன சொல்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

இதய கோடு
உங்கள் இதய கோடு உங்களின் உள்ளங்கையை நோக்கி நகர்ந்தால் நீங்கள் அதிக வசீகரம் மிக்கவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு புதிய நண்பர்களை உருவாக்கி கொள்வதில் அதிக விருப்பம் இருக்கும்.

ஆள்காட்டி விரல்
உங்களின் இதய கோடு ஆள்காட்டி விரல் நோக்கி சென்றால் உங்களின் வாழ்க்கைத்துணை உங்கள் மீது அளவற்ற அன்பை பொழிவார், நீங்கள் உங்கள் துணைக்கு மிகவும் நேர்மையாக இருப்பீர்கள்.

இரண்டு கோடுகள்
உங்கள் இதய கோட்டிற்கு குறுக்கே இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கோடுகள் குறுக்கிட்டால் உங்கள் காதல் வாழ்க்கையில் பல தடங்கல்கள் இருக்கும். உங்கள் காதல் சேருவதற்கு நீங்களும், உங்கள் துணையும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்பவுமே விளையாட்டுல கெத்து காட்டுவார்களாம் தெரியுமா?

சிறிய கோடு
உங்களின் இதயகோடு சிறியதாக இருந்தால் மற்றவர்கள் உங்களை நம்புவதற்கு அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். நீங்களும் மற்றவர்களை விரைவில் நம்பமாட்டீர்கள், காதலிலும் விரைவில் விழமாட்டிர்கள். மற்றவர்கள் உங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.