For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பேரோட நியூமராலஜி எண் 1 ஆக இருந்தா இந்த ஆண்டு உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்? வாங்க தெரிஞ்சிக்கல

|

நியூமராலஜி என்பது ஒரு எண் ஜோதிட முறையாகும். இந்த எண் ஜோதிடத்தில் 1-9 வரையிலான எண்களையும் 11, 22 போன்ற தனித்துவமான எண்களையும் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் எண்களும் எழுத்துக்களும் மனிதனின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தக் கூடியது.

எனவே இந்த எண் கணித ஜோதிடம் ஒருவரின் ஆற்றல், திறன், ஆளுமை என்று வாழ்க்கைக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் இது கொடுக்கிறது.

Number 1

அதில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒருவித மதிப்பும் செயல்களும் குணங்களும் உண்டு. அவை நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் பிரதிபலிக்கும். அதனால் தான் ஒருவருக்குப் பெயர் வைக்கும் முன்பு அவ்வளவு யோசிக்கிறார்கள் பெரியவர்கள். நிச்சயம் உங்களுடைய பெயருக்கு என்ன எண் வருகிறது, அது எப்படி வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கும் என்பது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நியூமராலஜி

நியூமராலஜி

நமக்கு எத்தனை யோகங்கள் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் அதை மாற்றி அமைக்க இந்த எண் கணித முறையால் முடியும். அதனால் தான் செல்வந்தர்கள், செலிபிரிட்டிகள் தங்கள் பேர்களை நியூமராலஜி முறைப்படி மாத்தி வைத்துக் கொள்கின்றனர். இப்படி அவர்கள் வைக்கும் போது அவர்களின் கலைத்துறையில் அவர்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது என்கின்றனர். அந்த வகையில் பெயரின் எண் 1 ஆக அமைந்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கே பார்க்க போகிறோம்.

MOST READ: நைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க... ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்

எண் 1

எண் 1

நம்பர் 1 என்பது எல்லாருக்கும் பிடிக்க கூடிய ஒன்று. ஏனெனில் எண்களில் முதன்மையானது. எண் 1 என்பது சூரியனை குறிக்க கூடியது. பெயரின் கூட்டுத்தொகை நம்பர் 1 வரும் மாதிரி அமைத்தால் அவர்கள் உறுதியான ஆளாக இருப்பார்கள். நம்பர் 1 குறிக்கோளை அடையும் பெருமையை கொடுக்கும். உங்களுடைய குறிக்கோளை சரியான திசையில் சென்று அடைய வழிவகுக்கும். எவ்வளவு தடைகள் வந்தாலும் உங்களை வெற்றி பாதையில் இழுத்துச் செல்லும்.

நம்பர் 1 ன் குணாதிசயங்கள்

நம்பர் 1 ன் குணாதிசயங்கள்

நீங்கள் தைரியமான, விசுவாசமான, நம்பகத்தன்மை வாய்ந்த நபராக இருப்பீர்கள். உங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறதல்லாம் ரஸ்க் சாப்பிட மாதிரி. அதிலும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய பயப்படமாட்டீர்கள். நீங்கள் எப்பொழுதும் உறுதியாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்வீர்கள். தலைமைபொறுப்பு உங்களுக்கு ஏதுவாக இருக்கும். தலைமைபொறுப்பில் நிறைய பொறுப்புகளை எடுத்து சிறப்பாக செயல்படக் கூடிய நபர்கள் நீங்கள். உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் மீது அன்பாக இருப்பீர்கள். வேலைகளில் தனிப்பட்ட திறனை விரும்புவீர்கள். ஒரு வேலையை நன்றாக செய்வதோடு அதில் வெற்றியும் காண்பீர்கள்.

