For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓம் ருத்ராய நமஹ மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும்? தினமும் சொன்னால் என்ன நடக்கும்?

|

சிவபெருமானுக்கான பல மந்திரங்களுள் 'ஓம் ருத்ராய நமஹா' என்ற மந்திரம் அதிகம் பரிச்சயமானது மட்டுமல்ல; அநேகர் உச்சரிக்க விரும்புவதும் கூட! பதினொரு மாதங்களுக்கு பொருந்தக்கூடிய சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தின் பதினொரு நிலைகைளை புகழ்வது ருத்ர மந்திரங்களாகும்.

Om Rudraya Namah Mantra

ஆகவே, உரியவிதத்தில் இவற்றை உச்சரிக்கும்போது பலன் பன்மடங்காகும். சமாதானம் பெற்றுக் கொள்ளவும் சிவபெருமானை மனங்குளிரப் பண்ணவும் இந்த மந்திரம் உதவி செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நமகமும் சமகமும்

நமகமும் சமகமும்

கிருஷ்ண பகவானின் யஜூர் வேதத்தில் தைத்ரிரீய சம்ஹிதாவின் நான்காவது மற்றும் ஏழாவது அத்தியாயங்களில் ஸ்ரீ ருத்ரம் காணப்படுகிறது. ருத்ரனிடம் செய்யும் இந்த பிரார்த்தனையில் நமஹா என்று முடியும் நமகம் மற்றும் சா மே என்று முடியும் சமகம் என்று இரு பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பதினொரு பிரிவுகள் உண்டு. இதை சத்த ருத்ரீயம் அல்லது ருத்ர பிரஸ்னம் என்றும் கூறுவர்.

MOST READ: பாலை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? எவ்வளவு நேரம் வைக்கலாம்? அந்த பால் குடிச்சா என்னாகும்?

ஆசிர்வாதம்

ஆசிர்வாதம்

சிவபெருமான் தம் பழி வாங்குதலுக்குரிய சீற்றம், பயங்கரமான தோற்றம் இவற்றை மறந்து சாந்தமான ரூபங்கொண்டு நமக்கு நன்மை செய்யும்படி வேண்டுவது நமகம் ஆகும். சமகம் என்பது அவர் தமது கோபத்தை மறந்த நிலையில் அவரிடம் ஏறெடுத்த பிரார்த்தனைகளுக்கு பதிலாக நமக்கு அருளிச்செய்த நன்மைகளை, ஆசீர்வாதங்களை பட்டியலிட்டு அந்த ஆசீர்வாதங்கள் நம் வாழ்வில் ஒழுங்குபடுத்துமாறு வேண்டுவது சாமக்கம் ஆகும். இதிலும் பதினொரு பிரிவுகள் உள்ளன.

பஞ்சாக்ஷரி

பஞ்சாக்ஷரி

தமது பயங்கரமான தோற்றத்தையும் பழிவாங்கும் கோபத்தை மறக்கும்படி ருத்ரனாகிய சிவபெருமானை வேண்டுவது நமகம். பிரார்த்தனையின் மூலம் நாம்பெறும் நிம்மதி மற்றும் ஆசீர்வாதங்கள் இதில் அடங்கியுள்ளன. பஞ்சாக்ஷரி மந்திரங்களில் மிகச் சிறப்பானதான கருதப்படுவது நமகமே ஆகும். இரண்டாவது அனுவாகா ஆகும். இதில் இயற்கை மருத்துவ மூலிகைகள் குறித்த இரண்டு சுக்தாக்கள் உள்ளன.

மந்திரத்தின் பொருள்

மந்திரத்தின் பொருள்

'ஓம் ருத்ரயா நமஹா' என்ற மந்திரத்தின் பொருள், 'தூயவனே உன்னை பணிகிறேன்' என்பதாகும். புகழப்படத்தக்க தெய்வத்தை பணிகிறேன் என்ற இப்பிரார்த்தனை வாழ்வில் சிறந்தவற்றை நம்மிடம் கொண்டு சேர்க்க மகிமை கொண்டதாகும். சிவ மந்திரத்தை உச்சரிக்கும்போது ஆன்மாவுக்கு நிம்மதி கிடைக்கும். இதை உச்சரிக்கும் ஆன்மா வலிமைபெற்று இறைவனின் நிழலடியில் கலந்திடும்.

MOST READ: பாலை தினமும் இப்படி குடித்து வந்தாலே பெருங்குடல் புற்றுநோய் வரவே வராது...