உங்களுக்கு ஏதுவான பணிகள் இதோ

உங்களுக்கு ஏதுவான பணிகள் இதோ

தொழிலதிபர் அல்லது வணிக உரிமையாளர்

மத்திய அல்லது உயர் மட்ட நிர்வாகி பொறுப்பு

ராணுவம்

அரசியல்வாதி

கட்டடக்கலை அல்லது இஞ்சினியர்

நம்பர் 1 உறவு நிலை

நம்பர் 1 உறவு நிலை

நீங்கள் உறவு நிலையில் வெட்கப்பட மாட்டீர்கள். சிலர் உங்கள் இயல்பை மாற்ற முயற்சி செய்வார்கள். ஆனால் நீங்கள் இருப்பது நியாயமானதாக இருப்பதால் இறுதியில் அவர்கள் உங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள். சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக்காதீர்கள். நேர்மறை எதிர்மறை எண்ணங்களை சமநிலையில் வைத்துக் கொள்ளுங்கள். பாரபட்சம் காட்டும் பழக்கம் உங்களிடம் கிடையாது. எதையும் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளவோ தள்ளவோ மாட்டீர்கள்.

உங்களுடைய நம்பிக்கை, சொந்த முடிவு இவற்றின் மீது வலிமையான நம்பிக்கை கொண்டு இருப்பீர்கள். மோதலைக் கண்டு பயப்படுவீர்கள். யாரோ உங்களின் பேச்சுக்கு உடன்படவில்லை என்றாலும் வாதத்தை இழந்தாலும் கூட அவர்களின் மேல் உங்களுக்கு மரியாதை இருக்கும். ஏனெனில் உங்களுடன் நின்று அவர்கள் போராட நினைத்ததை நினைத்து பெருமைப்படுவீர்கள்.

MOST READ: எந்த திசையில இருக்கிற கோவிலுக்கு போனா புண்ணியம் கிடைக்கும்னு அக்னி புராணம் சொல்லுது

சவால்கள்

சவால்கள்

எல்லா நேரங்களிலும் உங்களிடம் ஆற்றல் இருக்காது. ஆனால் உங்களுடைய நேர்மறையான ஆற்றல் எதிர்மறை குணம் கொண்ட நபர்களை வெளியே தள்ளி விட்டுடம். அதனால் தான் உறவில் கோபம் உண்டாகிறது. இருப்பினும் அவர்களுக்கு உங்கள் உறவு நினைத்து கவலை இருக்கும். உங்களுக்கு வெறுப்பூட்டும் செயல்களை செய்வார்கள். அவர்களால் உங்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் உங்களின் காதல் மற்றும் ஆற்றலை புகழ்வார்கள்.

உங்களிடம் ஒரு திமிருத்தனம் இருக்கும். தலைமைத்துவத்திற்கு மிகவும் நுட்பமான விஷயங்களை சொல்லக் கூடியவர்கள். மற்றவர்களுடன் சேர்ந்து முடிவெடுப்பதில் விருப்பமுள்ளவராகஙும், திட்டங்களை முன்னால் வகுத்து செல்பவராகவும் இருப்பார்கள். உங்களுடைய வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை கவனியுங்கள்.

வாழ்க்கை

வாழ்க்கை

உறுதி, சுதந்திரம் என்பது உங்களுடைய தாரக மந்திரம். நீங்கள் உண்மையாக, படைப்பாற்றல் திறன் கொண்டு அதே நேரத்தில் பொறுமையற்றவராக இருப்பது உங்களுக்கு வீழ்ச்சி என்றே கூறலாம். உங்கள் வாழ்வில் மற்றவர்கள் இருப்பதையும் உணர்ந்து அவர்களின் தேவைகளுக்கும் இடமளிக்க வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளை எப்படி அணுக வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். இயற்கையாகவே தலைமைப் பண்பு உங்கள் கூடவே பிறந்தது. அதனால் தான் மக்கள் உங்களை உற்சாகப்படுத்தி தலைமை பொறுப்பை உங்களிடம் கொடுக்கிறார்கள்.

MOST READ: இந்த 3 ராசிககாரங்களும் வாய தொறந்தாலே அது கலவரத்துல தான் போய் முடியுமாம்...

கடந்த காலம்

கடந்த காலம்

கடந்த கால வாழ்க்கையில் உங்களுக்காக எதையும் செய்திருக்க மாட்டீர்கள். மற்றவர்களுக்காக வாழ்வீர்கள். உங்களுடைய பயணம், உங்களுடைய நோக்கம் எல்லாவற்றையும் இழந்து மன அமைதிக்கு ஆம் போட்டு இருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் இதைச் செய்து வந்தீர்கள். ஆனால் தற்போது நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள் எனவே உங்களைப் பற்றி சிந்தியுங்கள்.சுயமாக இருப்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

மனதிற்கு பிடித்த எண்

மனதிற்கு பிடித்த எண்

சுதந்திரம், விருப்பம் ஆகியவற்றையை குறிக்கிறது. உங்களுடைய சொந்த விதிமுறைகளைக் கொண்டே வாழ்வீர்கள். எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்ய வில்லை என்று யாரிடமும் நீங்கள் சொல்லமாட்டீர்கள். எப்பொழுதும் போட்டியிட்டு தலைவராக இருப்பதே உங்கள் விருப்பம். அதற்கு ஏற்றவர்களும் நீங்களே. சாகசங்கள் இயற்கை ஆர்வம் இருக்கும். உங்கள் உறுதி, ஒட்டுமொத்த ஆற்றல் உங்கள் வழியை நிர்ணயிக்கும்.

ஆளுமை திறன்

ஆளுமை திறன்

நீங்கள் திறந்த, நட்பான, வெளிப்படையான மனிதராக இருப்பீர்கள். அதே நேரத்தில் சூடான குணமுடையவர்களும் நீங்களே. நீங்கள் அப்பட்டமாகவும், வலுவாகவும் இருப்பீர்கள். நீங்கள் நினைப்பதை மற்றவர்களுக்கு கொஞ்சம் சொல்ல வேண்டும். நிறைய மக்களுக்கு நீங்கள் தலைக்கணம் பிடித்தவராக தெரியலாம். அவர்களின் எண்ணம் உங்களை ஒரு போதும் பாதிக்காது.

மறைந்துள்ள குணங்கள்

மறைந்துள்ள குணங்கள்

உங்கள் திறமைகளை, உணர்வுகளை ரெம்ப நாளைக்கு மறைக்க இயலாது. நீங்கள் இயற்கையாகவே ஒரு தலைவர், எனவே முன்னோக்கி வருவதை பற்றி தயங்காதீர்கள். கூட்டத்தில் இருந்தால் கூட தனியாக பார்க்க பட வேண்டிய நபர்கள் நீங்கள். ஈஸியாக நடுவே நின்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்து விடுவீர்கள். நேர்மையான மனிதர். மற்றவர்கள் உங்களை எப்படிக் கவர்ந்திழுக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் இலக்குகளை அடைய உங்களுக்கு உதவியாக இருக்கும்.

MOST READ: இந்த 5 ராசி பெண்களை திருமணம் பண்றவன் தான் உலகத்துலயே பெரிய அதிர்ஷ்டசாலியாம்...

புது வருடம்

புது வருடம்

புதுமையை தொடங்க இதுவே சிறந்த வருடம். உங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கவும், உங்கள் இலக்குகளை அடையவும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரவும் இந்த மாற்றம் தேவை. இதுவரை இருந்த உங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டுமா? உங்கள் இலக்கை நோக்கி உங்கள் வாழ்க்கையை திசை திருப்ப வேண்டுமா? அப்போ வெற்றிக்கான அடித்தளமாக இந்த ஆண்டை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் கையில் உள்ளது உங்கள் அதிர்ஷ்டம். நியூமராலஜி அதற்கான சிறப்பை தருகிறது. வெறும் எண்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற போகிறது. பிறக்கட்டும் புது வாழ்வு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life வாழ்க்கை
English summary

Number 1 Numerology Personality, Characteristics and Traits

Numerology is the universal language of numbers, and each of us was born with a set of numbers unique to us. These numbers unlock the door to the depths of our personality and reveal the way we interact with others, lessons we've yet to learn, opportunities we'll be given and challenges we'll face at specific periods of our lives
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more