ருத்ரர்களின் தோற்றுவாய்

ருத்ரர்களின் தோற்றுவாய்

ஒருமுறை அசுரரர்கள், தேவர்களின் அரசனான இந்திரனையும் அவனது தேவசேனையையும் தோற்கடித்து நகரத்தை விட்டு விரட்டினர். பயமும் கலக்கமும் அடைந்த தேவர்கள் இந்திரனின் தந்தையான காஷ்ய மகரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றனர். மகரிஷியான காஷ்யர் தவம் புரிவதில் வல்லவர். அவர், தாம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு தருவதாக தேவர்களுக்கு தைரியம் கூறினார்.

காஷ்ய மகரிஷி வானவரான சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். அவரின் தவத்தை பார்த்த சிவபெருமான் இறங்கி வந்தார். என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். காஷ்யர், சிவபெருமானே தனக்கு மகனாக வந்து பிறந்து, தேவர்களுக்கு நீதி செய்யவேண்டும் என்றும் அவர்களது நகரத்திற்கு பாதுகாவல் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். "அப்படியே ஆகட்டும்" என்று சிவபெருமான் அருளினார்.

பதினொரு ருத்ரர்கள்

பதினொரு ருத்ரர்கள்

காஷ்யரின் மனைவி சுரபி கருத்தரித்து 11 ஆண் மகவுகளை பெற்றெடுத்தாள். சிவபெருமானின் வடிவாகிய அவர்கள் பதினொருவரும் ருத்ரர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களது பிறப்பால் காஷ்ய முனிவரும் அவர்தம் மனைவியும் மாத்திரமல்ல, தேவர்களும் அகில உலகமுமே மகிழ்ந்தது என்று சிவபுராணம் கூறுகிறது.

மத்ஸ்ய புராணம் காஷ்ய ரிஷியின் குமாரர் பெயர்களை நிர்ரிடி, சம்பு, அபராஜிதா, மிரிகௌயதா, கபார்தி, தாஹானா, காரா, அஹிராபிரத்யா, கபாலி, பிங்கலா மற்றும் செனானி என்று கூறுகிறது.

விஷ்ணு புராணம்

விஷ்ணு புராணம்

விஷ்ணு புராணம், ருத்ரர்கள் சிவனோடு அல்லது முக்கடவுளர்களில் இன்னொருவரான பிரம்மாவுடன் தொடர்புடையவர்கள் என்றும் மன்யு, மனு, மஹ்மாஸா, மஹான், சிவா, டுவ்வஜா, உகாரேட்ஸ், பவா, காமா, வாமதேவா மற்றும் துருத்ரதா என்பவர்கள் பிரம்மனின் கோபத்தில் இருந்து பிறந்தவர்கள் என்றும் கூறுகிறது.

MOST READ: உங்க முடியும் இப்படி ஆகணுமா? இந்த ஒரு பொருளை முட்டையில கலந்து தேய்ங்க போதும்...

ஓம் ருத்ராய நமஹா என்பதன் முக்கியத்துவம்

ஓம் ருத்ராய நமஹா என்பதன் முக்கியத்துவம்

இம்மந்திரத்தை உச்சரிப்பதன் பலன் நம் முழுவாழ்விலும் எதிரொலிக்கும். போராட்டமில்லாமல் நிம்மதியாக வாழ வழிவகுக்கும். ருத்ரரிடம் செய்யும் பிரார்த்தனையாக இதை உச்சரித்தாலோ, வாசித்தாலோ மட்டுமே முழு பலன் கிடைக்கும். பதினொரு லகு ருத்ரங்கள் சேர்ந்து ஒரு மகா ருத்ரமாகும்.

பொருத்தமான மாதத்தில் இவற்றை உச்சரித்தால் பன்மடங்கு பலன் உண்டாகும். கூடுதலாக, பக்தர்கள் சிவ திருநாள்கள் மற்றும் யக்ஞங்களின்போது இவற்றை அனுசரிப்பர். இதை உச்சரிப்பதன் மூலம் கடந்த கால பாவங்கள் மற்றும் குற்றங்களிலிருந்து சிவபெருமானிடம் மன்னிப்பை பெற்றுக்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Om Rudraya Namah Mantra - Origin, Values and Significance In Life

Om Rudraya Namah’ is one of the most familiar mantras that many loves to chant. Moreover, the Rudra Mantras is mainly a tribute to Lord Shiva in eleven different Rudra forms, which corresponds to a specific month. Hence, the effects are multiplied when we chant them accordingly.
Story first published: Friday, June 7, 2019, 12:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more